ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை


சொர்க்கத்துப் பறவையின் சோக கீதம்

வானம், பனிக் கண்ணீரைச் சிதறவிட்டுக் கொண்டிருந்தது.

காற்றின் கலக்கமான சோக ஹூங்காரம்.


கூடாரத்திற்கு வெளியே அமர்ந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த இமாம் அவர்கள், மறுநாள் பொழுதின் இந்நேரத்து நிலை எப்படியிருக்கும் என யோசித்துப் பார்த்தார்கள்.


ஆண் துணையே இன்றி தமது குடும்பத்துப் பெண்கள் நிர்க்கதியாகிவிட்டால் என்று நினைக்கையில் அவர்களுக்குச் சொல்ல முடியாத துக்கம் உண்டாயிற்று.


தமக்காகச் சகல நலங்களையும் தியாகம் செய்யத் சித்தம் கொண்டுள்ள தமது ஆதரவாளர் பற்றி நினைக்கையில் அவர்களது துக்கம் மேலும் அதிகரித்தது.


யஜீதுவின் ஆட்களுக்குத் தாம் தானே குறி, வீணே இவர்களும் ஏன் பலியாக வேண்டும் என எண்ணியதும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்தமது ஆதரவாளர்களைக் கூட்டினார்கள்; சொன்னார்கள்கிருபையுள்ள  ரஹ்மான் உங்களுக்கு இன்னருள் பாலிப்பானாகநண்பர்களே, உங்கள் உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் என்றும் மறக்க மாட்டேன்ஆனால், நண்பர்களே, இப்போது அவர்களுக்கு நான் தான் குறி; என் தலைதான் லட்சியம்இது நன்கு தெளிவாகிவிட்டதுஎனவே, அவர்களுக்குத் தேவைப்படாத பல உயிர்கள் வீணே பலியாக வேண்டியதில்லைஎன் யோசனையைக் கேளுங்கள்நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் உங்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விடலாம்நான் இதை மனப்பூர்வமாகவே சொல்கிறேன்.


நான் உங்களை வேற்றுமையாகக் கருதுவதாக எண்ணிவிடாதீர்கள்அப்படி நான் கருதுவதாய் நீங்கள் எண்ணினால் எங்களில்  அஹ்லுல் பைத்துகளில் - ஒவ்வொருவரின் கையை உங்களில் ஒவ்வொருவர் பிடித்துக் கொண்டு புறப்படுங்கள்என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்சர்வத்தையும் படைத்து ஆளுகிற அந்த சர்வ சக்தனான அல்லாஹ்வின் துணை ஒன்றே எனக்குப் போதுமானது.


இதைக் கேட்டதும் கூடியிருந்தோர் அனைவரும் கோவென்று கதறி அழுதார்கள்எங்கள் ரஸூலுல்லாஹ்வின் பேரரே! என்ன வார்த்தை சொன்னீர்கள்! உங்களை விட எங்கள் உயிரும் உடமைகளும் எங்களுக்குப் பெரிதாகிவிடுமா? உங்களை இறைவனிடம் தனியே விட்டுச் செல்ல எந்தக் கருங்கல்லுக்குத்தான் மனம் வரும்?


நாயகமே, சிங்கமாக -புலியாகப் பிறந்திருக்கக் கூடாதா? என நாங்கள் கை சேதப்படுவது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப் பிறந்திருந்தால் தங்களைக் கொல்ல நினைக்கிற இந்த ஈனர்களின் இதயத்தைப் பிளந்து சுவைக்கலாமே என நாங்கள் ஏங்குவது உங்களுக்குப் புரியுமா, செத்தாலும் உங்களுடனேயே சாவோம்; வாழ்ந்தாலும் உங்களுக்காகவே வாழ்வோம்இது உறுதி.


பசியாலும் தாகத்தாலும் பேசக் கூடச் சக்தியற்றிருந்த அஹ்லுல் பைத்து பெண்கள், தத்தமது கூடாரத்தில் இருந்தபடி எதிரிகளின் உற்சாகமான கொம்மாளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்வாட்கள் தீட்டப்படும் ஒளி குழந்தைகளை பீதியடையச் செய்கிறது.


உடல்நலம் குன்றியிருந்த  ஹள்ரத் ஸைனுல் ஆபிதீனுக்கு, ஹள்ரத்  ஸைனம்பு அம்மையார் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள்.


அந்த நேரத்தின் துன்ப சூழ்நிலை பற்றி ஹள்ரத்  ஸைனுல் ஆபிதீன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். என் தந்தை ­ஹீதாகப் போகிற நாளின் இரவு போன்ற ஒரு கொடுமையான இரவை நாங்கள் பார்த்ததில்லை. அச்சத்தாலும் அவ நம்பிக்கையாலும் பீதியுற்று எங்கள் பெண்களும் குழந்தைகளும் சிறுகச் சிறுக உணர்விழந்து கொண்டிருந்த அந்த வேளையிலே, எதிரிகளின் கூக்குரலும் கத்தி தீட்டுகிற ஒலியும் அவர்களது திகிலை மேலும் கிளறிவிட்டுக் கொண்டிருந்தன.


கூடாரத்திற்கு வெளியே அமர்ந்திருந்த என் தந்தை எதிரிகளின் உற்சாகத்தைக் கண்டு உள்ளம் நொந்தார்கள். ரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தாரைக் கொலை செய்த வி­யத்தில் காஃபிர்களேனும் இத்தனை ஆர்வம் காட்டுவார்களா என எண்ணி வியந்தார்கள்.


சிறந்த கவிதா ஞானம் கொண்டிருந்த அவர்களது திருவாயினின்று சோகச் சொல்லருவி கொட்டக் கேட்போம்.

காலமே, நாசமாய்ப் போன காலமே!

நீ எங்களுக்கும் நண்பனேஆனால் விசுவாசமற்ற

மோசமான நண்பன்.

காலையும் மாலையும் கொடூரமான

உன் கரங்களால் கொன்று குவிக்கப்படுகிற உன்

நண்பர்களின்

கூக்குரலால் நீ சிறிதும் மனம் கசிவதில்லை.

எவருக்கும் சலுகை காட்டுவதில்லை.

எவரிடமிருந்தும் பிரதிபலன் பெறவில்லை.

காரியம் அனைத்தும் அல்லாஹ்வின் கரத்திலேயே

இருக்கின்றன.

உயிர் வாழும் ஜீவிகளின் ஒவ்வொரு

அடியும் மரணத்தை நோக்கியே நகர்கின்றன.


- என் தந்தை, திரும்பத் திரும்ப இப்பாடலைப் பாடக் கேட்ட எனக்கு துக்கத்தை அடக்க முடியவில்லைகண்கள் பொங்கிப் பிரவகித்தனஏறிட்டுப் பார்த்தேன்என் மாமி ஸைனம்பு அவர்களும்  குரல் வெளிப்படாமல் அழுது கொண்டருந்தார்கள்.மாமி, நமது இந்தத் துன்பம் இனி அகலாதா? எனக் கேட்டதும் அவர்களது சகிப்புத் தன்மை சுவர் இடிந்து விழுந்ததுகோவெனத் தொண்டை விட்டு அழத் துவங்கினார்கள்அதனால் மற்றவர்களது உணர்ச்சிகளும் கிளரப்பட்டு அழுது அரற்றவாரம்பித்தார்கள்.இதைச் செவிமடுத்த என் தந்தை அவசரமாய் எங்களிடம் வந்தார்கள்சகோதரி, நாம் ரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தினர் அல்லவா? ஃபாத்திமாவின் உதிரக் கட்டிகள் அல்லவா? துன்ப துயரங்களை அவர்கள் எத்தனை பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஞாபகம் வைத்துக் கொள்நமது பொறுமை பற்றி அல்லாஹ் நிச்சயம் கேள்வி கேட்பான்கெட்ட மனமும் ஷைத்தானும், நமது மெய் விசுவாசத்தை மிகைத்து விடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.முஸ்லிம்களின் தலைவரான என்னருமைச் சகோதரரே, தாங்கள் தங்கள் சொந்த மக்களின் கொலைத் திட்டத்திற்கு அல்லவா ஆளாகியிருக்கிறீர்கள் என எண்ணுகையில் துக்கத்தை அடக்க முடியவில்லையே என்றார்கள்.

என்ன செய்வதுஅல்லாஹ்வின் நாட்டம் அப்படித்தான் இருக்கிறது என்ற தந்தை, பொறுமை - சகிப்புத்தன்மை பற்றி அழைத்துச் சென்று விதிபற்றி ஏதேதோ சொன்னார்கள்.


சண்டைக்குத் தயாரானார்கள்

இமாம் அவர்கள் அந்த இரவு முழுவதும் தமது சகாக்களுடன் தொழுகையிலும் திக்ரிலும் பாவ மன்னிப்பிலும் ஈடுபட்டிருந்தார்கள்அல்லாஹ்வின் வணக்கத்தில் இன்பம் கண்டு வந்த அவர்கள் அந்த இரவில் அந்த இன்பத்தை மிக அதிகமாகவே துய்த்தார்கள்எதிரிகள் கத்தியைக் கூர்ப்படுத்துவதில் கழித்த அந்த இரவை அஹ்லுல் பைத்துக்கள் ஆன்மாவை அழகுபடுத்துவதில் கழித்தார்கள்.


எதிரிகளின் குதிரை வீரன் ஒருவன், இமாம் அவர்களை இரவு முழுவதும் கண்காணித்துக் கொண்டே இருந்தான். இதைக் கவனித்த இமாமவர்கள், மாறுபுரிவோர், அவர்களை நாம் விட்டு வைத்திருப்பதை அவர்களுக்கு நல்லதென்று கருதிக் கொள்ள வேண்டாம்அவர்களை நாம் விட்டுப் பிடிப்பதெல்லாம் அவர்களது பாவம் அதிகமாக வேண்டும் என்பதற்குத்தான்இறைவன் விசுவாசிகளை இதே ஸ்திதியில் வைத்திருக்கப் போவதில்லைஅவன் நல்லதைத் தீயதினின்று பாதுகாத்து வைப்பான் என்கிற கருத்துப்படவுள்ள குர்ஆன் வசனத்தை உரக்க ஓதினார்கள். இதைக் கேட்ட வெகுண்ட அந்த எதிரி, கஅபாவின் இறைவன் மீது ஆணை, நாங்கள்தாம் நல்லவர்கள்உங்களை எங்களினின்று அவன் பிரித்து அறிவிக்கப் போகிறான் எனக் கத்தினான்.


முஹர்ரம் பத்தாம் பொழுதின் சோக வெளிச்சம், முகமூடியிட்டவாறு (வழக்கமான வெளிச்சம் இல்லாது) மெல்ல மெல்லக் கிழக்கிலிருந்து படரத் தொடங்கிற்று.


பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்திற்கு அருட்கொடையாய் அருளிய கிருபையுள்ள ரஹ்மானை வாயார வாழ்த்தயவாறு இமாம் அவர்கள் எழுந்தார்கள்ஃபஜர் தொழுகைக்கான பாங்கு சொல்லுமாறு பணித்தார்கள். கணீரென்ற குரலில் பாங்கொலி புறப்பட்டதுஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் - என்கிற வாக்கியம வெளிப்பட்டதும் பூமி சிலிர்த்துக் கொண்டு ஒரு குலுக்கு குலுங்கிற்றுவானம் அழுததுகாற்று அழுதது. புற்பூண்டுகள் அழுதனபறவைகளும் பகுத்தறிவற்ற இதர உயிரினங்களும் சோகக் குரல் எடுத்துக் குமுறினவாழும் வகையை, வணங்கும் முறையை வகுத்துத் தந்த அந்த வள்ளல் நபியின் பேரரையா கொலை செய்யப்


போகிறீர்கள்? பாவிகளே, உங்களை நாங்கள் சபிக்கிறோம்; நீங்கள் தொட்டதையும் உங்கள் கைப்பட்டதையும் சபிக்கிறோம் என மோனக் குரலில் சபித்தன.


இமாம் அவர்களது மேன்மை மிக்க தலைமையில் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், எதிரிகள் போர் முரசம் தட்டியவாறு மளமளவென்று நாற்புறமும் வந்து சூழ்ந்து கொண்டார்கள்எனவே, அவசரம் அவசரமாய்த் தொழுகையை முடித்துக் கொண்ட இமாம் அவர்கள், தமது ஆதரவாளர்களை முறையாய் அணிவகுத்து நிற்குமாறு கட்டளையிட்டார்கள்அவர்களது குதிரைப் படையில் 32 வீரர்களும், காலாட் படையில் 40 வீரர்களுமாக மொத்தம் 72 வீரர்களே இருந்தனர்.


இவர்கள் சுமார் முப்பதாயிர வீரர்களைக் கொண்ட எதிரிகளுடன் மோத வேண்டும்! இருப்பினும் அந்த எழுபத்திரண்டு பேரும் உள்ளத்தளவில் எழுபத்திரண்டு மலைகளாயிருந்தனர்.


இமாம் அவர்கள் தமது சிறு படையினரை முறையாய்ப் பிரித்து நிறுத்தினார்கள்வலது அணிக்கு ஹள்ரத் ஸுஹைர் இபுனு கய்யின் அவர்களையும், இடது அணிக்கு ஹபீப் இபுனு மஸாஹிர் அவர்களையும் தளபதிகளாய் நியமித்தார்கள்தமது சகோதரர் அப்பாஸ் இபுனு அலீயின் கையில் கொடியைக் கொடுத்தார்கள்கூடாரங்களைச் சுற்றி வளர்க்கப்பட்டிருந்த நெருப்பை மேலும் கிளரிவிடும்படிக் கட்டளையிட்டார்கள்.


மஹ­ர் வெளிக்குச் சமமான அன்றைக் காலை வெயில் மிகவும் உக்கிரமாய் அனலை வாரியடித்துக் கொண்டிருந்ததுதமது சகாக்கள் தயார் நிலையில் நிற்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டதும், இமாம் அவர்கள் வேகமாய்த் தமது கூடாரத்திற்கு வந்தார்கள்தமது பாட்டனார் ரஸூல் நாயகத்தின் பாகையை எடுத்துத் தலையில் அணிந்து கொண்டார்கள்தமது தந்தையின் இடைக் கச்சையைக் கட்டிக் கொண்டார்கள்வாளையயடுத்து உறையில் போட்டார்கள். குதிரை மீது தாவி ஏறினார்கள். களத்திற்கு வந்து செஞ்சிங்கமாய் எதிரியைப் பார்த்தவாறு நின்றார்கள்.


ஹிஜ்ரி 4 ஆம் வரு­ம் ­அபான் மாதம் நான்காம் நாள் பிறந்த இமாம் அவர்களுக்கு அப்போது ஐம்பத்தாறு வயது பூர்த்தியாகி ஐம்பத்தேழு வயது ஆரம்பமாகியிருந்ததுஎதிரி அணியிலிருந்து மிகவும் ஆடம்பரமாய், அலட்சியமாய், கர்வமும் இடக்கும் தெறிக்கிற பார்வையுடடன் குதிரை மீதேறி ´ம்ரு தில்ஜாஸன் வந்தான்.


இமாம் அவர்களது சிறு படையினரையும். கூடாரங்களைச் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நெருப்பையும் சுற்றிப் பார்த்தான்திமிருடன் சொன்னான் : ஓய் ஹுஸைன், இதெல்லாம் என்ன? மறுமை நாள் வருவதற்கு முன்பே நெருப்பில் விழுந்து விட்டீரா?


இடையன் மகனுக்குத்தான் - அதாவது உனக்குத்தான் நரகம் மிகப் பொருத்தம்! என்றார் இமாம் அவர்களைச் சார்ந்த ஒரு வீரர்.


வில் வித்தையில் சிறந்தவரான ஹள்ரத் முஸ்லிம் இபுனு உஸஜா கேட்டுக் கொண்டார் : இமாம் அவர்களே, தயவு செய்து என்னை அனுமதியுங்கள்அவன் எனக்கு மிகவும் வாகாய் இருக்கிறான்ஒரே அடியில் வீழ்த்தி விடுகிறேன்வேண்டாம் என்றார்கள் இமாம்.


சகோதரரே, முஸ்லிமின் கோரிக்கையை ஏற்பது நல்லதென்று கருதுகிறேன்நபிகளாரின் குடும்பத்தினர் மீது இவனைவிடத் துவே­ம் அல்லாஹ்வின் நல்ல சன்மானம் கிடைக்கலாம் என்றார்கள் ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அலீ.


சில யுத்தங்களில் தங்களது பரம வைரிகளான சில எதிரிகளை, என் பாட்டனாரும் அவர்களைப் பின்பற்றி என் தந்தையாரும் மன்னித்து விட்டிருக்கிறார்கள்அது சாதாரண முன் மாதிரி அல்லஅதை நான் பின்பற்ற விரும்புகிறேன் என்றார்கள் கருணை மயமான கண்மணி இமாம்.


பின்னர் கையுயர்த்தி இறைவனை வேண்டினார்கள் : கருணை மிகுந்த என் ரஹ்மானே, சகல காலங்களிலும். நிலைகளிலும், துன்பங்களிலும் நான் உன் மீதே நம்பிக்கை வைத்துள்ளவன் என்பதை மிகவும் அறிந்துள்ளாய்கடினமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உன் பாதுகாப்பையே நான் நாடி வந்திருக்கிறேன்.


என் ரப்பே, நான் இப்போது ரொம்பவும் மனம் தளர்ந்திருக்கிறேன்புதிய வழி ஒன்றும் தோன்றவில்லைநண்பர்கள் பகைவர்களாகி விட்டார்கள்துரோகிகள் பலம் பெற்றுவிட்டார்கள்எங்களைப் பார்த்து அவர்கள் எள்ளி நகைக்கிறார்கள்.


எனினும், நான் உன்னிடமே முறையிடுகிறேன்உன்னிடமே உதவி கோருகிறேன்சர்சை சக்தன் நீயேநல்லுதவி அனைத்தும் உன்னிடமிருந்தே வருகின்றன.

நன்றி:மர்ஹூம் எஸ்.எஸ்.அலீ அவவர்களின் தியாகிகளின் வேந்தர்கள் . இமாம் ஹஸன் இமாம் ஹுஸைன் (ரலி)