ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    May2014    »    இறைவனை   அடையும் வழி


இறைவனை அடையும் வழி !கலீபா பு . முஹம்மதுகாசீம் ய . றீஉ ., னி . சி d., ஹக்கிய்யுல்   காதிரிய் , பெரம்பலூர் .சூஃபி ஒருவரிடம் சென்று இறைவனின் நேசத்தைப் பெறுவதற்கான வழிகள் யாவை? என்று ஒருவர் வினவியபோது அவர் கூறினார். இவ்வுலகில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அத்தனை வழிகள் உள்ளன. ஆனால், அதை எய்தப் பெறுவதற்கான நேரிய வழி எதுவென்றால், உடைந்த இதயங்களுக்கு ஆறுதல் கூறுவதேயாகும். நான்  இந்த வழி மூலமே இறைவனை அடைந்தேன். என்னைப் பின்பற்றுபவர்களும் இதனையே செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் விடையளித்ததாகவும் அவர்கள் கூறினர். தம்மிடம் வந்து, துயருரைப்பவர்களின் கண்ணீர்க் கதைகளை செவிதாழ்த்திக்கேட்கும் அவர்கள், அவர்களின் துயர் துடைக்குமாறு அரசர்களும், அதிகாரிகளும் அடிக்கடி மடல் தீட்டி வந்தார்கள்.


ஒரு தடவை அரசாங்க அலுவலர்கள்காஜா ஆபித் ஸஃபராபாதியின் உடைமைகளை அபகரித்துச் சென்ற பொழுது, அவர் ஷைகு யஹ்யா மனேரி ( ரஹ் ) அவர்களிடம் வந்து முறையிட்டார். அவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், சுல்தான் பைரோஸ் ஷா ஷர்க்கிக்கு ஒரு மடலும் தீட்டினர். அதில் அவர்கள் நீதி வழங்குவதன் அவசியத்தைப்பற்றி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழி ஒன்றைக் குறிப்பிட்டு, காஜா ஆபித் ஸஃபராபாதிக்கு நீதி வழங்கப்படவேண்டுமென்று கூறாமல் கூறிய அழகு, படித்துப் படித்து இன்புறத் தக்கதாகும் . அவர்கள் எழுதினார்கள் ,


துன்புறுவோருக்கு ஆறுதல் நல்குபவராகவும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அபயம் அளிப்பவராகவும், அனைவருக்கும் நீதி வழங்குபவராகவும் உள்ள ஒருவரை , அரியணை மீது அமர்த்தி அரசாளச் செய்த அல்லாஹ்வுக்கேஎல்லாப் புகழும். இந்த மாண்பார்ந்த நற்பண்பைப் பற்றி, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்எடுத்துரைக்கும் பொழுது, அறுபதாண்டு வணக்கத்தைவிட , நீதி செலுத்துவதில் செலவிடும் ஒரு கணம்சிறப்புடையதாகும் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளனர் . இம்மடல் கண்ட கிடைத்த கணமே காஜா ஆபித்ஸஃபராபாதியிடமிருந்து அநியாயமாக அபகரிக்கப்பட்ட உடைமைகளை, அவரிடம் ஒப்படைக்குமாறு பணித்ததோடு, அவருக்குத் தீங்கு செய்த அலுவலர்களுக்குத்தகுந்த தண்டனையும் விதித்தார் சுல்தான்.


அவர்கள், தாம் கல்வி பயின்ற ஊரான சொனார்கான் மீதும், அதன் சூழல் மீதும் கொண்டிருந்த பற்றும், பாசமும் அளவற்றதாக இருந்தது; அப்பகுதி மக்கள் நலமாகவும் , வளமாகவும் வாழ வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்கள்என்ற செய்தி மெளலானா முஸஃப்பர் பல்கி , வங்க மன்னர் சுல்தான் கியாஸூத்தீனுக்கு எழுதிய மடலிலிருந்துதெரிய வருகிறது . அவர் எழுதினார்: ஷைகு ஷ ­ ரஃபுத்தீன், இந்நாட்டு மக்களின் நலனிலும் , நல்வாழ்விலும், பெரிதும் அக்கரை கொண்டுள்ளார்அல்லாஹ்வின்மா பெரும் சேனையாகிய அவர், இம்மண் மீது அடியெடுத்துவைத்தது, அல்லாஹ் இந்நாட்டிற்குச் செய்த மகத்தான பேறாகும்.


மக்களுக்குப்பணி செய்வதில் மட்டுமின்றி , அனைத்திலும் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரின் அடிச்சுவடுகளையே அணுவத்தனையும் பிசகாது பின்பற்றி ஒழுகி வந்தார்கள் . நற்பண்புகள் என்றால் அல்லாஹ்வின் கட்டளை களையும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளையும்  பின்பற்றுவதேயாகும்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகள் நம் இதயத்திற்கு இன்பம் பயப்பனவாய் உள்ளன. அவர்களின் உம்மத் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவனும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவடு பற்றி ஒழுகுவது இன்றியமையாததாகும். மனிதனின் கதிமோட்சம் அணுவத்தனையும் பிசகாது பின்பற்றி ஒழுகுவதிலேதான் உள்ளது என்று கூறிய அவர்கள், தம் கூற்றுக்கு ஆதாரமாக, ( நபியே ! மனிதர்களை நோக்கி ) நீர் கூறும். நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான் (3: 31) என்ற திருவசனத்தை எடுத்துரைத்தனர் . இவ்வாறு கூறிய அவர்கள் , இத்திருவசனத்திற்கு விளக்கம் போன்று ஒரு சூஃபி பாடிய பின்வரும் கவிதையையும் உணர்ச்சி மீக்குற்று பாடிப் பரவசமுற்றார்கள் .

புது வழியைத்தேடித்திரியாதே. அவருடைய வாயிலிருந்து வந்ததே வேதவாக்கு . 
உன்னுடைய இதழ்களுக்கு முத்திரையிட்டு விடு; வீண் பிதற்றல்களை விட்டொழிப்பாயாக .

அவர் சொன்னதெல்லாம் அல்லாஹ் சொன்னவையேயாம்; அவர் செய்வதெல்லாம் அல்லாஹ் செய்வதேயாகும். மணிமகுடம் பூண விரும்புவாயானால் அவரிடம்தூசிபோன்று நடந்து கொள்வாயாக !

நீ உன் வழியே செல்ல விரும்புவாயானால் முதலில் நீ உன்னைத் தாழ்மைப்படுத்தி , அவரின் பாதையின் தூசியாக ஆக்கிக் கொள்வாயாக ! இல்லையேல் , வானவராயினும் சரி , மண்ணைக் கவ்வ வேண்டி ஏற்பட்டுவிடும் .


எனவே உலகாயுதப்பொருள்கள் மீது அவர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமற் போய் விட்டது. ஆளுநர் மஜ்துல் முல்க் மீது சுல்தான் முஹம்மதுதுக்ளக் சினமுறக் கூடாது என்பதற்காகத் தாம் ஏற்றுக் கொண்ட மானியத்திற்கான பத்திரத்தை, சுல்தான் பைரோஸ் துக்ளக் அரியணை ஏறியதும், அவரிடம் அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள். மேலும் சுல்தான் முஹம்மது துக்ளக், தமக்காக விரிவுபடுத்திய தவமடத்தின் பகுதியின் மீது அவர்களுக்கிருந்த கவனமும் நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது.


ஒரு நள்ளிரவு அவர்களின் நண்பர் ஷைகு ஹமீதுத்தீன் அவர்களைப் பார்க்க தவமடம் வந்தார்இருவரும் முற்ற வெளியில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது ஷைகு ஹமீதுத்தீன், ஷைகு யஹ்யா மனேரி ( ரஹ் ) அவர்களை நோக்கி , இந்த முகப்பைச் சிறிது விரிவுபடுத்தினால் அழகாக இருக்கும் என்று கூறினார். அது கேட்ட அவர்கள் எழுந்துவிட்டார்கள்நீர் இந்த நள்ளிரவில் ஏதாவது மார்க்கம் பற்றிய பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடி வந்திருப்பீர் என்றல்லவோ எண்ணினேன். நான் எண்ணியது தவறாகப் போய்விட்டது. இந்த முகப்பை விரிவுபடுத்த வேண்டுமென்றுகூறுகிறீர்அதற்கு மாறாக இடிக்கப்பட வேண்டுமென்றல்லவோ கூறியிருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.


அவர்களின் ஆத்மிக உயர்வைக் கண்டு மக்கள் சாரிசாரியாக வந்து அவர்களிடம் பைஅத் ( தீட்சை ) பெற்றுச் சென்றார்கள். இவ்வாறு அவர்களிடம் பைஅத் பெற்றவர்கள் , ஓரிலட்சத்துக்கு அதிகமாக இருக்குமென்றும், அவர்களில் முந்நூறு பேருக்கும் அதிகமானோர், விலாயத் எய்தப் பெற்றனர் என்றும் கூறப்படுகிறதுஏராளமான யோகிகளும் அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத்தழுவி, இஸ்லாமிய ஞானப் பாட்டையில் அடியெடுத்துவைத்து நடந்தார்கள். அவர்களின் ஆன்மிகமாணவர்கள், அவர்களைச் சூழ வீற்றிருந்து,அவர்களிடம் கேட்டும் ஐயங்களுக்கு, அவரவர்களின் அறிவிற்கு ஏற்ற வண்ணம் அவர்கள்சிறந்த விளக்கம் பகர்ந்து வந்தார்கள்.   தொலைவிலுள்ளவர்கள் , அவர்களுக்கு ஐய விளக்கம் வேண்டி மடல் தீட்டியபொழுது , அதற்கு அவர்கள் சிறந்த முறையில் பதில்எழுதி வந்தார்கள்.


மேலும் செளஸாவில் வாழ்ந்து வந்த அவர்களின்ஆன்மீக மாணவர் காஜி ஷ ­ ம்சுத்தீன், தாம் தொலைவில் வாழ்ந்து வருவதால், அவர்களை அடிக்கடி சந்தித்து ஆன்மீக அறிவுபெற இயலவில்லை என்றும், எனவே தமக்கு மடல்மூலம் ஆன்மீக அறிவு ஊட்டுமாறும் வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டு கோளுக் கிணங்கி , அவருக்கு அவர்கள் பல மடல்கள் தீட்டினர். அவற்றை அவர்களின் தவமடத்திலுள்ள சிலர்பிரதி எடுத்து வைத்துக் கொண்டனர் .


அவர்களின் மற்றொரு ஆன்மீக மாணவரான ஷைகு முஸஃப்பர் தமக்கு ஆன்மீகப் பாதையில் ஏற்பட்ட இடுக்கண்களை எடுத்துரைத்து, அறிவுரை வேண்டிய பொழுது , அவருக்கு அறிவுரை கூறும் முறையில் 28 மடல்கள் வரைந்தனர். அவை மிகவும் உயரிய ஆன்மீக தத்துவங்கள்நிறைந்ததாய் இருந்ததால், தாம் இறந்ததும் அவற்றையும்தம்முடன் வைத்துப் புதைத்து விடுமாறு கூறிச் சென்றார் அவர்.   அவ்விதமேசெய்யப்பட்டது. எனினும் அவற்றைப் படித்த அவரின் ஆன்மீகமாணவர்கள் அவற்றைப் பிரதி செய்து வைத்திருந்தனர் . ஆக , அவர்கள் எழுதிய அத்தனை மடல்களும் , இப்பொழுது உள்ளன . அவை மக்தூபாதெ - பிஸ்தோஹஷ்த் என்ற பெயருடனும் வெளிவந்துள்ளன.


அவர்களின் கடிதங்கள் தெளிவான பார்ஸி மொழியில் எழுதப்பட்டுள்ளன .   அவை அவர்களின் ஆழிய அறிவின் பிரதிபலிப்பாக உள்ளன. அவர்கள் ஒரு மடலில் இறைவனின் மாண்பினைப்பற்றிப் பின்வருமாறு எழுதுகின்றார்கள்:


இறைவன் ஒரு சிலருக்கு மட்டும் செல்வத்தையும் வள வாழ்வையும் நல்கி மற்றவர்களுக்கு அவ்விதம் செய்யாது ஏன் விட்டொழிந்தான் என்று வினவ, எவனுக்கு எந்த உரிமை இருக்கிறது? ஓர் அரசன் ஒருவனைத் தன்னுடைய அமைச்சனாகவும் , மற்றொருவனைத் தன்னுடைய சிறு ஊழியனாகவும் நியமிக்கின்றானல்லவா! அது போன்றே இறைவனும், ஒருவனைச் செல்வனாகவும், சீமானாகவும், உயர்ந்தவனாகவும் , மற்றொருவனை வறிஞனாகவும், ஏழையாகவும், தாழ்ந்தவனாகவும் செய்கிறான் . கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்த புலைல்இப்னு இயாலை, ஒரு நொடியில் தன்னுடைய அருள் நேசராக ஆக்கிவிட்டான். நானூறு ஆண்டுகள் தம் தொழுகை விரிப்பில்அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த பல்அம் பாவூரை, ஒரு நொடியில் தன் சினத்திற்கு இலக்கானவராக ஆக்கிவிட்டான். உருவத்தொழும்பராக இருந்த உமரை , உன்னத பதவியிலாக்கி, ஏழாயிரம் ஆண்டுகள் தன்னை வணங்கிக் கொண்டிருந்த அஸாஸீஸைத் தன் முனிவிற்கு ஆளானவனாக ஆக்கி விட்டான். அவனது அருட்கண் பார்வை நம்மீது விழின், நம்முடைய தவறுகள் ஒழுங்குகளாக மாறிவிடுகின்றன . நம்முடைய குறைகள்  நிறைகளாக உருவாகி விடுகின்றன .       நம்முடையஅழகற்ற தன்மை சர்வசக்தியிலுள்ள இறைவனின் செயல்களை ஏன் , எப்படி , எதற்காக என்று கேட்பது இறையறிவு இல்லாதவனின்கேள்விகளாகும். பொதுவாக இந்நாட்டு மன்னரின் செயல்களை விமர்சிக்கக் கூடாது எனும்போது இறை என்ற மாமன்னரின் செயல்களை விமர்சிக்கலாமா ?