ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாடுகள் அறுக்கக்கூடாதென்றும் மாட்டின் இறைச்சியை வைத்திருப்பவர்களுக்கு 5 ஆண்டு சிறையுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என பார -  தீய ஜனதா அரசு சட்டம் போட்டிருக்கிறது.  இது யாரை மனதில் வைத்து போடப்பட்ட சட்டம் என்பதை முஸ்லிம் அல்லாத நடுநிலை சிந்தனையாளர்களே பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விளக்கி தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

  நாட்டின் பெரும்பான்மையினரில் மிகச் சிறுபான்மையினராயிருக்கும் உயர்சாதிக் கூட்டம் ஒன்று சிறுபான்மையினருக்குத் துன்பம் தரும் வகையில் இதனைச் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம்கள் மட்டும் மாட்டிறைச்சியை பயன்படுத்துவதில்லை.  அது எல்லோராலும் பயன்படுத்தப்படும் உணவாக மாறியிருக்கிறது என்பதை உலகம் அறியும். 

  அல்லாஹ் ஆகுமாக்கிய (ஹலால்) உணவை ஆகாது (ஹராம்) எனத் தடுப்பவர் யார்? என அல்லாஹ் தன் திருமறையில் முன்னரே எச்சரிக்கை விடுத்திருக்கிறான்.

  இது இறைவனுக்கே எதிராக இயற்றப்பட்ட சட்டம் என்பதை ஆழமாகச் சிந்தித்தால் உணர்ந்து கொள்ளலாம்.  இறைவன் ஆகுமாக்கியதை ஆகாத பொருளாக்கி இறைவனது அதிகாரத்தில் தலையிடுவோருக்கெல்லாம் என்னென்ன முடிவுகள் ஏற்பட்டன என்பதை பிர்அவ்ன் - நம்ரூத் - அபூஜஹ்ல் போன்ற கேடுகெட்டவர்களின் முடிவுகளால் அறிய முடியும்.

  மேல்தட்டு மதவாதிகள் தங்களுக்குப் பிடிக்காது என ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடித்தட்டு மக்களைக் கல்வி கற்க விடாமல் தடுத்தார்கள்.  அதை சரிசெய்ய இந்தியா இன்றுவரை  முயன்று முட்டி மோதிக்கொண்டிருக்கிறது.

  மனுதர்மம் எனக்கூறி, வர்ணம் - சாதி எனப் பிரித்து வைத்தார்கள்.  நாடும் நாட்டு மக்களும் அந்த வேதனையிலிருந்து இன்றுவரை மீண்டு வரவே முடியவில்லை.  அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளில் என்னென்ன செய்யப் போகிறார்களோ? அதன் விளைவை இந்தியா எப்படியயல்லாம் அனுபவிக்கப் போகிறதோ? அறிவாளிகள் கவலைப்படுகிறார்கள்.

  நல்ல சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு இவர்களின் தீமையிலிருந்து மக்களை - நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.