ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai   »    2014    »    May2014    »      தலையங்கம்தலையங்கம்


அஞ்சற்க ! அல்லாஹ் நம்முடன் !இந்தியாவில் தேர்தல் முடிந்து பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடித்துவிட்டது .ஆர் . எஸ் . எஸ் . ஸின் வழிகாட்டுதலின்படி அது செயல்படுவதாலும் , ஏற்கனவே குஜராத்தில் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் மோடி பிரதமராவதாலும் முஸ்லிம்கள் மனங்களிலெல்லாம் ஓர் இனம் புரியாத அச்சம் பரவியிருக்கிறது .

முஸ்லிம்கள் மட்டுமல்ல . கிருத்தவர்கள் , தலித்கள் , ஏனைய சிறுபான்மையோர் அனைவருக்கும் அந்த அச்சம் தோன்றுவதில் வியப்பு ஒன்றுமில்லை . ஏனெனில் கடந்த கால ஆர் . எஸ் . எஸ்ஸின் வரலாறு நாட்டு மக்கள் அனைவரது மனத்திரையிலும் நிழலாடுகிறது. ஆனால் இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை .

   

ஏனெனில் , பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் . அவர்களின் அருமைத் தோழர் ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் ( ரலி ) அவர்களும் ஹிஜ்ரத் இரவில் பதுங்கிய தெளர் குகையை எதிரிகள் சூழ்ந்து நிற்க , அச்சப்பட்ட தோழர் அபூபக்ருக்கு அண்ணலார் அஞ்சாதீர் ! அல்லாஹ் நம்முடன் என்று ஆசுவாசப்படுத்தினார்கள் . அந்த வழிகாட்டுதல் இன்று எமக்கும் பொருந்துகிறது .

    

ஆம் ! உண்மையில் இறைவனையும் அவன் திருத்தூதரையும் ஏற்று கலிமா சொன்ன முஸ்லிம்களின் காப்புறுதி இறைவனின் பொறுப்பில் உள்ளது
    

ஏனெனில் ....

    

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் இந்த சமுதாயம் அழிந்து விடவில்லை .

    

குழந்தைகளையெல்லாம் கொன்று குவித்த ஃபிர்அவ்னின் காலத்தில்   இந்த சமூகம் அழிந்துவிடவில்லை .

நம்ரூதின் காலத்திலும் இது அழிந்துவிடவில்லை . அபூஜஹ்லின் அராஜகத்திலும் அழிந்துவிடவில்லை . அதற்குப் பின் தோன்றிய தார்த்தாரியார்கள் போன்ற அநியாயக்காரர்களின் படையெடுப்புகளாலும் இது அழிந்துவிடவில்லை .

    

குர்ஆனையும் - ஹதீஸையும் - பெருமானாரையும் - அவர்கள் பேரன்பையும் - சன்மார்க்கத்தையும் - சுமந்திருக்கும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உதவி அவர்களின் ஏந்தும் கைகளுக்கும் கேட்கும் நாவுகளுக்கும் அருகிலேயே இருக்கிறது .

    

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் அருளுவார்கள் ; நம் எதிரிகள் நம்மைச் சோதிக்கவில்லை . அவர்களே சோதிக்கப்படுகிறார்கள் என .

    

எனவே முஸ்லிம்கள் அஞ்சாமல் அமைதியாக வாழ்வோம் ! நாம் நிம்மதியாக இருக்கும்வரை இந்தியாவும் நிம்மதியாக இருக்கும் என நம்பிக்கை கொள்வோம் .