ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை


 

ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


சந்தோஷம்


மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அனுதினமும் காலையில் எழுந்தவுடன் குறைந்தது ஜந்து நிமிடங்களாவது “நான் நன்றாக இருக்கின்றேன்; நான் சுகமாக இருக்கின்றேன்; நான் நோய் இல்லாமல் இருக்கின்றேன்; எனக்கு எந்தக் கவலையும் இல்லை; நான் நல்ல நிலையிலுள்ளேன்; இன்று நான் சந்தோஷமாக இருப்பேன் என நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும்!

இவற்றோடு அதிகாலை (ஃபஜ்ரு) தொழுகையை கட்டாயம் அனுஷ்டிப்பதோடு திருக்குர்ஆன் ஷரீஃபையும்அவசியம் ஓதி வரவேண்டும்.

சிலரிடம் எப்படி இருக்கின்றீர்கள்? எனக் கேட்டால் “ரொம்ப சிரமமாக-கஷ்டமாக இருக்கிறது; தொழில் சரியில்லை; கஷ்டம்... கஷ்டம்” எனக் கூறி கஷ்டத்தையும் - வருத்தத்தையும் தாங்களே வருத்திக் கொள்கிறார்கள்.

அல்லாஹ் எனக்கு எப்போதோ ரஹ்மத் செய்வான் - உதவி செய்வான் எனக் கூறாமல் இப்போதும் அல்லாஹ் எனக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறான் எனக்கூறி வாருங்கள். “நான் நன்றாக இருக்கின்றேன்” என்னும் திடமான எண்ணமே உங்களை நல்ல நிலைக்கு உயர்த்திச் சென்றுவிடும். இது அனைத்திலும் மிக முக்கியம்!

எந்த நேரத்திலும் மனம் சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும்! அவ்வாறு சந்தோஷமாக விருந்தால்தான் வாழ்வும் சந்தோஷமாக விருக்கும்!

ஒரு சிறு விஷயத்திற்கு கடைசிவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மனோ நிலைகள் பாதிக்கப்பட்டு கஷ்டமே வந்தடைந்து கொண்டிருக்கும். ஆதலால் எந்தக் கஷ்டநிலையிலும் சந்தோஷப்பட்டால் - அந்தக் கஷ்டம் நீங்கி - சந்தோஷ நிலை உண்டாகும். இஃது இயற்கை. கவலை வருமாயின் அவற்றை மறந்து வேறொன்றில் தன்னை செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

(மனிதா நூலில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்)


இரண்டறக் கலத்தல் என்றால் என்ன?


இரண்டறக் கலத்தல் என்பது பரிபூரண எண்ணத்தால், நினைவால், அறிவாற்றலால் உண்டாவது. உடல் மறைவது மட்டுமல்ல. உடலை அழித்துக் கொள்வது மட்டுமல்ல.

உடலும் உயிரும் எப்படிக் கலந்திருக்கிறதோ பனிக்கட்டியும் நீரும் எப்படிக் கலக்கிறதோ அப்படிக் கலப்பதே “பனாவும்” இரண்டறக் கலத்தலுமாகும். மூதூ கப்லல் மவ்த்” எனும் எமது ஆருயிர் பெருமானார் வாக்குத்தான் இது.

மனிதா நூலில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்