ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்

அஹ்லபைத்தார் அருமை!பரஸ்தக் என்ற புலவர் மக்கா சென்றிருந்தார். ஹஜ்ஜின் காலமாதலால் ஜன நெருக்கடி அதிகமிருந்தது.  அப்துல் மலிக் அரசனின் மகன் இளவரசன் வலீது ஹஜருல் அஸ்வத் கல்லின் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.  

அவ்வேளை தியாகிகள் நாயகம் ஹுஸைன் (ரலி) அவர்களின் மகனார் வலீகள் திலகம் யஸய்னுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள்.  ஜனத்திரள் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறதைக் கண்ட வலீத் அலட்சியமாக இவர் யார் என்று கேட்டான்.  இவ்வார்த்தை புலவர் பரஸ்தக் அவர்களுக்கு கோபத்தை மூட்டியது.  அவர்கள் உடனே கீழ் வரும் கண்டனக் கவிதையை அக்கூட்டத்தில் பாடினார்கள்.


“இவரின் கவுரவத்தை (காலடியை) பள்ளத்தாக்குகளும், பைத்துல்லாவும் (ஹரமும்) ஹில்லும் அறியும்.  

இவர் அல்லாஹுவின் எல்லா அடியார்களிலும் மேலானவரின் புதல்வர்.

இவர் பக்தரும் துப்புரவானவரும் தலைவருமாவார்.  

இவர் யார்? என்ற உமது சொல் அவருக்குத் தங்கடம் செய்யாது.

நீர் அறியாத இவரை அறபுகளும் அஜமிகளும் அறிவர்.  

குறைஷ்கள் இவரைக் கண்டால் சங்கைகளிலேயே சங்கை முடிவடையும் எனக் கூறுவர்.

இவர் ஒரு கூட்டத்தில் உள்ளவர். இவர்களை உவத்தல் மார்க்கமாகும்.  

இவர்களைக்கோபித்தல் குப்ராகும். அவர்களை அணுகுதல் பாதுகாப்பும் தப்புதலுமாகும்.”


அறபு இலக்கிய வளர்ச்சி நூலில்  சங்çமிகு குத்புல் ஃபரீத் அஸ்ஸையித் யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்கள்.
தூய நன்னபிகள் பேரர்
துதிசேர் ஹஸன் ஹுஸைனார்
ஆயவென் பாட்டனாரை
அன்பாய்த் துதிக்கின்றேனே.


மறைஞானப் பேழை நிறுவனர் 

அஷ்ஷைகுல் காமில் 
குத்புஸ்ஸமான் ஷ­ம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது
 கலீல் அவ்ன் மெளலானா 

அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்கள்