ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஹஜ் - உம்ரா அனுபவங்கள்அல்லாஹ்வின் பேரருளால் சமீப காலமாக வருடம் முழுக்க உம்ராவுக்காக மக்கா மதீனா சென்று வரக் கூடிய மக்கள் அதிகமாகவுள்ளனர்.  அவர்களுக்காக சில அனுபவக் குறிப்புகள்.


1. ஹஜ் உம்ரா பற்றிய ஏராளமான வழிகாட்டி நூல்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் படித்து மனனம் செய்து கொள்வது சிரமமான காரியம் . எனவே ஹஜ் உம்ரா செல்பவர்கள் பின்வரும் தஸ்பீஹ்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும் .

இஹ்ராம் கட்டியதிலிருந்து தல்பியா ஓத வேண்டும். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் , லப்பைக் , லாஷரீக்கலக லப்பைக் , இன்னல் ஹம்தவன் நிஃமத்த லக , வல்முல்க் லா ­ ஷரீகலக் .தவாபு சுற்றும் போது மூன்றாம் கலிமா :

சுபுஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லலாஹு வல்லாஹு அக்பர் . வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹில் அலிய்யில் அலீம் .( சஈ ) தொங்கோட்டத்தின் போது நான்காம் கலிமா :


1. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ , லா ­ ஷரீகலஹு லஹுல் முல்க் , வலஹுல்ஹம்து , யுஹ்யீவயு மீத்து , பியதிஹில்ஹைர் , வஹுவஅலாகுல்லி , ஷையின்கதீர் .

    


2. ஆண்கள் , இஹ்ராம் உடைக்கு கரையில்லா வெள்ளை கைலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் . சீக்கிரம் காய்ந்து விடும் . வெய்ட் இல்லாமல் லேசாக இருக்கும். ஊருக்கு வந்த பின் கைலியாகத் தைத்து உடுத்திக் கொள்ளலாம் .3. விமானப் பயணம் சுமார் 4 மணி நேரமாகும் என்பதால் முடிந்த வரை அந்த நேரத்தில் மலம் - ஜலம் கழிக்காத அளவுக்கு உண்ணுவது , பருகுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் . இல்லையானால் இஹ்ராம் உடையோடு இருக்கிற நமக்கு , சிரமங்கள் ஏற்படும் .4. விமானத்தில் ஊசி , கத்திரிக்கோல் , நகவெட்டி , பிளேடு போன்றவற்றை கைப் பையில் வைத்துக் கொள்ள வேண்டாம் .5. அவரவரின் உடல் நிலைக்கு ஏற்ப , மருந்து மாத்திரைகளை வைத்துக் கொள்வதுடன் , அதற்கான மருந்துச் சீட்டுகளையும் கண்டிப்பாக வைத்துக் கொள்ளவும் .6. பெண்கள் மக்கா மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் மாத விடாயை நிறுத்திக் கொள்வதற்காக , பெண் டாக்டர்களிடம் கேட்டு மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொள்வது நல்லது . இதற்கு மார்க்கத்தில் எந்த தடையுமில்லை .

பெரிய தொகை செலவு செய்து சிரமப்பட்டு அங்கு போன பின் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் இரண்டு புனித ஹரம் ஷரீபிலும் உள்ளே நுழைய முடியாமல் ஆகிவிடும் .7. வீட்டிலுள்ள பழைய 7 தஸ்பீஹ் மணிகளைக் கோர்த்து வைத்துக் கொண்டால் தவாபு செய்யவும் தெங்கோட்டத்திற்கும் பயன்படும்8. மக்காவிலும், மதீனாவிலும் ஜம்ஜம் தண்ணீர் கேன்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள் . அதில் ஐஸ் இல்லாத தண்ணீரையே சாப்பிட வேண்டும் . நெஞ்சு சளி , இருமல் வராமலிருக்கும் . ஐஸ் போடப்பட்ட தண்ணீரில் ஜம்ஜம்முடைய அசல் சுவை மாறிப்போயிருக்கும் .9. குளிர் காலமாயிருந்தாலும் , கேடைக் காலமாயிருந்தாலும் அங்கு போன பின் கை , கால் , உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு வலி கொடுக்கும் . இதற்கு அங்கு கிடைக்கிற கிரீம்களை தடவுவதை விட நம்மூர் தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து . எனவே சிறிய பாட்டில்களில் வாங்கி எடுத்துச் செல்லலாம் .10. மக்காவிலும் , மதீனாவிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு . நமக்கு கிடைக்கிற நேரங்களை பயன்படுத்திக் கொண்டு நண்பர்களுடன் சென்று தரிசித்து வர வேண்டும் .மக்காவில் :


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இல்லம் , மஸ்ஜிதுல் ஜின்னு , ஜன்னத்துல் முஅல்லா , ஹதீஜா நாயகி அடக்கத்தலம் , ஹிரா குகை , கஃபத்துல்லா போர்வை பேக்டரி , அராபத் மலை , முஜ்தலிபா பள்ளி , மினா கல்லெறியும் இடம் போன்றவை .மதினாவில் :


ஜன்னத்துல் பகீ நாயகத்தின் குடும்பத்தினர் அடக்கத்தலம் , மேகம் நிழல் தந்த பள்ளி , குபா பள்ளிவாசல் , இரட்டை கிப்லா பள்ளி , உஹது மலை , அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா திண்ணை , பத்ரு ஸஹாபாக்கள் மைதானம் ரவ்லாஷ ­ ரீப் - சொர்க்கத்துப் பூங்காவின் நினைவுத் தூண்கள் .11. அங்கே செருப்புகள் காணாமல் போவது சகஜம் . எனவே தையல் இல்லாத ஹவாய் சப்பல் இரண்டு ஜோடிகளை எடுத்துச் செல்லலாம் . அங்கே இந்த ஜோடி செருப்பு 10 ரியால் ( ரூ .120) ஆகும் .12. சாமான்கள் வாங்குவதென்றால் ( மக்கா - மதீனா ) எந்த ஊரிலிருந்து ஊருக்குப் புறப்படுவீர்களோ அந்த ஊரில் வாங்குவது நல்லது . எல்லா ஊரிலும் எல்லா சாமானும் கிடைக்கும் . விலையும் ஒன்றுதான் . நமக்கு தூக்கி சுமக்கிற வேலை இருக்காது .13. அங்கு போய் இறங்கியதிலிருந்து ஊருக்குத் திரும்புகிற வரை நமது தோளில் தொங்கவிட்டுக் கொள்கிற வகையில் ஒரு பேக் அல்லது ( ஜோல்னா ) துணிப்பை இருப்பது நல்லது . அதில் அவசரத்திற்குத் தேவையான சில்லரை காசுகள் , மருந்து மாத்திரைகள் , ஓதக்கூடிய கிதாபுகள் , தஸ்பீஹ் மணி , முஸல்லாக்களை வைத்துக் கொண்டு வெளியில் எங்குப் போனாலும் எடுத்துச் செல்லலாம் . கஃபத்துல்லாவுக்கு உள்ளே போகும் போது நமது செருப்புக்களைக் கழற்றி அந்தப் பையிலேயே வைத்துக் கொள்ளலாம் .14. முடிந்த வரை சாப்பிடுகிற நேரம் , தூங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் நமது ரூம்களில் இருப்பதைக் குறைத்துக் கொண்டு புனித ஹரம் ­ ஷரீபிலேயே பொழுதைக் கழிக்க வேண்டும் . தொழுகைக்காகவோ , தவாபு செய்வதற்கோ , உம்ரா செய்வதற்கோ செல்லும் போது நிறைய தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொண்டால் நல்லது . காரணம் சிறுநீர் கழிப்பதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கும் .15. மக்காவில் உம்ரா செய்வதற்காகப் புறப்படும்போது பஜ்ருக்குப் பின்னால் அல்லது இஷாவுக்குப் பின்னால் வைத்துக் கொள்வது நல்லது . இடையில் தொழுகை நேரம் குறுக்கிடாமல் இருக்கும் . சீக்கிரம் அமல்களை முடித்து விடலாம் .16. பேரீத்தம் பழ மார்க்கெட் மதீனாவில் தான் இருக்கிறது . நிறைய வகைளைப் பார்த்து மலிவாக வாங்க முடியும் .17. குர்பானிக்காகக் காசு கொடுக்கும் போது சவுதி அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிற அலுவலகங்களில் பணத்தை செலுத்தி ரசீது வாங்கிக் கொள்ளவும் . தனி நபர்களிடம் கொடுப்பது நம்பத் தகுந்ததல்ல .18. ஹஜ் செல்பவர்களுக்கு துல்ஹஜ் பிறை 8 லிருந்து 13 வரையுள்ள ஐந்து நாட்கள் மிக முக்கியமானது . அந்த நாட்களில் மினா , அரஃபா , முஜ்தலிபாஆகிய இடங்களில் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும் . அந்த நாட்கள் கழிகிற வரை நமது உடல் நலன் பாதிக்காமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும் . ஹஜ்ஜுடைய முக்கியக் கடமைகள் அந்தநாட்களில் தாம்  நிறைவேற்ற வேண்டும் .19. மக்காவில் தங்கியிருக்கும் நாட்களி உம்ரா செய்வது , அதிகமாக தவாபு செய்வது போன்ற அமல்களைச் செய்ய முடியும் . ஆனால் மதீனாவுக்குப் போன பின்பு இது போன்ற சிறப்பு அமல்களில்லை . எனவேம தீனத்துப் பள்ளிவாசலில் 40 வக்த்து தொழுகையை ஜமாஅத்துடன் விடாமல் தொழ வேண்டும் . தினமும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்து ஸலாம் சொல்லி துஆச் செய்ய வேண்டும் . அருகிலுள்ள ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தானில் தினமும் ஜியாரத் செய்ய வேண்டும் . அங்குள்ள குபா பள்ளிவாசலில் சென்று தொழுது வந்தால் ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் . அங்கு தங்கியிருக்கும் நாட்களில் நம்மால் எத்தனை லட்சம் ஸலவாத்து ஓத முடியுமோ அந்தளவு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்காக ஓத வேண்டும் . அங்குள்ள சொர்க்கத்துப் பூங்காவில் ஒரு முறையேனும் தொழுது துஆச் செய்ய வேண்டும் .20. இங்கிருந்து புறப்படும் போது கொஞ்சம் சவுதி ரியால்களை சில்லரையாக மாற்றி வைத்துக் கொள்ளவும் . ஜித்தா ஏர்போர்ட்டில் இறங்கியதும் , ஊருக்கு டெலிபோன் பேசவோ , பசித்தால் சாப்பிடுவதற்கோ உதவும் .21. ஒவ்வொரு இடங்களிலும் நீண்ட தூரம் நடப்பதும் , ரொம்ப நேரம் காத்திருப்பதும் சகஜம் . எனவே அதிகபட்ச பொறுமையுடன் இருத்தல் வேண்டும் .22. நம்மிட ம்துஆச் சொல்பவர்கள் , நாயகத்துக்கு ஸலாம் சொல்லச் சொல்பவர்களை மறந்திடாமல் அந்த அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும் .அன்புடன் , ஆலிமாக்கள் பேரவை , ஷேக் மீரா ஆலிம் நிஸ்வான் மத்ரஸா , கீழத்தெரு , சக்கராப்பள்ளி .