ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

    ஒரு நாள் சுல்தான் மஹ்மூத் கஜ்னவீ ஜும்ஆவுக்குச் சற்றுத் தாமதமாக வந்தபொழுது தொழுகை நடந்து கொண்டிருந்ததுபள்ளிவாசல் மக்களால் நிரம்பி வழிந்ததால் மக்கள் காலணிகளைக் கழற்றி வைக்கும் இடத்தில் நின்று தம் மணிமுடி தரித்த தலை அக்காலணிகளிடையே போய்ப் புதையும் வண்ணம் தொழுதார்.  

    தொழுகை முடிந்ததும்  சுல்தான் மஹ்மூத் கஜ்னவீ காலணிகளிடையே அமர்ந்திருப்பதைக் கண்ட அமைச்சர்மக்களை சுல்தானுக்கு வழிவிடும் வண்ணம் விலகுமாறு கூற அது கண்டு கோபப்பட்ட சுல்தான்நீர் மஹ்மூதைக் கெளரவிக்க விரும்புகிறீரே ஒழிய மஹ்மூது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையை (சுன்னத்தை) கெளரவிக்கவில்லையேஎன்று கடுமையுடன் கூறினார்

    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வழிமுறை, கிடைத்த இடத்தில் அமர்ந்து தொழுவதேயன்றி மக்களை விலக்கிக் கொண்டு முன் செல்வதல்ல என்பதை இவ்வாறு உணர்த்தினார்

   ஒலுச் செய்யும் பொழுது கை விரல்களுக்கிடையே கோதிக் கழுவுவதெனும் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வழிமுறையைப் பின்பற்றத் தவறியதற்காக ஒரு வலியினுடைய விலாயத்தையே (வலித்தனம்) முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பறித்து விட்டனர்

     ஒரு தடவை ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் ஒரு வழியே குதிரையில் சென்ற பொழுது  ஓர் இடத்தை அடைந்ததும் அங்கு நின்று கொண்டு ஒரு திசையைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள்காரணம் வினவப்பட்ட பொழுது, தாமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களும் ஒரு நாள் அந்த வழியே வந்த பொழுது அவ்விடத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்னகை பூத்ததாகவும் எனவே தாமும் அவ்விதமே செய்வதாகவும் கூறினார்கள் 

    எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுச் செய்யப் புறப்பட்டு வருங்கால் ஓர் இடத்தை அடைந்ததும் அங்கு மீன் உணவு அருந்தினர் என்பதற்காக இன்றும் யாத்திரிகர்கள் அவ்விடத்தில் தங்கி மீன் உணவு அருந்துகிறார்கள்அன்று எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அங்கு மீன் உணவு கிடைத்தது போன்று இன்றும் யாத்திரிகர்களுக்கு அங்கு மீன் உணவு கிடைக்கிறது.  (நன்றி : நபி ஸலவாத்தின் நற்பலன்கள்)