ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    May 2014    »    ஜமாலிய்யா தோட்டத்தில்ஜமாலிய்யா தோட்டத்தில்நாம்எப்படி மற்றவர்களுடன் நடந்து கொள்கிறோமோ அப்படியே தான் மற்றவர்களும் நம்முடன் நடந்து கொள்வார்கள்நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படியேதான் மற்றவர்களும்  எண்ணுவார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்

நாம் ஒன்றைச் செய்தபின் நாம் செய்தவற்றில் மற்றவர்கள் குறை காணுவார்களா எனப் பின்னால் எண்ணிப்பார்த்துக் கொள்ள வேண்டும்
.


எப்போதும் எம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் சிந்தித்துக் கொள்ள வேண்டும் . நமக்குப்பொருத்தமற்றவற்றை மற்றவருக்குச் செய்வதோ செய்விப்பதோ கூடாது. நாம் நமக்கு அருவருப்பாகக் கருதும் ஒன்றை மற்றவர்கள் முன்னில் செய்வதை தவிர்த்துக் கொள்ளல்வேண்டும் .

மற்றவருக்காக , அவர் எம்மை நல்லவர் எனக் கூறுவதற்காக , நாம் நல்லவர் போல் நடித்துக் கொள்ளக் கூடாது . எம் மனசாட்சிக்கு நாம் நல்லவராக நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நம் நடத்தையில் அல்லது பேச்சில் பிழை கண்டு திருத்தின் அது உண்மையாக விருந்தால் ஒப்புக்கொண்டுதிருத்திக் கொள்ளல் வேண்டும் .


ஒரு சிறுபிள்ளை சிறந்த அறிவுடையவராகவிருந்தால் ஒரு முதியவரோ அல்லது அக்கலையில் தேர்ச்சிபெற்றவரோ அச்சிறுவரிடம் போய்கற்றுக்கொள்ள வெட்கப்படக்கூடாது .

தற்பெருமைகொள்ள வேண்டாம் . எல்லாம் கற்றோமென்றிருக்க வேண்டாம். நாம் கற்றதொன்றுமில்லையெனக்கருதிக் கண்டதெல்லாம் கற்கவும் .

பயனற்றதை அலசி ஆராயவும் அவற்றிலும் முத்துகள் மறைந்திருக்கலாம். அவற்றைதேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அவசியமற்றதுஎன நிச்சயம் கொண்டால் தள்ளிவிடவும் .


( சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் பொன்மொழிகள் தொகுப்பான - மனிதா - நூலிருந்து ...)  கொய்தமலர்