ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2015 » Mar 2015 »


    "இறைவன் எங்கும் உள்ளான்” எனக்கூறுகிறோம். “எங்கும்” எனும் சொல்லை சரியாக விளங்காமல் கூறினால் அதுவே ´  ஷிர்க்காகிவிடும். “இறைவன் இருக்கிறான்” என ஆண்பாலில் கூறினாலும் ஆணாகத்தான் இறைவன் உள்ளான் எனும் கருத்து ஏற்பட்டுவிடும். அவ்வாறு கருதுவதும் ஷிர்க்தான்.

    இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறான் என எண்ணுவதே ஷிர்க்தான். “லாஇலாஹ இல்லல்லாஹ்”  இறைவனைத்தவிர வேறு நாயனில்லை எனக் கூறுகிறோம். அதனையும் நன்கு உணராமல் கூறினால் அதுவும் ஷிர்க்காகிவிடும்.(எனவே குருவிடம் கலிமாவின் விளக்கம் என்னவெனக் கேட்டு விளங்கி அறிவதே ஷிர்க்கிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி- தொகுப்பாளர்)

    நம் பிள்ளைகள் ஒவ்வொருவரும் மற்ற பத்துப்பேருக்கு தவ்ஹீத் வி­யங்களைச் சொன்னால் பத்து  நூறாகிவிடும். குழப்பவாதிகள் இளைஞர்களுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்து கெடுத்து வருகிறார்கள். இளம்பிள்ளைகள் நிறைய மோசம் போகிறார்கள். நாம்தான் எடுத்துக் கூறவேண்டும்.

    எல்லோரும் எல்லா வகையிலும் சிறப்பானவர்களாக இருக்க வேண்டும். ரூஹு வாங்க இஸ்ராயீல் (அலை) வருவார்கள் என்பதன் விளக்கம் உடலின் இயக்கத்திற்கு இதய இயக்கம் மிக அவசியம். அதன் இயக்கம் குறையக் குறைய சக்திகளும் குறைந்துவிடும். இப்படி முழுமையும் குறைந்து போவதையே ரூஹு வாங்கப்படுவது  எனக்கூறப்படும்.

    ரூஹு அழியாது. விளக்கம் பெற்ற அளவுக்கு ரூஹின் நிலைமை இருக்கும்.ஆத்மாவிற்கு இளமை முதுமை என்றெல்லாம் இல்லை. எப்போதும் வாலிபத்துடன்தான் இருக்கும். எங்கு பார்த்தாலும் ரூஹையே பார்க்கிறீர்கள்.

(தொகுத்தவர்:  ஆலிம் புலவர்)