ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் .... 

சங்கைமிகு வாப்பா நாயகமவர்களின 79 ஆவது உதய தின விழா
கந்தூரி விழா !சங்கைமிகு வாப்பா நாயகமவர்களின் 79 ஆவது உதயதின கந்தூரி விழா சென்ற 22.8.2014 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் சீரும் சிறப்புமாகத் தொடங்கி இரவு சுமார் 9.30 மணி வரை அலங்காரமாக நடைபெற்றது . மதுக்கூர் அட்வகேட் கலீபா A.N.M லியாகத் அலி B.Sc.,B.L அவர்களின் தாருல் ஹக்கிய்யா இல்ல வளாகத்தில் நடைபெற்ற இப்புனித விழாவில் சங்கைமிகு நாயகம் அவர்களின் கலீபாக்கள், முரீதுகள் , அஹ்பாபுகள் , உள்ளூ ர்ஜமாஅத் நிர்வாகிகள் , மதுக்கூர் சங்கங்களின் நிர்வாகிகள் , பேராவூரணி , மன்னார்குடி , அதிரை போன்ற ஊர்களிலிருந்து நமது சபை முன்னோடிகள் எனப் பலரும் உற்சாகத்தோடு இவ்வினிய விழாவில் பங்கேற்றனர் .


திருச்சி கிப்லா ஹள்ரத் தமிழ் மாமணி மெளலவி N. அப்துஸ் ஸலாம்ஆலிம் B.Com.,H.Q. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார் .


மன்னார்குடி ஆத்தும சகோதரர் குத்புத்தீன் H.Q. கிராஅத் ஓதினார் . கலீபா முஸ்தபா ஏகாந்தப் பாடல் பாடினார். மதுக்கூர் சலீம் மெளலானா நபிப்புகழ்பா இசைத்தார். மதுக்கூர் ஆத்துமசகோதரர்  ஜனாப் பக்கீர்முஹிய்யுத்தீன் வரவேற்புரையாற்றினார். 

இப்புனித விழாவில் கலீபா A.N.M. லியாகத் அலி B.Sc.,B.L., கலீபா காலித்ஷா ஆகியோரும் மதுக்கூர் ஜமாஅத் தலைவர் முஹிய்யுத்தீன் மரைக்காயரும் சிறப்புரையாற்றினர் !கிப்லா ஹள்ரத் தமது சிறப்புரையில் .....


முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வல்லதீன மஅஹூ அஷித்தாஉ அலல் குஃப்ஃபாரி ருஹமாஉ பைனஹும் தராஹும் ருக்கஅன் ஸுஜ்ஜதன் யப்தகூன பளுலன் மினல்லாஹி வரிளுவானா .... அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின் அதத மாஃபீ இல்மில்லாஹி ஸலாதன் தாயிமதன் பிதவாமி முல்கில்லாஹ் ... என்னும் அற்புதமான புதையலை சங்கைமிகு நாயகமவர்கள் எனக்கு 1992 ஆம் ஆண்டு அருளி இதனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள் ... இன்னும் இதில் கூறப்பட்டுள்ள ஸலவாத்தை பொது மக்களுக்கு மத்தியில் பரப்புங்கள் என அருளினார்கள் . அப்பணியை இறையருளால் செய்து வருகிறேன் !


சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் திருச்சிக்கு சங்கைமிகு நாயகமவர்கள் விஜயம் செய்தருளிய போது , மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது ! அக்கூட்டத்தில் நாயகம் அன்னவர்களின் திருச ன்னதியில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன் . வழக்கம் போல் உரையின் தொடக்கத்தில் முஹம்மதுர் ரசூலுள்ளாஹ் .. எனத் தொடங்கி ஓதி விட்டு சில மணித்துளிகள் பேசி முடித்தேன் . மற்றும் சிலர் உரையாற்றியதும் சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் அருளுரை வழங்கினார்கள் !


அதில் - பிள்ளைஅப்துஸ்ஸலாம் முஹம்மதுர் ரசூலுள்ளாஹ் எனத் தொடங்கும் வசனத்தையும் அதத மாபி இல்மிலியா என்னும் ஸலவாத்தையும் ஓதித் தொட்ங்கினார் . இத்திருவசனத்தில் ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியமும் - சிறப்பும் - மேன்மையும் அன்னவர்களின் திருத்தோழர்களின் உயர்வும் கூறப்படடிருக்கின்றன !முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்
. அவர்களுடனிருக்கும் தோழர்கள் எதிரிகளுடன் கடுமையானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் அன்புடையோர்களாகவும் இருக்கிறார்கள் .... எனக் கூறப்படுகின்றது ! மேலும் பணிந்தவர்களாக - அடிபணிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது ! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மத்தியில் ஸஹாபாக்கள் எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே ஒரு ஷைகுக்கு முன்னால் முரீதுகள் பணிவாக இருக்க வேண்டும் என விரிவாகக் கூறினார்கள் .

சங்கைமிகு நாயகமவர்களின் விளக்கவுரையிலிருந்து ... நமது வாப்பா நாயகம் அவர்கள் யார் ? என நாம் எளிதாக விளங்கிக் கொள்கிறோம் : ஆம் ! அவர்கள் தாம் காலத்தின் ரசூலாக விளங்கிறார்கள் ! நபித்தோழர்களை வழிகாட்டும் நட்சத்திங்களாக உருவாக்கியது போல் நம்மை உண்மை மனிதர்களாகப் பக்குவப்படுத்துகிறார்கள் ! பண்படுத்துகிறார்கள் !

சங்கைமிகு வாப்பா நாயகமவர்களிடம் நாம் பைஅத் பெறுவதற்கு முன் நமது நிலை என்ன ? இன்று நமது நிலை என்ன ? என்று நாம் சிந்தித்துப் பார்த்தாலே - நமது நாயகம் நம்மை எவ்வாறு நன்கு செதுக்கி - சீர்படுத்தி வருகிறார்கள் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளலாம் !


ஒரு ஷைகு இதற்குத் தான் வேண்டும் !

நமது வாப்பா நாயகம் அவர்கள் , அல்லாஹ் என்றால் யார் ? என்று கற்றுத் தருகிறார்கள் அல்லாஹ் எங்கு இருக்கிறான் என்று கற்றுத் தருகிறார்கள் !அல்லாஹ்வை எப்படிப் பரிசுத்தமாக பரிபூரணமாக வணங்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஷிர்கு என்னும் இணைவைத்தலிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார்கள் . இவற்றிற்காக நாம் எவ்வளவு நன்றி செலுத்தினால் அது ஒருக்காலும் ஒரு போதும் அன்னவர்களின் சேவைக்கு ஈடாகாது ! இணையாகாது ! இப்புனித விழாவின் மூலம் நாம் நமது நன்றியை நமது நாயகருக்கு அர்ப்பணிக்கின்றோம் . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல் , நாம் பெற்ற ஞான போதம் நமது பிள்ளைகள் சந்ததிகள் அனைவரும் பெற்றுத் திகழ சங்கைமிகு நாயகமவர்கள் இன்னும் பல்லாண்டு வாழப் பிரார்த்திப்போம் !( ஆமீன் )


கலீபா . காலித்ஷா HQ அவர்களின் உரையிலிருந்து ......

அவ்லுத்தீனிமஃரிபதுல்லாஹ் ... அல்லாஹ்வை அறிவதுதான் மார்க்கத்தின் ஆரம்பம் . மார்க்கத்தைக் கற்றுத் தருபவர்கள் மகான்களே !


ஆலிம்கள் ஷரீஅத்தைக் கற்றுத் தருபவர்கள் !

இஸ்லாமிய மார்க்கம் என்பது நான்கு வழிச்சாலையின் சங்கமாகும் !


அஷ்ஷ ­ ரீஅத்துஅக்வாலீ 

அத்தரீகத்து அஃப்ஆலீ 
அல்மஃரிபது அஸ்ராரீ 
அல்ஹகீகது அஹ்வாலீ

என்பதாகக் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளுகிறார்கள் !  எனவே , கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிச் செல்ல நான்குவழிப் பாதையிலும் நாம் பயணிக்க வேண்டும் ! அப்போது தான் பூரணத்துவம் பெற முடியும் ! வெறும் ஷரீஅத்தில் மட்டும் நின்று கொண்டால் கிடைக்க வேண்டிய பரிபூரண இன்பம் கிடைக்காமற் போய் விடும் ! எனவே தான் பரிபூரணத்தையடைந்த மகான்கள் ஞானம் என்னும் நேர்வழியின் பால் நம்மையழைத்துச் செல்கிறார்கள் !


ஹக்கையறிந்தவர்களால் தாம் ஹக்கைக் காட்ட முடியும் ! இல்லையெனில் கண்ணில்லாதவர்கள் யானையைக் கண்டறிந்த கதை போல் ஹக்கையறிய முடியும் ! குத்புமார்கள் கண்கட்டி வித்தைக் காட்டுபவர்கள்அல்ல ! ஹக்கைக் காட்டுபவர்கள் ! அவ்வகையில் நமது அருமை ஷைகு நாயகமவர்கள், காலத்திற்கேற்றவாறு , மக்களின் எண்ண ஓட்டத்திற்கேற்றவாறு , அறிவு , வயது , அனுபவங்களுக்கேற்றவாறு ஒன்றென்னும் உண்மையை உலகிற்குப் பிரகடனப்படுத்துகிறார்கள் !


நபி வழி சென்று நானிலம் செழித்தது போல் நாம் , ஷைகு நாயகம் வழி சென்று ஞானப் பேரமுதைப் பெறுவோமாக ! ஆமீன் !மதுக்கூர் ஜமாஅத் ( பரிபாலனக்கமிட்டி ) தலைவர் முஹிய்யுத்தீன் மரைக்காயர் HQ அவர்களின் உரையிலிருந்து ...


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை என்பது இஸ்லாமிய ­ ஷரீஅத்திற்கு உட்பட்டு ஞான விளக்கங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் மகத்தான இயக்கம் ஆகும் . ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ( சிலர் தவறாக நினைப்பது போல் ) புதிய கொள்கைகளை மக்கள் முன் கொண்டு செல்லவில்லை . மார்க்கத்தில் கூறப்பட்ட மறைவான விஷயங்களை வெளிக் கொண்டு வருகின்றது ! இந்த மறைவான சேதிகளை வெளிப்படுத்துவதற்குத் தான் மகான்கள் தோன்றி வலம் வருகிறார்கள் ! அவ்வகையில் இந்த சபையைத் தோற்றுவித்தவர்கள் சாதாரண சாமான்யரல்ல ! அகிலங்களெல்லாம் அருட்கொடையான அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தேன்றியவர்கள் ! அருள் ஞானத் தேட்டங் கொண்டவர்களுக்கு அருண்மாரிப் பொழியக் கூடியவர்கள் ! இருள் உள்ளங்களுக்கு ஒளி விளக்கமாக விளங்கக் கூடியவர்கள் ! சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் சொல் , செயல் , நடை , உடை , பாவனை அனைத்தும் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களையே நம் கண் முன்னே நிறுத்துகின்றன .


சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் ஆரம்பக்காலத்தில் மதுக்கூருக்கு புனித விஜயம் செய்த போது ஒரு சிலர் மட்டுமே முரீதுகளாக , பக்தர்களாக இருந்தனர் . இன்று எழுச்சியூட்டக்கூடிய வகையில் ஒரு பெருங் கூட்டமே உருவாகியிருக்கின்றது .


மொத்தத்தில் பார்க்கும் போது ஒரு சிறிய கூட்டம் போன்று தெரியலாம் ! ஆனால் இதுதான் சத்தியக் கூட்டம் ! சத்தியத்தை எடுத்துக் கூறும் கூட்டம் !


சங்கைமிகு வாப்பா நாயகம் அல்லாஹ்வின் ஒரு பொக்கிஷமாவார்கள் ! அன்னவர்கள் பல்லாண்டு காலமாக நமது ஊருக்கு ( மதுக்கூருக்கு ) விஜயம் செய்வதும் நமது ஊருக்குப் பெருமை ! நமது மூதாதையர் செய்த பாக்கியத்தினாலேயே நபிப்பேரர் நமது ஊருக்கு விஜயம் செய்கிறார்கள் ! சங்கைமிகு வாப்பா நாயகமவர்களின் அன்பு , கருணை , புன்சிரிப்பு , தமிழ்ப்பற்று , தமிழறிவு , நம்மீது அன்னவர்கள் கொள்ளும் நேசம் என எண்ணற்ற விஷ ­ யங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் ! கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப்பேரர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து ஆன்மிகச் சேவை புரிந்திட வாழ்த்துகிறோம் !மதுக்கூர் அட்வகேட் கலீபா .A.N.M. லியாகத் அலி B.Sc.,B.L.,H.Q. அவர்களின் உரையிலிருந்து ....


லகத்ஜாஅகும் ரசூலுன் மின் அன்புஸிகும்அஸீஸூன் அலைஹி மா அனித்தும்ஹரீஸீன் அலைக்கும் பில்முஃமினீன் ரபூவுர் ரஹீம் ஃபஇன்த வல்லவ் ஃபகுல் ஹஸ்பியல்லாஹுலா இலாஹ இல்லா ஹூ அலைஹி தவக்கல்துவ ஹுவ றப்புல் அர்ஷுல் அலீம் .


நிச்சயமாக உங்களிலிருந்து தூதர் ஒருவர் உங்களிடத்தே வந்துள்ளார் . நீங்கள் வருத்தப்பட்டீர்களானால் அதனிமித்தம் அவர் மிகத் துன்பப்படுகிறவர் ; அவர் உங்களிடத்தே மிக அன்புள்ளவர் அவர்கள் நம்பிக்கையுடையவர்களிடத்தே மிக்க தயாளும் மிக்கக் கருணாகருமாவார்கள் . பின்பு ( அவர்கள் உங்களை விட்டு நீங்கினார்களாயின் அல்லாஹ் எனக்குப் போதுமானவன் ; அவனைத் தவிர இறைவன் இல்லை . அவனிடத்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் ; மேலும் அவன் மகத்துவமிக்க அர்ஷ் என்னும் ( ஒப்பற்ற ) சிம்மாசனத்தின் அதிபதி என நீங்கள் சொல்வீர்களாக !( அல்குர்ஆன் )


இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட கலீபாக்களில் ஒருவர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் . அவர் ஒரு சிறந்த நிர்வாகிதான் எனினும் சர்வாதிகாரியாக ஆட்சிபுரிந்தார் . ( இவர் ஆட்சிக் காலத்தில் தான் குர்ஆன் ஷரீஃபிற்கு இஃராப் அட்சரம் ( ஜேர் , ஜபர் , பேஷ் ) இடப்பட்டது . ஊரடங்குச் சட்டத்தினை முதன் முறையாக அமல் படுத்தினார் . அதற்கு அனைவரும் விருப்பத்தோடோ விருப்பமின்றியோ ஆதரவு தெரிவித்தனர் ! ஆனால் அப்போது வாழ்ந்து வந்த ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் , இச்சட்டத்தை ஏற்க இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்கள் . இச்சேதி கலீபா ஹஜ்ஜாஜ் இபுனு யூசுப் அவர்களுக்கு எட்டியது . அவர் , ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்களிடம் , ஏன் இந்தச் சட்டத்திற்குத் தாங்கள் ஆதரவு தரவில்லை ? என்றுகேட்டார் . இதற்கு ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் இம்மாதிரியான சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் போடப்படவில்லை ! மேலும் , இது மக்களின் உரிமையை ஜனநாயகக் குரலை முடக்குவதாகும் ... எனவே இச்சசட்டத்தை நான் ஒருக்காலும் ஏற்றக் கொள்ள மாட்டேன் ! என்றார்கள் .

ஒரு வேளை உங்களை நான் இப்போது தூக்கிலிட்டால் ...? என்று மிரட்டினார் ஹஜ்ஜாஜ் இபுனு யூசுப் .


நீங்கள் தூக்கிலிட்டாலும் நான் மரணிக்கமாட்டேன் என உறுதியாகச் சொன்னார்கள் , ஹளரத் அனஸ் ( ரலி ) அவர்கள் . சரி .. நான் உங்களை இரவில் தூக்கிலிட்டால் ...? என மீண்டும் மிரட்டினார் , ஹஜ்ஜாஜ் இபுனு யூசுப்அப்போதும் நான் மரணிக்க மாட்டேன் என மீண்டும் என உறுதியாகச் சொன்னார்கள் , ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் !


மிரண்டு போன கலீபா ஹஜ்ஜாஜ் இபுனு யூசுப் , மன்னிக்க வேண்டும் .. நபித் தோழரே ! தூக்கிலிட்டாலும் மரணிக்க மாட்டேன் எனத் தாங்கள் உறுதியாகக் கூறுவதால் இதில் ஏதோ ஒரு முக்கிய விஷயம் , இரகசியம் இருக்க வேண்டும் .. அதனைத் தாங்கள் அறிவித்துத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் .


அதற்கு ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் , யார் ஒருவர் காலையில் லகத் ஜாஅகும் ... எனத் தொடங்கும் திருவசனத்தை ஓதுகிறாரோ அவருக்கு இரவு வரை மரணம் நெருங்காது ! அது போல் யார் ஒருவர் மஃரிபுக்குப்பின்னர் இத்திருவசனத்தை ஓதுகிறாரோ அவருக்காக காலை வரை மரணம் இல்லை என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதிலிருந்து இத்திருவசனத்தை காலையிலும் மாலையிலும் தெடர்ந்து ஓதி வருகிறேன் . அந்த நம்பிக்கையில் தான் என்னைத் தூக்கிலிட்டாலும் மரணிக்க மாட்டேன் எனக் கூறக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் வியந்து போனார் !


அன்பானவர்களே ! இத்திருவசனத்தைத் திரும்பப் படித்துப் பாருங்கள்! இத்திருவசனம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழை - மேன்மையை - உயர்வை - மகிமையை மட்டும் விபரித்துக் கூறுகின்றது ! இத்திருவசனத்தைத் தொடர்ந்து ஓதி வருவதால் அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்வதால் நீண்ட காலம் வாழலாம் என்பதற்கு ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்களின் நீண்ட நெடிய ஜீவிய கால வாழ்வே நற்சாட்சியாக விளங்குவதையறியலாம் ஆகவே , ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ வேண்டும் ; அன்னவர்னளைப் புகழ்வதால் நீண்ட ஆயுள் வாழலாம் என்பதனை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும் ! அதனைத் தான் இவ்வசன விளக்கம் போதிக்கின்றது !


மேலும் , இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலதில் கத்ரு என்னும் அத்தியாயத்தில் , நாம் லைலத்துல் கத்ரு இரவில் திருமறையை இறக்கினோம் . அவ்விரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் கூறுகிறான் !


இதிலிருந்து அந்த இரவில் அருளப்பட்ட திருக்குர்ஆன் ­ ஷரீபிற்கும் அது வழங்கப்பட்ட  இரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஏக இறையால் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவினைத் தான் நாம் ஆண்டுதோறும் லைலத்துல் கத்ரு இரவில் கொண்டாடுகிறோம் இப்படித் தெளிவான வசனங்கள் இருக்கும் போது பெருமானார் இரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டாடக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் ? பொறாமை தான் ! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் ஒருவரை இதோ வருகிறார் சொர்க்கவாசி என்றருளினார்கள் ! அவர் ஓர் ஏழை அன்ஸாரித் தோழர் ! அவரிடம் அப்படி என்ன சிறப்புத் தான் இருக்கின்றது ? என்பதைக் கண்டறிந்து தாமும் அதனைப் பின்பற்றலாம் என்னும் நோக்கில் அவரை அணுகினார்கள் ஹள்ரத் அனஸ் ( ரலி ) அவர்கள் ! தானும் மனைவியும் மூன்று நாட்கள் பேசுவதில்லை என சபதம் செய்துள்ளோம் ! என்று தங்கள் வீட்டில் இவ்வடியேன் தங்கிக் கொள்ளலாமா ? என்றார்கள் ! மனமகிழ்ச்சியோடு அன்ஸாரித் தோழர் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் . மூன்று நாட்களும் அனஸ் ( ரலி ) அவர்கள் அவரை நோட்டமிட்டார்கள் . அவரிடம் அப்படியொன்றும் பிரத்யேகத் தன்மையைக் கண்டு கொள்ள இயலவில்லை !


நான்காம் நாள் அவரிடம் உண்மையைச் சொல்லிவிட்டார்கள் . தங்களைக் குறித்து நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் இதோ சொர்க்கவாசி வருகிறார் என்றார்கள் . அவ்விதமாயின் தங்களிடம் ஏதோவொரு விசேஷத்தன்மை இருக்க வேண்டும் . அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் வேட்கையில் தான் தங்கள் இல்லத்தில் ( பொய் ஒன்று சொல்லி ) தங்கினேன் !


தங்களிடம் விசேஷத் தன்மை எதனையும் நான் காணவில்லையே ? என்றார்கள் அனஸ் ( ரலி ) அவர்கள் . ஆம் ! என்னிடம் விசேஷத் தன்மை ஏதுமில்லை ; எனினும் எவரிடத்தும் நான் பொறாமை கொண்டதில்லை என அறிவித்தார் அந்த நபித் தோழர் .! ஆம் ! பொறாமை இல்லாதவர்கள் சொர்க்கவாசிகள் தாம் எனவே பொறாமையின்றி வலிமார்களைப் போற்றுவோம் ! புகழ்ந்தோதுவோம் !நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விழா எடுப்பது என்பதும் நமது குருபிரான் அவர்களுக்கு விழா எடுப்பது என்பதும் வேறல்ல ! இரண்டும் ஒன்றே தான் ! சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் தராதரங்களை நாம் நினைவு படுத்திக் கொள்ள இது போன்ற விழாக்கள் நமக்குத் துணிபுரிகின்றன !


கலீபா நாகூர் யாஸீன் ஆலிம் ஸாஹிபு அவர்கள் ...

 

ஆலமுல் பர்ஸக் - கப்ரின் வாழ்வை நினைத்தால் பயமாய் இருக்கின்றது .. எனப் பலமுறை கூறி வந்தார்கள் ! அதற்கு சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள், ஆலமாகவும் - பர்ஸாகவும் - ஆலமுல் பர்ஸாகவும் இருப்பது நாமே அதனைப் பற்றியெல்லாம் சிந்தித்துக்கெண்டு ( பயந்து கொண்டு ) இருக்காதீர்கள் எனத் தெளிவாகக் கூறினார்கள் ! இவை போன்று எண்ணற்ற சேதிகளை சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் அருளியிருக்கிறார்கள் ! அவற்றையெல்லாம் நாம் சிந்தனையிலேற்றிக் கொள்ள வேண்டும் !


நிறைவாகச் சொல்வதென்றால் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தொழச்சொல்கிறார்கள் ... தொழ வேண்டும் !


மாதாந்திரக் கூட்டத்திற்குச் செல்ல உத்தரவிட்டுள்ளார்கள் . செல்ல வேண்டும் !இராத்திபு மஜ்லிஸிற்குச் செல்ல உத்தரவிட்டுள்ளார்கள் . செல்ல வேண்டும் ! சபை விழாக்கள் .. கந்தூரி விழாக்களுக்குச் செல்லுங்கள் என அருளுகிறார்கள் . செல்ல வேண்டும் . அவ்வளவு தான் . அதாவது நமது செயல்கள் அனைத்தையும் சற்குருவிற்கு அர்ப்பணித்து விட வேண்டும் ! அதுதான் முக்தி - பக்தி என்பது !விழாவின் சிறப்பம்சமாக மறுநாள் காலை சுமார் 1500 பேருக்குச் சுவையான கந்தூரி உணவு வழங்கப்பட்டது !


( தொகுப்பு : ஆஷிகுல் கலீல் பி . காம் . திருச்சி )