ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »    ஞானதுளிகள்


ஞானதுளிகள்


தொகுத்தவர் :- திருமதிG.R.J. திவ்யாபிரபு I.F.S.,சென்னை
ஞானத்திலும்சிறந்தது விஞ்ஞானம் .விறகுக்கட்டையில் தீ இருக்கிறதுஎன்று அறிந்து கொள்ளுதல்ஞானம் . அதைத்தீயாக மூட்டி உணவு சமைத்துஉண்பது விஞ்ஞானம்.உள்ளத்தினுள்இறைவன் வீற்றிருக்கிறார்என்று உணர்வது ஞானம் .அவ்விறைவனோடுவாத்சல்ய பாவத்தில் ,தாஸ்யபாவத்தில் ,சகாபாவத்தில் ,மதுரபாவத்தில் உறவு கொண்டாடுவதுவிஞ்ஞானம் .


மெய்ப்பொருளை ஞானமார்க்கம் ஒருவிதத்தில்விளக்குகிறது .பக்திமார்க்கம் மற்றொரு விதத்தில்விளக்குகிறது .பக்திமார்க்கக் கொள்கையின்படி ,இறையேபிரபஞ்சத்திலுள்ள இத்தனையும்ஆகியிருக்கிறது .அத்துணைதத்துவங்களும் இறைவன்அம்சங்களாம்.ஆனால்ஞான மார்க்கத்தின்படி இவ்வுலகம்கனவில் தோன்றும் வெறுந்தோற்றமாம் .


ஐந்துவிதஒளிகள் உண்டு .அவையாவன :தீபவெளிச்சம் ,சந்திரவெளிச்சம் ,தீயின்வெளிச்சம் ,சூரியவெளிச்சம் ,பிறகுஐந்தாவதாக சூரியனும் சந்திரனும்சேர்ந்து தருகிற வெளிச்சம் .சூரியன்அஸ்தமிப்பதற்குச் சற்றுமுன்பு சந்திரன் தோன்றி சூரியசந்திர வெளிச்சங்கள் ஒன்றோடொன்றுகலந்து ஒளிர்வதுண்டு .சூரியன்ஞானத்துக்கு நிகர்.ஞானமும்பக்தியும் கலந்து ஒளிர்வதைஅவதார புரு ­ ரிடத்துக்காணலாம் .


ஞானிஒருவன் சதா சர்வ காலமும் ஆத்மபோதத்திலேயே திளைத்திருக்கிறான் .கங்காநதியின் முற்பகுதிக்கு அவன்ஒப்பாகிறான் .ஆனல்கங்கா நதியின் பிற்பகுதிகடலுக்குப் பக்கத்தில்இருப்பதால் அது பொங்கவும்வடியவும் செய்கிறது .கங்காநதியின்பிற்பகுதி போன்று பக்தன்ஒருவன் பக்தியின் மேலீட்டால்சிரிக்கவும் , அழவும்செய்கிறான் .கடலின்உறை பனிக்கட்டி கீழே மேலேவரவும் செய்வது போன்று பக்தன்பலப்பல பாவங்களை உடையவனாகஇருக்கிறான் .


மூன்றுபேர் ஒரு வனத்தின் வழியேஅமைதியாகச் சென்று கொண்டிருந்தனர் .அப்பொழுதுதிடீரென்று புலியயான்றுஅவர்கள் முன்வந்தது .ஓநாம் ஒழிந்தோம் என்றான்ஒருவன் . ஏன்அப்படிச் சொல்லுகின்றாய் ?நாம்இறைவனிடம் பிரார்த்திப்போம்என்றான் மற்றொருவன் .இறைவனைத்தொந்தரவு படுத்த வேண்டாம் .நாம்ஓடித் தப்பித்துக் கொள்வோம்என்றான் மூன்றாவது மனிதன் .


ஒழிந்தோம்என்று இயம்பியவன் கடவுள்நம்பிக்கை இல்லாதவன் .இறைவனைவழுத்துவோம் என்றவன் ஞானி .அவனைஉபத்திரவப்படுத்த வேண்டாம்என்று உரைத்தவன் பிரேமை பக்திபூண்டவன் . பிரேமைபக்தியின் இயல்பின்படி தன்இஷ்ட தெய்வத்துக்கு எந்தவிதமான இடைஞ்சலையும் பக்தன்உண்டு பண்ணுவதில்லை .பக்தியின்விளைவாக அவனுக்கு வலிவுமிகவருகிறது .


அபினிகலந்த பானத்தைப் பருகினால்போதை உண்டாகிறது .ஆனால்அபினி அபினி என்று வெறுமனேவாயால் சொல்லிக் கொண்டிருப்பதால்போதை உண்டாகாது .அதுபோலஇறைவனே என்று வெறும் வாயால்சொன்னால் போதாது .இறைபக்திஎன்னும் உணர்ச்சி உள்ளத்தில்ஊறிக் கொண்டிருக்க வேண்டும் .


அளவுக்குமீறி உண்ணாதே ;வெறும்புற ஆசாரத்தில் பைத்தியம்கொள்ள வேண்டாம் .அத்தகையபைத்தியம் பிடித்திருப்பவர்களுக்குஞானம் இல்லை .தேகஆதாரங்களைஏதோ ஓரளவு கடைபிடி .அதில்வரம்பு கடந்து போக வேண்டாம் .

அடுத்தநாள்உபயோகத்திற் கென்று ஏதேனும்பொருளை ஏற்று வைத்திருப்பவன்சரியான துறவியல்ல .


பொருள்களுக்குஉடைமையும் செயல்களுக்குக்கர்த்துர்வமும் மக்கள் நாடுவதுஅஞ்ஞானத்தின் விளைவு .எல்லாம்ஏக உடைமை ;எல்லாம்இறை செயல் என்னும் உணர்வுஞானத்தினின்று வருகிறது .

அவரவர்க்கேற்றகவலை உண்டு .சாதுஒருவனுக்குத் தன் கெளபீனத்தைப்பற்றிய கவலை .குடும்பஸ்தன்ஒருவனுக்குத் தன் மனைவிமக்களைப் பற்றிய கவலை .

உலகைமுற்றுந்துறவாத ஒருவன் செய்கிறஞானோபதேசங்களை யயல்லாம்பிறர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .அவனையாரோ இரண்டொருவர் பின்பற்றலாம் .ஆயினும்அவர்கள் நாளடவில் அவனை விட்டுவிலகிக் கொள்வார்கள் .ஞானவாழ்வு வாழாதவன் பேச்சுபயனற்றது .


மனிதனுடையநிலைமை உடலைச் சார்ந்திருக்கிறது .இந்நிலையில்இருக்கிறவன் பிரம்மத்தைக்குறித்து அனைத்தும் நானேஎன்று சொல்லுவது பொருந்தாது .உலகவியவகாரங்களில் ஈடுபட்டிருப்பதற்கிடையில் நான் பிரம்மம் எனமனிதன் மொழிய லாகாது .


உலகத்தவர்மிகத் தாராளமாக இறையைப்பற்றித் தங்களுடைய அபிப்பிராயத்தைத்தெரிவிக்கிறார்கள் .மக்களுக்கிடையில்வேற்றுமை வைத்து சிருஷ்டிபண்ணியது அவரது பெரும்பிழைஎன்கின்றனர் .பாபம் ,இப்புல்லியர்கள்தங்களிடத்துள்ள புன்மை இறைவனையடைந்திருப் பதாகக் காண்கிறார்கள் .டில்லியைச்சென்று பார்த்த ஒருவன் நான்டில்லியைப் பார்த்திருக்கிறேன்என்று விளம்பரம் செய்துகொள்வதில்லை .மேன்மகனாயுள்ள ஒருவன் தன்னை மேன்மகன் என்று சொல்லிக் கொள்வதில்லைஅதுபோன்றுஇறை யருளை அடையப் பெற்றவன்அதைப் பற்றி ஒன்றும் பேசான். ஏதோஇரண்டொரு நூல்கள் படித்திருக்கிறவர்கள் தங்கள் வாசா ஞானத்தைவேண்டியவாறு விளம்பரம்செய்வார்கள் .