ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

உமர் (ரலி) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

அகழ்யுத்தம்


(கலிவிருத்தம்)


நாயகத்துடன் நடந்த விளக்கமே
நேய மின்றி நேரி லிற்றதின்
தீய வினைகள் சேர வஞ்சி
ஆய விணக்க மடுத்துங் கொள்வரே.கொண்டுகூட்டு:


   நாயகம் அவர்களுடன் நடந்த இணக்கம் நேயம் இன்றி நேர் இல் இற்றதின் தீய வினைகள் சேர அஞ்சி ஆய இணக்கம்  அடுத்தும்  கொள்வர்.பொருள்:


   நாயகம் அவர்களுடன் நடந்த ஒப்பந்தத்தை  உறவின்றி நேரிலேயே முறித்ததுக் கொண்டதனால் தீய செயல்கள் வந்துசேர இடமுண்டாகும் என்பதை அஞ்சி மேலும் ஆகவேண்டிய ஒப்பந்தத்தை மறுபடியும் செய்து கொள்ள சிந்திப்பர்.குறிப்பு:       


   இணக்கம் : ஒப்பந்தம்.  நேயம் : உறவு.  நேர் : நேர்மை.  இல் : இல்லாது.  இற்றல் : முறித்தல்.  வினை : செயல்.  அஞ்சி :  பயந்து.  ஆய : முதலாயின.  அடுத்தும் : மறுபடியும்.