ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

இஸ்லாமியப் புத்தாண்டு


 (ஹிஜ்ரீ ஆண்டு) எப்போது தொடங்கியது?நபிகளார் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் பகைவர்களின் தொல்லைகளால் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்அதை நினைவுபடுத்தக் கூடியதாக இஸ்லாமியக் காலண்டர் அமைந்திருக்கின்றதுஅதன் தொடக்கமாக யமன் நாட்டு கவர்னர் அபூ மூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள், ‘உங்கள் கடிதங்களில் தேதி குறிப்பிடப்படவில்லைஎனவே, இனி வரக்கூடிய கடிதங்களில் தேதியையும் குறிப்பிட்டால் நலம்என உமர் (ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டார்கள்உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள்சிலர் நபிகளாரின் மறைவு ஏற்பட்ட தினத்தை வைத்தும், சிலர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தினத்தை முன்னிட்டும் வருடத்தைத் தொடங்கலாம் என ஆலோசனை வழங்கினர்ஆனால் உமர் (ரலி) அவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லைநபிகளாரின் மறைவைக் கொண்டு பல சிரமங்கள் ஏற்பட்டன. அன்னாருக்கு நபித்துவம் கிடைக்கும் போது நாம் வழிகேட்டில் இருந்தோம். எனவே அவற்றை முன்னிட்டு தேதியை தொடங்குவது நல்லதல்ல எனத் தெரிவித்தார்கள்.ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் நபிகளாரின் ஹிஜ்ரத்தை முன்னிட்டு தொடங்கலாம் என ஆலோசனை வழங்கினார்கள்ஏனெனில் அண்ணலாரின் ஹிஜ்ரத்தை முன்னிட்டே இஸ்லாமிய வெற்றிகளின் கதவுகள் திறக்கப்பட்டது.ஹள்ரத் உமர் (ரலி) அவர்களும் அவ்வாலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரத்திற்கு 17 வருடங்களுக்குப் பின்பு ஹிஜ்ரி 17 ஜமாதுல் ஆகிர் பிறை 20 (கி.பி 638 ஜூலை 9) -இல் ஹிஜ்ரத்  காலண்டருக்கு அடித்தளமிடப்பட்டதுஉஸ்மான்(ரலி) அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் வருடத்தின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் நிர்ணயிக்கப்பட்டதுஹிஜ்ரி வருடத்தின்தொடக்கம்  ஹிஜ்ரி 1 முஹர்ரம் பிறை 1 ஜும்ஆ நாளைக் கொண்டு (கி.பி 622 - ஜூலை 16 - ­க் வருடம் 544 அஸாடா அதாவது இந்துக்களின் நான்காம் மாதத்தில்) ஏற்பட்டது.அறபிகள் முதல் பிறையைகுர்ராஎன்றும்  கடைசி பிறையைஸலஹ்என்றும் கூறுவர்மாதத்தின் துவக்கம் பிறை தென்பட்டதிலிருந்து மீண்டும் தென்படும் வரை 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதாக இருக்கும்தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் 29 நாட்களைக் கொண்டதாகவும் சிலசமயங்களில் நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக 30 நாட்களைக் கொண்டதாகவும் அமையலாம். 29 நாட்களைக் கொண்ட மாதம்நாகிஸ்” (குறைவான நாட்களுடைய மாதம்) எனவும், 30 நாட்களைக் கொண்ட மாதம்காமில்” (முழுமைப் பெற்ற மாதம்) எனவும் கணக்கிட்டுச் சொல்லப்படும்.354 நாட்களைக் கொண்ட வருடத்திற்கு நாகிஸ் எனவும், 355 நாட்களைக் கொண்ட வருடத்தை காமில் - கபீஸா எனவும் கணக்கெடுக்கப்படும்ஹிஜ்ரி மாதம் 33 சூரிய வருடங்களில் தனது சுற்றை முழுமைப்படுத்திக் கொள்கிறது. (மிப்தாஹுத் தக்வீம்)