ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »    இயற்கைவாழ்வியல்


இயற்கைவாழ்வியல்
நோயும்சிகிச்சையும் மூலம் ( Piles )

L. A.முஹம்மதுஅப்துல் காதர் .அலைபேசி :9786132022


மூலம்என்பது ஒரு நீண்ட நாள் வியாதியோஅல்லது ஒரு தொடரும் நோயோ அல்ல .நாம்செய்யும் இயற்கை விதி மீறல்களால்தவறான உணவுப் பழக்கங்களால்தற்காலிகமாக ஏற்படும் ஒருசிறு உடல் உபாதை ஆகும் .மலக்குடலில்ஏற்படும் (Vericose)வீக்கமேமூலம்.


அறிகுறிகள்
:

ஆசனவாயில் அரிப்பு ,மலம்கழிக்கும்போது வலி ,மலத்துடன்இரத்தம் ,அடுத்தகட்டமாக ஆசன வாயில் கட்டிஉருவாகி சீழ் வெளிப்பட்டால்(Fistula) பெளத்திரம்என்று பெயர் .

காரணங்கள் :

உடல்சூடு அதிகமாகுதல் ,மலச்சிக்கல் ,ஜீரணக்கோளாறுகள் .

சிகிச்சைமுறைகள் :

மலச்சிக்கல்நீங்க மிதமான வெந்நீரில்அகிம்சை இனிமா .

ஜீரணஉறுப்புகளுக்கு ஓய்வுஅளிக்கும்வகையில் 10 –15 நாட்களுக்குபழங்கள் ,பச்சைக்காய்கறிகள் ,பழச்சாறுகள் ,கீரைசூப்முதலான எளிய உணவுகள் .

நாட்டுப்பப்பாளி ,கொய்யாப்பழம் ,கோவக்காய்ப்பொறியல் , ஓட்ஸ்கஞ்சி , கடல்பாசி , இளநீர்(China Grass) முதலியனநன்கு பலன் தரும் .

பச்சைமிளகாய் ,அதிகக்காரம் தவிர்க்கப்பட வேண்டும் .கோழிக்கறி ,மாட்டிறைச்சிதற்காலிகமாகத் தவிர்க்கப்படவேண்டும் .


விழிப்புணர்வும் , எச்சரிக்கையும் :(Awareness & Caution )

மூலத்திற்குஆங்கில மருந்துகள் இல்லை .ஆங்கிலமருத்துவர்கள் பரிந்துரைசெய்யும் PilesTab, Piles Tablets, Pilex, Pilex Oint முதலியனவும்மூலிகைமருந்துகள்தாம் .சேவைமனப்பான்மை இன்றி பணம்சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாகக்கொண்டு வெளியிடப்படும்விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவாசகர் நலன் கருதி ஒரு சம்பவத்தைச்சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன் .

சாலையோரபலகார வியாபாரி ஒருவருக்குமூல உபாதை ஏற்பட்டது .அருகிலுள்ளமாவட்டத் தலைநகரிலுள்ள ஒருமருத்துவமனையிலிருந்துவிளம்பரம் வெளிவந்தது .

மூலத்திற்குலேசர் சிகிச்சை ஆபரேஷன் ;அன்றேவீடு திரும்பலாம் என்று .விரைவில்தொழிலை கவனிக்கலாம் என்றுஎண்ணி கடன்பட்டு சிகிச்சைபெற்றுக் கொண்டார் .வீடுதிரும்பினார் .ஆனால்தொழிலுக்குத் திரும்ப சுமார்ஒரு மாதம் ஆனது .ஏனெனில்அதுவரை ஓய்வெடுக்க வேண்டுமென்றும்சுமார் 15நாட்களுக்குபழச்சாறுகள் மட்டுமே சாப்பிடவேண்டும் என்றும் மருத்துவர்கள்கூறிவிட்டனர் .இங்குசிந்திக்க வேண்டிய விஷயம் ;லேசர்சிகிச்சைக்கு முன் 15நாட்கள்பழச்சாறு உணவையும் பழங்களையும் ,பச்சைக்காய்கனி கலவைகளையும் அந்தநோயாளி சாப்பிட்டு வந்திருப்பாரேயானால்அவரது மூலம் லேசர் சிகிச்சைக்குமுன்பே குணமடைந்து உடல்ஆரோக்கியத்தையும் ,பணத்தையும்சேமித்து இருக்கலாம் .

ஆபரேசன்செய்து கொள்ளும் பலருக்குமலத்தை அடக்கி வைக்கும் திறன்இல்லாமல் போய்விடுகிறது .எனவேஉணர்வு ஏற்பட்ட உடன் அவர்களைஅறியாமல் மலம் வெளியேறிவிடுகிறது .எனவேஇறைவன் தேவை என நமக்காகப்படைத்த எந்த உறுப்பையும்வெட்டி எறிந்து விடாமல்பொறுமையுடன் மாற்று மருத்துவமுறைகளைமேற்கொண்டு எல்லாம் வல்லஅல்லாஹ்வின் அருளாலும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துஆ பரக்கத்தாலும்செய்கு நாயகம் போன்ற பெரியோர்கள்அருளாசியாலும் நலம் பெறுவோமாக !ஆமீன் !


தற்காப்பு :

நீண்டபயணம் மேற்கொள்பவர்கள்இருக்கைக்கு மேல் ஒரு டவலைப்போட்டுக் கொள்ளலாம் .பயணம்முடிந்து அன்று இரவு படுக்கைக்குப்போகும்போது அடிவயிற்றில்சுமார் ½மணிநேரம் ஈரத்துணி போட்டுக்கொள்ளலாம் .வாழ்கநலமுடன் !

ஸல்லல்லாஹுஅலா முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் ...