ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

உணவருந்துதல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள்.  அம் மூன்று விரல்களைச் சூப்புவார்கள்.


அறிவிப்பாளர் : கஅப் இப்னு மாலிக் (ரலி)நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேரீத்தம்பழம் கொண்டுவரப்பட்டது.  பசியின் காரணத்தால் (ஏதோ ஒன்றில் சாய்ந்தவர்களாக அதைச் சாப்பிட்டதை நான் பார்த்துள்ளேன்).   


அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தொடர்ந்து பல இரவுகள் பட்டினியாக இருப்பர்.  அவர்களின் உணவு பெரும்பாலும் வாற்கோதுமையின் ரொட்டியாகவே இருக்கும். 


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் உயர் ரக கோதுமை ரொட்டி சாப்பிட்டுள்ளார்களா? என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை உயர்ரக கோதுமை ரொட்டி சாப்பிடவில்லை.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சல்லடைகள் உங்களிடம் இருந்ததா என்று கேட்கப்பட்டது.  அதற்கவர்கள், எங்களிடம் சல்லடைகள் இருந்ததில்லை என்று பதிலளித்தார்கள்.  வாற்கோதுமை வைத்து நீங்கள் எப்படி ரொட்டி செய்வீர்கள்? என்று கேட்டபோது, கோதுமையை இடித்து ஊதுவோம்.  பறக்க வேண்டியவை பறந்துவிடும்.  பின்னர் நாங்கள் (தண்ணீர் ஊற்றி) குழைத்து (ரொட்டி செய்து) கொள்வோம் என்றார்கள்.  


                    அறிவிப்பாளர் : அபூஹா´ம்.நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன்.  எனக்காக உணவு கொண்டுவரச் சொன்னார்கள்.  ஏதேனும் உணவை வயிறு நிரம்ப உண்டால், நான் அழ நினைத்தால் அழுதுவிடுவேன் என்றார்கள்.  ஏன் என்று நான் கேட்டேன்.  அதற்கவர்கள், நபியவர்கள் இவ்வுலகைப் பிரியும்போது இருந்த நிலையை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஒரு நாளில் இரண்டு தடவை ரொட்டியும் இறைச்சியும் சேர்த்து வயிறார அவர்கள் உண்டதில்லை என்று கூறினார்கள்.    


அறிவிப்பாளர் : மஸ்ரூக் (ரலி)நாங்கள் அபூமூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்களிடம் இருந்தபோது கோழிக்கறி கொண்டு வரப்பட்டது.  அக்கூட்டத்திலிருந்த ஒருவர் பின்வாங்கினார்.  உமக்கு என்ன நேர்ந்தது? என்று அபூமூஸா (ரலி) வினவினார்கள்.  அதற்கவர், நான் அசுத்தமான ஒன்றைச் சாப்பிடப் பார்த்தேன்.  உடன் இதை (இனிமேல்) சாப்பிட மாட்டேன் என்று சத்தியமிட்டுக் கொண்டேன் என்றார்.  நெருங்கி வாரும் (உண்ணும்!) ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோழிக்கறி சாப்பிட்டதை நான் பார்த்துள்ளேன் என்று அபூமூஸா (ரலி) கூறினார்கள். 


                                                                                                                    அறிவிப்பாளர் : ஸஹ்தம் (ரலி)