ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் பதில்கள்


தொகுத்தவர் : பேராசிரியர், முனைவர்,. சுல்தான்  முஹிய்யுத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய், உத்தமபாளையம்.


ஜியாரத்:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்இதற்கு முன் ஜியாரத் செய்வதை நான் தடுத்திருந்தேன்இனிமேல் அதைத் தொடருங்கள். (முஸ்லிம்.)


உயரமான கப்ரை தரைமட்டமாக்க வேண்டும் என அர்த்தமில்லைசரிபடுத்துதல் என்றுதான் அர்த்தம். முசன்னமன் என்னும் வார்த்தை ஹதீஸில் கையாளப்பட்டுள்ளதுஅதற்கு ஒட்டகத்திமில் போல் உயரமாக கபுர் இருந்தது என்று அர்த்தம்அவர்கள் கூறும் விளக்கம் தவறானதுகபுருக்கு உள்ளே பூசக் கூடாது என அர்த்தம்கபுருக்கு மேலே வீடு, கடையயல்லாம் கட்டக்கூடாது என அர்த்தம்.


மனிதருக்கு மனிதர் உதவி செய்வதுபோலத்தான் வலிமார்கள் நமக்காக முடிந்த அளவு உதவி செய்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். பயணம் புறப்பட்டுச் செல்வதாக இருந்தால் 3 பள்ளிகளுக்கு  மட்டுமே செல்லுங்கள் எனஇது பள்ளிவாசல்  சம்மந்தப்பட்டதுஇதை அவர்கள் தவறாக ஜியாரத்திற்கு என்று திரித்துக் கூறுகிறார்கள்ஏன் 3 பள்ளிகளுக்குப் போக வேண்டும் என்று சொன்னார்கள் என்றால்,


1.மஸ்ஜிதுல் ஹராமில் தொழுதால் மற்ற பள்ளிகளில் தொழுவதை விட 1,00,000 மடங்கு நன்மை அதிகம்.

2.மஸ்ஜிதுந் நபவியில் தொழுதால் 1000 மடங்கு நன்மை அதிகம்.

3.பைத்துல் முகத்திஸ்ஸில் தொழுதால் 500 மடங்கு நன்மை அதிகம்.


தொழுவதற்கு என்று நீங்கள் பயணம் மேற்கொண்டால் இந்த 3 பள்ளிகளுக்கும் செல்லுங்கள் என்று சொன்னார்கள்தர்ஹாவிற்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை.


சென்னையில் உள்ளவர் தொழுவதற்காக மெனக்கெட்டு மற்ற ஊர் பள்ளிக்கு... உதாரணமாக.... திருச்சியில் ஓர் பள்ளிக்குச் சென்று தொழத் தேவையில்லைஏனென்றால் இரண்டு பள்ளிகளில் தொழதாலும் ஒரே நன்மைதான்எனவே தான் நன்மையைத் தேடிப் பயணம் மேற்கொண்டால் 3 பள்ளிகளுக்கும் செல்லுங்கள் எனச் சொன்னார்கள்.


இறை நேசர்கள், முஃமின்கள் கபுரில் இருக்கும்போது மற்றவர்களுக்கு துஆ செய்கிறார்கள். - அஹ்மத்.


ஜியாரத் செய்வது மறுமையை நினைவுபடுத்தும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். இப்போது தர்ஹாக்களில் மறுமையின் நினைவு வரவில்çயே என்று சொன்னால் அது சொல்பவருடைய குறைபாடு.


ஒருவர் மது அருந்தும் பழக்கம் உடையவராக இருக்கிறார்தொழுகையை மேற்கொண்டால் தவறுகள் அனைத்தும் அழியும் என அல்லாஹ் கூறுகிறான்ஒருவர்  கூறுகிறார்நான் தொழுகையை மேற்கொண்டும் என் தவறு அழியவில்லை என.   அது அவருடைய குறைபாடுஅதே போலத்தான் ஜியாரத் செய்வது  நாம் மறுமையின்ஞாபகம் வருமாறு ஜியாரத் செய்ய வேண்டும்.


அந்தக் காலத்தில் கபுருக்கு மேலே பள்ளியைக் கட்டி விடுவார்கள்இதைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கண்டித்தார்கள். இந்தக் கருத்தை அவர்கள் அப்படியே திரித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கபுர் கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்கள் என வஹ்ஹாபிகள்  கூறி வருகிறார்கள்


கபுரை முத்தமிட்டால் கபுர் வணங்கி என்று கூறுகிறார்கள்குழந்தையை முத்தமிட்டார் குழந்தை வணங்கியாஹஜருல் அஸ்வத்  கல்லை முத்தமிட்டால் கல் வணங்கியா? ஹஜருல் அஸ்வத் கல்லை அல்லாஹ் முத்தமிடச் சொன்னான்அதனால் முத்தமிடுகிறோம் என அவர்கள் சொன்னால், குழந்தையை அல்லாஹ் முத்தமிடச் சொன்னானா?இப்போது மட்டும் அது அன்பின் வெளிப்பாடு எனத் தெரிகிறதேஅதே போலத்தான் கப்ரை முத்தமிடுவதும் அன்பின் வெளிப்பாடுஅவரவர் பிரியத்திற்கேற்ப இது நடக்கும்முத்தமிடலாம், முத்தமிடாமலும் இருக்கலாம். அது அவரவர் பிரியம்கண்டிப்பாக முத்தமிட வேண்டுமென்றுயாரும் சொல்வில்லை. அதே நேரத்தில் முத்தமிட்டால் ´ர்க் என்றும் கூறக் கூடாதுஏனென்றால் கபுரை முத்தமிட்டதற்கு ஆதாரமுள்ளது. அபூ அய்யூப் அன்சாரி (ரலி) அவர்கள் கபுரை முத்தமிட்டார்கள்அஹ்மத்


மேலும் சிலர் கபுரில் போய் சஜ்தா செய்கிறார்களே. சஜ்தா அல்லாஹ்விற்கு மட்டும் தானே செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்இதிலிருந்து அவர்கள் குர்ஆனைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.


அல்லாஹ் இப்லீஸை தனக்கு சஜ்தா செய்யச் சொன்னான்இப்லீஸ் சஜ்தா செய்தான்அல்லாஹ் இப்லீஸை ஆதம் (அலை) அவர்களுக்கு சஜ்தா செய்யச் சொன்னான்இப்லீஸ் மண்ணால் படைக்கப்பட்ட ஆதம் (அலை)அவர்களுக்கு சஜ்தா செய்ய மாட்டேன்உனக்கு மட்டும்தான் செய்வேன் என்று கூறினான்வணக்கத்திலும், தொழுகையிலும் சிறந்த இப்லீஸை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானாஇல்லவே இல்லை. தூக்கி எறிந்தான்இதிலிருந்து அல்லாஹ்விற்கு செய்யும் சஜ்தா வணக்கம், ஆதம் (அலை) அவர்களுக்கு செய்யும் சஜ்தா மரியாதை என அறியலாம்.


மேலும் சஜ்தா செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளனமுதலில் நாம் ஒளுச் செய்ய வேண்டும்தக்பீர் கட்ட வேண்டும்பின்னர் நிய்யத் செய்ய வேண்டும்அப்போதுதான் சஜ்தா. ஆனால் நாம் கபுருக்குச் சென்று இதையயல்லாம் செய்கிறோமா? இல்லையே! பிறகு  எப்படி இது சஜ்தாவாகும்இது எல்லாம் மரியாதை மற்றும் அன்பின் வெளிப்பாடாகும்இதற்கு உதாரணம்நபி  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுர் மேல் பிலால் (ரலி) அவர்கள் தங்களது முகத்தைப் புரட்டிப் புரட்டி எடுத்தார்கள் -இப்னு அஸாக்கிர்.


 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித்தான் பள்ளியில் தொழுகிறோம்தர்ஹாவில் ஜியாரத் செய்கிறோம்பள்ளியில் இஃதிகாஃப் இருக்கிறோம்தர்ஹாவில் இருக்க முடியமா? இது போல இரண்டிற்கும் வெவ்வேறு சட்டங்கள் உள்ளனஆனால் இரண்டுமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன


மெளலிது:

ஹஸ்ஸானு இப்னு தாபித் (ரலி) அவர்களுக்கு   நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்எம்மைப் புகழும் காலம் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்  -  புகாரீ.


ஹஸ்ஸானு இப்னு தாபித் அவர்கள் கவிதை பாடிக் கொண்டிருந்தார்கள்உமர் (ரலி) அவர்கள் வந்து ஆட்சேபித்த போது உம்மைவிடச் சிறந்தவர் அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 


அவர்கள் இருக்கும்போதே நான் பாடியிருக்கிறேன் என்று சொன்னவுடன் அப்படியே போய்விட்டார்கள்      - புகாரீ.

சிறுமிகள் தஃப் அடித்துக் கொண்டு பத்று சஹாபாக்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்அப்போது சிறுமிகள்  எங்களிடம் ஒரு நபி இருக்கிறார்அவர் நாளை என்ன நடக்கும் என்று சொல்வார் எனப் புகழ்ந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை விட்டுவிட்டு இதற்கு முன் சொன்னதைச் சொல்லுங்கள் என்றார்கள்உடனே வஹ்ஹாபிகள் பார்த்தீர்களா. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களே தம்மைப் புகழ வேண்டாமென்று சொல்லிவிட்டார்களேஏன் நீங்கள் மெளலிது ஓதுகிறீர்கள் என்று கேட்பார்கள்அவர்களுக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைப் புகழ வேண்டாம் என்று சொல்லவில்லைபதுறு சஹாபாக்களின் சிறப்புக் கருதி அவர்களைப் படியுங்கள் என்றார்கள்இதிலிருந்து நாம் பதுறு சஹாபாக்கள் மெளலிதும் ஓதலாம் என்பதை அறியலாம்.


மீலாது, மெளலிது எல்லாம் தேவையில்லைதொழுகை, நோன்பு இருந்தாலே மறுமையில் வெற்றி பெற்று விடலாம் எனச் சிலர் சொல்கின்றார்களே?

அல்லாஹ் இவர்களிடம் சொன்னானா? நபி (ஸல்) அவர்களைப் புகழக் கூடாது, அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் பரப்பக் கூடாது, மாறாக நீங்கள் தொழுகையை, நோன்பை மட்டும் பேணிக் கொள்ளுங்கள்மறுமையில் வெற்றி பெற்று விடுவீர்கள் என்றுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களது பெயர் முஹம்மது என்பதேபுகழுக்குரியவர் என்ற அர்த்தமுடையதுஅல்லாஹ்வே அவர்களைப் புகழ்கிறான், ஸலவாத்து கூறுகிறான், மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு பணிக்கிறான்அப்படியிருக்க இவர்களால், அல்லாஹ் எங்களுக்கு வேண்டும், அவனைத்தான் நாங்கள் வழிபடுகிறோம்ஆனல் அவன் சொன்னதை அனைத்தும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று எப்படிக் கூற முடிகிறதுவணக்கம் மட்டும் போதும் என்றிருந்தாலே இப்லீஸ் வெற்றி பெற்றிருப்பான்மதிக்க வேண்டியவர்களை மதிக்கவும் செய்ய வேண்டும்.


இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:

1.  இறைவன் இறைத்தூதரை ஒப்புக் கொள்ள வேண்டும்.

2.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும்.

3.  இறைவனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.                  (தொடரும்)