ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »    சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்


சங்கைமிகுஇமாம் ஷாஃபிஈ ( ரஹ் )


அறபுத்தமிழில்
:மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில்மதாஹிப்

அழகுதமிழில் :கிப்லாஹள்ரத் ,திருச்சி .கண்ணியத்திற்குரியகலீபா பெருந்தகைகள் குறித்துஇமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்கள்கீழ்க்காணும் பைத்தை ( அரபுப்பாடலை ) அடிக்கடிக்கூறுவார்கள் .


இதாநஹ்னு ஃபள்ளல்னா அலிய்யன்ஃஇன்னனா ரவாஃபிளுனா பித்தஃப்ளீலிஇன்த தவில் ஜஹ்லி , வஃபளுலஅபீபக்ரின் இத மா தகர்துஹூருமீது பிநுஸ்பின் இன்ததிக்ரிய லில் ஃபளுலி ஃபலாஸில்து தாஃபளுலின் வநுஸ்பின்கிலைஹிமா பிஹிப்பிஹிமா ஹத்தாஉவஸ்ஸத ஃபிர்ரம்லி


ஹள்ரத்அலீ ரலியல்லாஹூ அன்ஹு அவர்களைக்குறித்து நாம் சிறப்பித்துக்கூறுவோமேயானால் அறிவீனமானவர்கள்( கவாரிஜ்கள் )நம்மைரவாஃபிளுகள் என்கிறார்கள் .


ஹள்ரத்அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹூஅவர்களைக் குறித்து நாம்சிறப்பித்துக் கூறுவோமேயானால்ரவாபிள்கள் நம்மைச் சங்கடப்படுத்தநாடுகிறார்கள் !

எனினும்நான் மரணித்து அடக்கம்செய்யப்படும் வரை அவ்விருவரையும்நான் சிறப்பித்து நேசித்துப்பாடிக் கொண்டே இருப்பேன் !


அதனால்வரும் தங்கடத்தையும் ,நெருக்கடியையும்நான் ஏற்றுக் கொள்வேன்

( அஞ்சிடேன் !)

ஹள்ரத்அலீ ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின்அதி உன்னத சிறப்புகள் யாவை ?எனஒருமுறை வினவப்பட்டது ! அதற்குஇமாம் ஷாபிஈ ( ரஹ் )கூறினார்கள் :

ஹள்ரத்அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ,

1. இவ்வுலகைவெறுக்கக் கூடியவர்களாகஇருந்தார்கள் .

2. அறிவிற்சிறந்தவராக இருந்தார்கள் .

3. சுத்தரத் தன்மையுடையவராக இருந்தார்கள் .

4. நற்குணங்கள்பெற்ற பரிசுத்தமானவராகஇருந்தார்கள் .

( மற்றுமொருகலீபாவைப் பற்றி – இமாம் ஷாபிஈ( ரஹ் )அவர்கள்கூறிய பரபரப்பான தகவல்கள் ...இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் ...)