ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் 

அமுத மொழிகள்குர்ஆன் ­ரீஃப்

குர்ஆன் முதலில் ஒளியின் வடிவில் அணு ரூபத்தில் அணுக்களின் திரட்சியாக இருந்துப் பின் ஒலி அமைப்பாகி அதிலிருந்து எழுத்து வடிவமாக வந்தது.  பிரபஞ்சந்தான் திருக்குர்ஆன் வடிவில் வந்திருக்கிறது.  திருக்குர்ஆனை ஓதுவது பிரபஞ்சத்தைப் படிப்பதற்கு ஒப்பாகும்.  பிரபஞ்சத்தின் நுட்பங்கள் நமது வெளிப்புற அறிவுக்கு விளங்கவில்லை என்றாலும் நமது உள் மனமும், உள் அறிவும் அவற்றை விளங்கிக் கொள்ளும்.  ஓதும்போது நாம் பிரபஞ்சமாகவே ஆகிவிடுகிறோம்.


குத்புமார்கள்

பரிபூரணானந்தத்தை யடைந்து நான் நீயயனும் பேறுபாடின்றி இரண்டறக் கலந்து அதிலே லயித்திருப்போரே குத்புமார்களாவர்.  குத்புமார்களையடைந்து அதன் வழி நடந்து குத்புமார்களின் சொற்படி குத்புமார்களில் தன்னை அனைத்திலும் அழித்து இறையில் தன்னை அழிப்பதில் ஆசை வைப்பவரே வலிமார்கள்.


அழிவில்லை

வலிமார்கள் அழிவதில்லை.  மற்ற மக்களும் அழிவதில்லை.  மாற்றந்தான் ஏற்படுகிறது.


அகம் - புறம் 

இஸ்லாத்தில் வெளிரங்கம், உள்ரங்கம் என இரு பகுதிகள் உள்ளன.  அவை ­ரீஅத் - தரீகத் - ஹகீகத் - மஃரிபத் ஆகியனவாம்.  ­ரீஅத்தைத் தமிழில் சரியை என்றும் மற்றதை ஞானம் என்றும் சொல்வார்கள்.  வெளிப்படையான அறிவைப் புத்தகங்கள் வாயிலாகப் படித்து அறிந்து கொள்கிறோம்.  ஞான அறிவான அகமிய விளக்கங்களை மெய்ஞ்ஞானம் அறிந்த குருவின் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.  அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் (இறைவனை அறிவதே மார்க்கத்தின் முதற் கடமை) என்பது நபிமொழி. 


அவசியம்

கலிமாவின் கருப்பொருளாகிய இந்த மெய்யறிவைப் பெற்றுவிட்டால் மனிதர்களிடையே சண்டைகள் - மோதல்கள், உயர்வு - தாழ்வு பேதங்கள், பொறாமை, கோபம் போன்ற தீய குணங்கள் அனைத்தும் அடியோடு நீங்கப் பெற்று மனதில் அன்பு பெருக்கெடுத்தோடும்.  செயல்களில் அறம் பெருகும்.  மனிதநேயம் தழைக்கும்.  எனவே, மஃரிபா எனும் மெய்ஞ்ஞானத்தை ஒவ்வொருவரும் அடைந்து கொள்ள வேண்டும்.சமுதாயத்தின் நிலை

அல்லாஹ்வைப் பற்றிய ஆராய்ச்சி இல்லாததால் தான் இன்று முஸ்லிம்கள் மத்தியில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்த நல்ல குணங்கள் இல்லாமற் போய்விட்டன.நூரின் ரகசியம்

நூரே முஹம்மதிய்யா என்றால் என்னவென்று ஒருவர் கேட்டார்.  அதற்கு ய­ய்கு நாயகம் அவர்கள் அளித்த பதில் :

தெளஹீதில் இரண்டு வார்த்தையும் ஒன்றுதான்.  நூர் என்றால் ஜோதி.  முஹம்மதிய்யா என்றால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களென்று பொருள்.  அதாவது ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் ஜோதி என்று பொருள்.  ஆனால் மக்கள் பொதுவாக ஜோதி என்றால் சூரியனுடைய - சந்திரனுடைய வெளிச்சங்களை - கண்ணுக்குத் தெரியும் பிரகாசத்தை ஜோதி என்று சொல்கின்றனர்.  நாங்கள் ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களையே - அவர்களுடைய முழுவுடலையே ஜோதி என்று சொல்கிறோம்.  காரணம் என்னவென்றால் ஜோதி பிரகாசித்துக் கொண்டே இருக்கிறதே அதனாலும் அல்ல.  ஆனால் ஜோதியயன்றால்; ஆரம்பமான - அமாவான - அதாவது ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து பொருள்கள் வெளியாவதற்கு ஆரம்பமான நிலையைத்தான் ஜோதி என்று சொல்வது.  அதாவது சிருஷ்டிப் பொருள்கள் - ஐம்பூதங்களும் உண்டாவதற்கு முன்பிருந்த - ஐம்பூதங்களும் ஒன்றாயிருந்த நிலை.  அதுதான் நூரே முஹம்மதிய்யா.  இன்ஸானே காமில்

இன்ஸானே காமில் என்றாலும் அதுதான். மனிதன் பூரண நிலையை

அடைந்துவிட்டால் இன்ஸானே காமில் என்று சொல்கிறார்கள்.  ஆனால் ஆரம்பமான அந்த நிலையை அடைந்தவர்கள்தான் இன்ஸானே காமில். பரிபூரணமான நூரே முஹம்மதிய்யாவின் நிலையைத்தான் இன்ஸானே காமில் என்பது.  வார்த்தைகளைப் பேசிக் கதைத்து இருப்பவர்களை இன்ஸானே காமில் என்று சொல்வது பொருந்தாது.  பொதுவாக எல்லாச் சொற்களும் ஒரே சொல்தான். ஒவ்வொருவரும் ஒரு மாதிரி இதனை உபயோகித்திருக்கின்றனர்.


விழித்தெழுக!

மறுமை வாழ்வுக்கு இவ்வுலகமே உதாரணந்தான். அறிந்தோருக்கு இங்கேயும் மரியாதை.  அங்கேயும் மரியாதை.  அறியாதோர் இம்மையில் குருடர்.  மறுமையிலும் குருடர்.தவ்ஹீத்

தவ்ஹீத் என்றால் ஒன்று என்று பொருள்! எல்லாம் ஒன்று.  அல்லாஹ் என்பதும் ஒன்று.  இதில் ஐயமில்லை.  ஆனால், எல்லாமே ஒன்று எனக் கூறிவிட்டு எதையும் செய்யலாம் என்பது அதன் பொருளல்ல.  எல்லாம் ஒன்று எனக் கூறிக் கொண்டு நாய் குரைத்தால் பயந்து ஓடி ஒளிவதேன்? இடி இடித்தால் ஏன் அஞ்ச வேண்டும்? சுப்ஹானல்லாஹ், கலிமாவெல்லாம் ஏன் ஓதி பயத்தைப் போக்கிக் கொள்ள முயல வேண்டும்.  நோய்களுக்கு ஏன் பயப்பட வேண்டும்.  பயம் தேவையில்லையே? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  வி­யம் என்னவென்றால், மற்றவற்றிற்குப் பயப்படுவதை விட்டு விட்டு அல்லாஹ்விற்குப் பயப்பட வேண்டும்.  அல்லாஹ் அல்லாதவைகள் இருக்கின்றன என நினைத்துக் கொண்டு மற்றவற்றிற்குப் பயப்படுவது  ­ரீஅத்திற்கே முரணானதாகும்!துன்யா

துன்யா என்பது ஸ்தூலமானது! ஸ்தூலமான எந்தப் பொருளுக்கும் அளவு, எடை என்பனவெல்லாம் உண்டு.  அவைகளைக் கொண்டு உதவியும் அளவுபடுத்தப்பட்டதாகவே இருக்கும்.  சிந்தனையும் அந்த ஓர் அளவோடு முடிவடைந்துவிடும்.  இத்தகையவை சிறியவைகளே.  அதனாலேயே இதற்கு ஆலம் ஸகீர் எனக் கூறப்படுகின்றது..  சூக்குமம் என்பது ஸ்தூலத்திற்கு எதிர்ச்சொல்.  சூக்குமம் பார்வைக்கு எட்டாதது.  அளவு கடந்தது.  இவ்வளவு என்றும் அளவில்லை.  சிந்திக்க சிந்திக்க அகண்டமான அளவற்ற பேரின்பத்தையும் உதவியையும் அளிப்பது! ஆதலாலே இதனை ஆலம் கபீர் என்பர்.கொடுங்கோல் ஆட்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் யதீத் என்பானின் ஆட்சியேயாம். இங்கு அன்பு காணப்படவில்லை. பதிலாக வன்பே தலையயடுத்தாடியது. பண்பற்ற கன்னெஞ்சர் ஆட்சி நடாத்தினர். மக்கள் துன்பத்துள் ஆழ்ந்தனர். யதீதின் கொடுங்கோன்மையும் ஹுஸைன் (ரலி) அவர்களின் அன்பும் மன உறுதியும் ஏற்ற மாற்றங்களாயின. இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் இறந்தாலும் கொள்கையை விட்டகலேன் என்ற திடசித்தம்  மக்களின் நல்வாழ்க்கைக்கு சீரிய உதாரணமாய் அமைந்துள்ளது காண்க.ஹுஸைன் (ரலி) அவர்களுடன் சென்றவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டின் தத்தம் வீடுகளுக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்ட போது உள்ளத் தெளிவற்ற ஒரு கூட்டம் உயிர் தப்பினோம் பிழைத்தோம் என்று திரும்பிவிட்டனர்.  தியாக உணர்வுள்ள ஒரு கூட்டம் தியாகச்செம்மல் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் கடைசிவரை இருந்தமையில் தம்மை சத்தியத்திற்காகத் தியாகம் செய்தமையும் நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.கூபாவாசிகள் அவர்களின் அக்கிரமச் செயல்களால் மிகக்கெட்டவர்கள் என்பதையும் வாக்கை நிறைவேற்ற மட்டார்கள் என்பதையும் விண்ணும் மண்ணும் யாண்டும் கூறி நிற்கும்.  இச்சாபமே அவர்களுக்குப்போதும். அன்னாரின் சமுதாயம் இன்னும் இவ்வுலகத்தே இருந்து அவர்கள் செய்த அக்கிரமங்களை விடாதுசெய்து வருகின்றமை நமக்கு கண்கூடாய்த் தெரிகின்றது.கர்பலாவில் சின்னாபின்னப் படுத்தப்பட்ட உயர்வு பொருந்திய சிரசும் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலில் உருண்டு புரண்ட செல்வமாய் பாதுகாக்கப்பட்ட கொஞ்சி விளையாடிய உடலல்லவா?  சிந்தித்துப் பாருங்கள்.  உங்கள் மனம் என்ன சொல்கிறது? நீங்கள் முஉமீன்கள்தாமே.  உங்கள் கண்ணீரையும் உதிரமாகச் சிந்துங்கள். கர்பலாவில் நமக்குப்போய்  இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் அறப்போர் புரிந்து, உதிரம் சிந்த முடியாப் போனமைக்கு இஃதாவது பகரமாகட்டும். எதிரிகளின் ஆத்துமாக்கள் சாந்தியடையாப் போகட்டும்! ஆமீன்! 

(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்.)