ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருமறைப் பக்கம்


    உங்களது இறைவன் - அவனைத் தவிர வேறு எவரையும், எதனையும் நீங்கள் வணங்கலாகாது என விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு நன்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் விதியாக்கியுள்ளான்அவ்விருவரில் ஒருவரோ அல்லது, இருவருமோ உம்மிடத்தில் திண்ணமாய் முதுமையடைந்து விட்டால், அவர்களை நோக்கி ’“சீ ”’ என்றும் சொல்ல வேண்டாம்அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லையே கூறவும்.(17:23)”


    இன்னும், அன்பினால் அவ்விருவருக்கும் பணிவு என்னும் இறக்கையைத் தாழ்த்துவீராக! என்னுடைய இறைவா! சிறு குழந்தையாக நானிருந்த போது என்னை  அவ்விருவரும் பரிவுடன் வளர்த்தது போன்று, அவ்விருவருக்கும் நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்தித்துக் கூறுவீராக!(17:24)”


    உங்களுடைய இறைவன் உங்களுடைய மனங்களில் உள்ளதை மிக அறிந்தவன்; நீங்கள் நல்லடியார்களாக இருந்தால், அப்பொழுது நிச்சயமாக அவன் பாவங்களை விட்டும் மீண்டு வருகிறவர்களுக்கு மிக்க மன்னிப்பு அளிக்கிறவனாக இருக்கிறான். (17:25)”


    நிச்சயமாக விரயஞ் செய்கிறவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி மறந்தவனாக இருக்கிறான்.(17:27)”


    உலோபியைப் போல் செலவே செய்யாமல் உங்களுடைய கையை  உங்கள் கழுத்தின்பால் கட்டப்பட்டதாய் ஆக்கிக் கொள்ளவேண்டாம்; இன்னும் அனைத்தையும் செலவு செய்து அதனை ஒரே விரிப்பாக விரித்து விடவும் வேண்டாம்; அப்பொழுது பழிக்கப்பட்டவராகவும் கைதேசப்பட்டவராகவும் உட்கார்ந்து விடுவீர்(கள்) (17:29)”


    விபச்சாரத்தின்பால் நீங்கள் நெருங்காதீர்கள்நிச்சயமாக அது மானக்கேடாக இருக்கிறது; அன்றியும் அது தீமையான வழியாக இருக்கிறது.