ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

குர்பானீ !


குர்பானீ பிராணிகள் ( ஹனபீ )


1. ஒட்டகம் : ஐந்து ஆண்டுகள் முடிந்து ஆறாவதுஆண்டு ஆரம்பமாகி இருக்க வேண்டும் .


2. மாடு : இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு ஆரம்பமாகி இருக்க வேண்டும் . எருமை மாடும் கொடுக்கலாம் .


3. ஆடு : செம்மறி ஆடு , வெள்ளாடு ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும் .ஆறுமாதமான செம்மறி ஆடு கொழுத்ததாக இருந்து அதை ஒரு வருட ஆடுகளோடு சேர்த்துப் பார்த்தால் ஒரு வருட ஆடு போன்று தெரிந்தால் கூடும் .

வெள்ளாட்டிற்கு கட்டாயம் ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடம் ஆரம்பமாகி இருக்க வேண்டும் .

சரியான முறையில் ஏழு பங்கு வைப்பது கொண்டு மாடு , ஒட்டகம் ஏழு நபர்கள் சேர்த்து குர்பானீ கொடுக்கலாம் . ஒருபங்கு குறைந்தாலும் கூடாது.


ஆடு : ஒரு நபருக்காக மட்டும் குர்பானீ கொடுக்க வேண்டும் .

( நூல் : அல்பிக்ஹு அலல் மதாஹிபில் அர்பஆ பக் .717) 


ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து மாடு , ஒட்டகம் குர்பானீ கொடுப்பது கூடும் என்றிருந்தாலும் ஒரு நபர் தனியாக ஆடு குர்பானீ கொடுப்பதே சிறந்ததாக இருக்கும்


.( நூல் : இஹ்யா உலூமித்தீன் )  •         எவர் வசதி பெற்று குர்பானீ கொடுக்கவில்லையோ அவர் நாம் ( பெருநாள் ) தொழுமிடத்திற்கு வர வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் .
  •     நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்துக்குப் பின்னால் மதீனாவில் வாழ்ந்த பத்து ஆண்டு காலமும் குர்பானீயை நிறைவேற்றியுள்ளார்கள் .
  •        ஒரு முஸ்லிம் அல்லாஹு தஆலாவுக்காக தன்னை குர்பானீ செய்வதன் மூலம் அழித்துக் கொள்ள வேண்டும் . ஆனால் இஸ்லாத்தில் மனிதன் தன்னை அழித்துக் கொள்வது ஆகாத காரணத்தால் மனிதனுக்குப் பகரமாக ஆடு , மாடு , ஒட்டகம் இவை ( மனிதனின் ) ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக குர்பானீ கொடுக்கப்படுகிறது .
  •      குர்பானிக்காக வாங்கிய பிராணியை குர்பானீ கொடுக்காமல் ( துல்ஹஜ்பிறை 10,11,12) நாட்கள் சென்று விட்டால் குர்பானீ பிராணியை உயிருடன் சதகா செய்துவிட வேண்டும் . இதில் எதையும் சாப்பிடுவது ஹராமாகும் .