ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »     கலீபாபெருந்தகைகள்


தரீகத்துல்ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின்கண்ணியமிகு

கலீபாபெருந்தகைகள்

ஒருசிறப்புப் பார்வை !

மெளலவிஎன் . எஸ் . என் . ஆலிம் . பி . காம் . திருச்சி
இத்தொடரின்நிறைவுப் பகுதிக்கு வந்திருக்கிறோம் !

வலிய்யுல்அஹ்ஸன் அவர்கள் கண்கலங்கியதருணங்கள் மிக மிகக் குறைவு .எனினும் ,இரண்டுதருணங்களில் வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள் கண் கலங்கியதைக்கண்டிருக்கிறேன் !


முதல்நிகழ்வு

எமதுதாயார் ரஹ்மத்துன்னிஸாஅவர்களின் தங்கை உம்முஸல்மா .எமதுதாயாருக்கு மிக மிக இளம்வயதிலேயே திருமணமாகி விட்டதால்எமது சிற்றன்னை உம்முஸல்மாஅவர்கள் தான் வீட்டில் செல்லப்பிள்ளை . ஓடியாடிவிளையாடிக் கொண்டிருப்பார் .அதனைக்கண்டு வலிய்யுல் அஹ்ஸன் ஆனந்தவயப்படுவார்கள் .


காலம்கனிந்தது .எம்சிற்றன்னை உம்முஸல்மா அவர்கள்பாலிகானார்கள் .அவர்களுக்கும்நல்ல மாப்பிள்ளை கிடைக்க மிகஇளம் பிராயத்திலேயே திருமணம்நடைபெற்றது !மாப்பிள்ளைமெளலவி . ஷாஹுல்ஹமீது ஆலிம் மன்பஈ !மன்னார்குடிஅருகேயுள்ள பூதமங்கலம் என்னும்ஊரில் பள்ளி இமாமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் !


கணவன்– மனைவி நல்ல முறையில் இல்லறம்நடத்தி வந்தனர் .பக்ருத்தீன்முதல் மகன் .சுமார்2 வயது .இரண்டாவதுமகன் அனஸ் .சுமார்1 ½ வயதுகுழந்தை . எமதுசிறிய தகப்பனார் ஷாஹுல் ஹமீதுஆலிம் ( பாளையம் )விடுமுறையில்வந்திருந்தார் .பகல்பொழுது மகிழ்ச்சியாகக்கழிந்தது .இரவுசுமார் 7மணிக்கு ...WifeSerious Start Immediately என்பதாகத்தந்தி வந்தது !என்னவோஏதோ ... எனஎமது சிறிய தந்தையும் எமதுமாமா அப்துல் கறீம் ஆலிம்அவர்களும் அவசரமாக பூதமங்கலம்விரைந்தனர் !இரவுசுமார் 9 மணிக்குமீண்டும் ஒரு தந்தி வந்தது !WifeExpired கிடைத்ததும்தான் வலிய்யுல் அஹ்ஸன் கண்கலங்கி துடித்துப் போனார்கள் !மகளைப்பிரியும் தருணத்தில் ஒருதந்தையின் மன வேதனை எப்படிஇருக்கும் ,என்பதனைசிறு வயதில் அவர்களின் மூலமேமுதன் முதலாய் நான் அறிந்தேன் !


எமதுசிற்றன்னை உம்முஸல்மா அவர்கள்வீட்டிற்கு அருகிலுள்ள பெரியகுளத்தில் துணி துவைத்துக்கொண்டிருந்தார் ,அருகில்மாமியாரும் இருந்தார் .வீட்டில்தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தஅனஸ் அழுத சப்தம் கேட்கவே ,மாமியாரையனுப்பிபிள்ளையைத் தூக்கிக் கொண்டுவருமாறு கூறியிருக்கிறார் .மாமியார்சென்று விட்டார் .துணிகளைத்துவைத்துக் கொண்டிருந்தபொழுது சோப்பு குளத்தில்விழுந்திருக்கின்றது .அதனைஎடுக்க முனைந்த போது படிக்கட்டுவழுக்கி நீரில் மூழ்கி விட்டார் !மாமிவந்து பார்த்த போது மருமகளைக்காணவில்லை .கதறிஅழுதிருக்கிறார் .பள்ளியிலும் ,தெருக்களிலும்இருந்தவர்கள் தண்ணீரில்பாய்ந்து உடலைத் தேடி எடுத்துவண்டிச் சக்கரத்தில் சுற்றிச்சுழலச் செய்தும் தண்ணீர்வெளியேறாததால் எம் சிற்றன்னைஷஹீதாகி விட்டார் .
( இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜி ஊன் )


( இரண்டாம்நிகழ்வு ... இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் ...!)