ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அரபுக் கல்லூரிகளில் அகீதா

அல்ஹாஜ் . மெளலவி பி . எம் . ஜியாவுதீன் பாகவி ஹள்ரத் 
முதல்வர் , ஸுபுலுஸ்ஸலாம் அரபிக் கல்லூரி , அய்யம்பேட்டை .

       

அல்லாஹ்வின் அருளால் ­ ஷவ்வால் மாத பின் பகுதியில் அநேகமாக நாடெங்குமுள்ள அனைத்து அரபிக்கல்லூரிகளும் , மதரஸாக்களும் செயல்படத் தொடங்கும் . மிக மிக பலவீனமான நிலையில் மாணவர் வரத்துக் குறைந்து, நடத்தலாமா வேண்டாமா எனத் தள்ளாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அவை சிறப்பாகவும் நிலையானதாகவும் நடைபெற துஆச் செய்வோம் . நம்மால் முடிகிற வரை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மார்க்கக் கல்வியில் ஈடுபாடு கொள்வதற்கு முயல்வோம் .


இந்த நல்ல நேரத்தில் மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியமாகும் . எல்லா மதுரஸாக்களிலும் முதல் வகுப்பிலிருந்து இறுதியாண்டு வரை பல்வேறு சப்ஜெக்ட்களில் நூல்கள் கற்பிக்கப்படுவது நாம் அறிந்ததேஇதில் நடைபெறுகின்ற பாடங்களை முழுமையாக முடிக்க வேண்டுமென்பதற்காக “கத்ருஸபக்” என்கிற பாட நிர்ணய அளவை ஏற்படுத்தி, அரையாண்டுத் தேர்வு வரை இத்தனை பக்கங்கள் நடத்தியிருக்க வேண்டும், அடுத்து முழு ஆண்டுத் தேர்வுக்குள் இந்தளவு முடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை வைத்து நடத்தப்படுகிறது . இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கது தான் . கால நேரம் விரயமாகாமல் மாணவர்களுக்கு உரிய முறையில் பாடங்களைச் சொல்லித் தருவதற்கு வழிவகுக்கும் .

மற்றொரு புறம் மாணவர்கள் நல்ல திறமையுடன் வெளிவர வேண்டுமென்பதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாள்வதும் நல்ல விஷயம்தான் .

அதே சமயம் எல்லா மதுரஸாக்களிலும் இந்தக் கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அகீதா இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை சம்மந்தப்பட்ட பாடங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் . மதுரஸாக்களில் அஹ்லுஸ்ஸுன்னா - க்களின் அகீதா நூல்கள் சில போதிக்கப்படுகின்றன. பத்வுல் அமாலீரஹுபிக்ஹுல் அக்பர், அகாயிதுன் நஸஃபீ போன்ற நூல்கள் பாடத்திட்டத்தில் உள்ளன . இவை நாலோடு ஐந்தாக மற்ற பாடங்களில் இதுவும் ஒன்று என்கிற முறையில் தான் நடைபெறுகின்றன . இதனால் மாணவர்கள் இவற்றின் முக்கியத்துவத்தை உணருவதற்கு முன்பே ஸனது பெற்று வெளிவந்து விடுகின்றனர் .

சமீபத்தில் கும்பகோணத்தில் ஜமாத்தே இஸ்லாமீ அமைப்பு சார்பில் சுற்று வட்டார உலமாக்களை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தினார்கள் . இதற்கான ஏற்பாடுகளை அந்த ஏரியாவிலுள்ள ஜமாத்தே இஸ்லாமீ அமைப்பின் பிரதிநிதிகள் பெரும் முயற்சி செய்து நேரடியாகவே அனைத்து மஹல்லா இமாம்கள் , மற்றும் உஸ்தாதுகளை சந்தித்து அழைப்புக் கொடுத்தனர் . இதனால் பெருவாரியான உலமாக்கள் இதில் பங்கேற்றனர் .இந்தச் சந்திப்பின் நோக்கம்
, உலமாக்களுக்கும் ஜமாத்தே இஸ்லாமிக்குமிடையே உள்ள இடைவெளியைக் குறைத்துஇருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு இணைந்து செயல்படுவோம் என்றனர்
இதில் உரையாற்றிய ஜமாத்தின் செயல்வீரர்கள் மிகவும் தந்திரமாக - பசப்பு வார்த்தைகளின் மூலம் தங்களின் கொள்கைகளைப் பேசினர் . அதில் அவ்லியாக்கள் , மத்ஹபுகள் , இமாம்கள் , சம்பந்தமான பேச்சு வரும்போது நாங்களும் மதுஹபுவாதிகள்தாம்,     (எந்த மத்ஹபு எனக் குறிப்பிடவில்லை ) நாங்களும் இமாம்களையும் , இறைநேசர்களையும் மதிக்கிறோம். அவர்கள் ஒரு காலத்தில் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தவர்கள் என்பதை மறுக்கவில்லை என பொத்தாம் பொது முலாம் பூசினார்கள் .


துரதிருஷ்டவசமாக அதில் கலந்து கொண்ட உலமாக்களில் எவருமே அகீதா விஷயத்தை சற்று ஆழமாக அவர்களிடம் கேட்கவில்லை . அவ்லியாக்களை மதிக்கிறோம் என்றால் அவர்களின் கராமத்துகளை நம்பவேண்டுமென­ ரஹுபிக்ஹுல் அக்பரில் உள்ளது, அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?  நபிமார்கள் , வலிமார்களிடம் வஸீலா தேடுவது பற்றி என்ன சொல்கிறீர்கள் ? அவர்களைப் பற்றி உங்கள் கொள்கை என்ன ? பிரபல நான்கு மத்ஹபுகளின் பிக்ஹு சட்டங்களை ஏற்று அதன்படி நடப்பீர்களா ? என யாராவது சற்று விரிவாகக் கேட்டிருந்தால் அவர்களது மற்றொரு முகம் தெரிந்திருக்கும்இதற்குக் காரணம் மத்ரஸாக்களில் அகீதாவுக்காக சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதில்லை . குறைந்த பட்சம் ஹதீஸ்களில் வரக்கூடிய 72 கூட்டங்களின் பெயர்கள், அவற்றின் கொள்கைகள் கூட நினைவில் இருப்பதில்லை . இதன் மூலம் மதுரஸாக்களை குறை சொல்வது நோக்கமல்ல. மாறாக ஓதிமுடித்து வெளிவரக்கூடிய ஆலிம்களை அகீதா விஷயத்தில் இன்னும் கொஞ்சம் மெரு கூட்டினால் மற்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்இன்னபிற கொள்கைகளுக்கு எளிதில் அடிமையாகாமல் இருக்கவும் முடியும் .


எனவே இந்தக் கல்வியாண்டிலிருந்து பாடத்திட்டதின் ஒரு பகுதியாக விரிவான அகீதா விஷ
யத்தைச் செயல்படுத்திட வேண்டும். இதற்காக குறிப்பிட்ட உஸ்தாதுகளுக்கு வழமையான பாடங்களைக் குறைத்து அகீதாவுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கலாம் . இதனை தினமும் ஒரு பீரியட் எனும் முறையிலும் வைக்கலாம் அல்லது வாரத்தில் ஒரு நாளை இதற்காக ஒதுக்கி விடலாம்.இது தவிர வெளியிலுள்ள உஸ்தாதுகளை அழைத்து மாதம் ஒரு முறையாவது கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம். வகுப்பு நடத்தக் கூடிய ஆசிரியர்களுக்கு இது பற்றிய ஆர்வமும் , ஆசையும் இருந்தாலும் இதில் போதிய கவனம் செலுத்துவதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. ( பாடஅளவு )  நிர்ணயத்தின் அழுத்தம் காரணமாக வேறு எதிலும் ஈடுபட முடியாத நிர்பந்தம். இந்த நிலையை சற்றே தளர்த்தி அகீதா வி­ஷயத்தில் பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும் . இதற்கான வகுப்பு நேரங்களை ஆன்மீகப் பயிற்சிக்கான தவச்சாலைகளைப் போன்று அமைத்து பயிற்றுவித்தால் மிகவும் பலனளிக்கும். அல்லாஹ்வே மிக்க அறிந்தவன் .