ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருமுல்லை வாசல் கந்தூரிக்கு சங்கைமிகு  செய்கு நாயகம் அவர்கள் விஜயம்;


                                            அறபு இலக்கிய வளர்ச்சி நூல் வெளியீடு.சங்கைமிகு இமாம் குத்புஸ்ஸமான், ம்ஸுல் உஜூத் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்கள் 25.08.2015 அன்று திருச்சிக்கு வருகைபுரிந்தார்கள். திருச்சி விமான நிலையத்தில் கலீபாக்கள், முரீதுகள் மகிழ்வுடன் வாப்பா நாயகம் அவர்களை வரவேற்க தங்கள் இல்லத்தில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் தங்கினார்கள். 1.9.2015 செவ்வாயன்று நடைபெற்ற குத்புல் பஃரீத்  ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்களின் கந்தூரிவிழாவிற்கு ஒருநாள் முன்னதாகவே வருகை புரிந்தார்கள்.  கந்தூரி விழாவினை நடாத்தி வைத்த சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள், தங்கள் தந்தையும் செய்குமாகிய குத்புல் பஃரீத்  ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்களின் வானொலி உரைகளின் தொகுப்பான அறபு இலக்கிய வளர்ச்சி எனும் நூலை வெளியிட்டார்கள். நூலின் முதற் பிரதிகளை சங்கைமிகு சையித் மஸ்ஊத் மெளலானா அல்ஹாதீ,சையித் நூருல்அமீன் மெளலானா, மற்றும் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைத்தலைவரும் அறபு இலக்கிய வளர்ச்சி நூலினை பதிப்பித்தவருமான கலீபா, ஏ.பி.சஹாபுத்தின் பி.இ. எம்.பி.ஏ.பி.எச்.டி.மற்றும் கலீபாக்கள், நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.2.9.2015 புதன் அன்று நடைபெற்ற  மஸ்ஊத் மெளலானா  அவர்களின் மூத்த மகனார் சையித் அலி மெளலானா அவர்களின் பைத்துல் ஜமாலிய்யா இல்லத்தைத் திறந்து வைத்து துஆ செய்தார்கள். 6.09.2015  ஞாயிறு அன்று நடைபெற்ற மதுக்கூர் ராஜா முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் இல்லத் திருமணத்திற்காக மதுக்கூர் வருகை புரிந்த செய்கு நாயகம் அவர்கள் பின்னர் திருச்சி வந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்கள். சென்னையில் முரீதுகளைச் சந்தித்து நல்துஆக்கள் வழங்கி, 11.09.2015 அன்று இலங்கை புறப்பட்டார்கள்.திருமுல்லைவாசல்  கந்தூரியில் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் முரீதுகள். அஹ்பாபுகள்திரளாகக் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் அனைத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்திருந்தனர்.