ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மலேஷியா - கோலாலம்பூரில்

இறையருட்பா குறுந்தகடு வெளியீடு !

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அலுவலகக் கட்டடம் திறப்புவிழா !


குத்புஸ்ஸமான் ஸம்ஸுல் உஜூத் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களுக்கு ஹக்கின் புறத்திலிருந்து உதிப்பான வாரிதாத்து இறையருட்பாக்கள் குறுந்தகடு 30.8.2014 சனிக்கிழமை அன்று மலேஷியா கோலாலம்பூர் கோல்ப் கன்ட்றி ரிசோர்ட் ஹாலில் வெளியிடப்பட்டது .


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மலேஷியத் தலைவர் டத்தோ முஹம்மது சாதிக் அவர்களின் முயற்சியிலும் பொருளாக்கத்திலும் தமிழகத்தின் பிரபல திரைப்படப் பாடகர்கள் S.P.பாலசுப்ரமணியம், மனோ, உன்னிமேனன் மற்றும் பாடகர்கள் பாடிய குறுந்தகட்டின் முதல் பிரதிகளை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வெளியிட்டார்கள். இந்த வண்ணமிகு விழா மாலை 6.30 மணியிலிருந்து இரவு 10.30 வரை நடைபெற்றதுவாப்பா நாயகம் அவர்கள் அரங்கிற்குள் நுழையும் போது அவர்களை வரவேற்கும் முகமாக “தல அல் பத்ரு அலைனா” பைத்து பாடப்பட்டது . சிங்கப்பூர் அப்துல் சுபஹான் ஹக்கிய்யுல் காதிரிய் நிகழ்ச்சிகளை உற்சாகமாகவும் கண்ணியமாகவும் தொகுத்து வழங்கினார்.


இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்களும் துபையிலிருந்து வருகை புரிந்த தாவூத் அவர்களும் பாடல்களை இசைத்தனர்
. ஆலிம்புலவர் S. ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ கிராஅத் ஓத அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பை சிங்கப்பூர் ஜைன்அலி ஹக்கிய்யுல் காதிரிய் வாசிக்க, குவைத்திலிருந்து வருகை தந்த பாகவி அப்துல் ஹமீத் அவர்களும் மதுக்கூர் தாவூத் அவர்களும் வஹுதத்துல் வுஜூத் அறபு பைத்தை அழகாக இசைத்தனர். பின்னர் மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் நபி புகழ்ப்பா இசைத்தார் .


டத்தோ முஹம்மது சாதிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பின் சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைத்தலைவர் நிஜாமுத்தீன் விழா அறிமுக உரையினை தெளிவாக நிகழ்த்தி விழாவிற்கு வந்திருந்தோரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் CDயில் அமைந்துள்ள 9 பாடல்களும் ஒலிக்கப்படுவதற்கு முன் அந்தப்பாடலின் உயிரோட்டமான கருத்துகளை விளக்கப்படுத்தும் வண்ணம் கலீபா ஆலிம் புலவர், துபை கலீபா ஏ.பி.சகாபுத்தீன் B.E.,M.B.A., பாக்கவி அப்துல் ஹமீத் அகியோர் தலா மூன்று பாடல்களுக்கு அழகிய விளக்கம் அளித்தனர். இரண்டு பாடல்கள் இசைக்கப்பட்ட பின் விழாவின் முக்கிய நிகழ்வான CD வெளியீடு நடைபெற்றது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் கோள வடிவத்தில் அமைந்த கண்ணாடிப் பந்தில் திருக்கரத்தைப் பதிக்க உடனே வண்ண லேசர் விளக்குகள் எழுத்துக்களோடு மேடையின் அரங்கில் பிரதிபலிக்க வெடிச்சத்தத்துடன் வண்ணக்காகிதங்கள் பறக்க புதுமையான இந்த நிகழ்ச்சியினை அனைவரும் வியப்போடு ரசித்தனர்.  பின்னர் குறுந்தகடு வெளியிடப்பட்டது. முதல் பிரதிகளை சிங்கப்பூர் பொறியாளர் நிஜாமுத்தீன் பி. ஹக்கிய்யுல் காதிரிய், தியாகி முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரிய், பொறியாளர் ஹைதர் நிஜாம் பி.. ஹக்கிய்யுல் காதிரிய், மலேஷியா ஹுமாயூன் கபீர் ஹக்கிய்யுல் காதிரிய், மலேஷிய சபை செயலாளர் அஷ்ரப் அலி ஹக்கிய்யுல் காதிரிய், சிங்கப்பூர் அஹ்மது கபீர் ஹக்கிய்யுல் காதிரிய், கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் , கலீபா ஆலிம் புலவர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ஒன்பது பாடல்களும் ஒலிக்கும் வரை அரங்கிலிருந்து அனைத்தையும் கேட்டு கண்டு களித்தார்கள்
. இடையே 8 மணியளவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பஃபே உணவு வழங்கப்பட்டது. விழாவை நிறைவு படுத்தும் வகையில் நன்றி உரையினை மலேஷிய சபை செயலாளர் அஷ்ரஃப் அலி ஹக்கிய்யுல் காதிரிய் நிகழ்த்தினார். சிங்கப்பூர் அப்துல் சுபஹான் அவர்களின் இனிய தொகுப்புரையுடன் ஸலவாத்து ஒலிக்க விழா இனிதே நிறைவு பெற்றது .


இவ்விழாவில் மலேசியா, சிங்கப்பூர் முரீதுகளும் இந்தியாவிலிருந்து தியாகி முஹம்மது ராவுத்தர் - கலீபா முஹம்மது முஸ்தபா - ஆலிம் புலவர், சென்னை ஹைதர் நிஜாம் BE, ஜமால்முஹம்மதுபொறியாளர் ஆரிப் (ஈரோடு) துபையிலிருந்து கலீபா ஏ.பிசஹாபுத்தீன் BE., MBA., முஹம்மது தாவூது , அப்பாஸ் சாஜஹான் , குவைத்திலிருந்து பாகவி அப்துல் ஹமீது மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் முரீதுகள் திரளாக கலந்துகொண்டனர் .


முன்னதாக காலை 9 மணியளவில் மலேஷிய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அலுவலகக் கட்டிடத்தை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திறந்து வைத்தார்கள். டத்தோ முஹம்மது சாதிக் அவர்கள் பல்லாயிரம் வாடகை தரும் தமது சொந்தக் கட்டடத்தை சபைக்கு அர்ப்பணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று தளங்களும் பல அறைகளும் அடங்கிய அவ்வில்லத்தில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் தங்குவதற்கும் முரீதுப்பிள்ளைகள் தங்குவதற்கும் சகல வசதிகளும் செய்திருந்தார். வாப்பா நாயகம் அவர்கள் விமான நிலையத்திலிருந்து இல்லம் வரும் வரை மலேஷிய அரசின் மெய்க்காப்பாளர்கள் புடை சூழ்ந்து வந்து கண்ணியப்படுத்தினர். விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக மலேஷியாவின் பிரபலமான நாளிதழில் ஒரு பக்கம் முழுதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை மலேஷியா - சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 ( செய்தி : அபூ பாஹிரா - திண்டுக்கல் )