ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »    வஹாபிகள் ஸஹாபிய வேடங்களில்


வஹாபிகள் ஸஹாபிய வேடங்களில் ..
உயிர்கொல்லும் பகை !இத்தகையபுனிதமான மஹாத்மாக்களைத்தான்ஆத்ம ஞானமற்ற அறிவிலிகள்சிலர் தூற்றுகின்றனர் .

புகாரிஹதீதில் ,அபூஹுரைரா ( ரலி )அவர்களைத்தொட்டும் ரிவாயத்து வந்துள்ளது :


எவன்ஒருவன் என்னுடைய வலிமார்களுடன்பகைமையைச் செய்வானோ அவன்என்னுடம் போர் செய்வதற்குதயாராக இருந்து கொள்ளட்டும்என்று அல்லாஹ் கூறியதாக நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,திருவுளமானர்கள் !


புத்தியுடையஒவ்வொரு மூமின் மக்களும்அறியக்கூடிய விஷயமாவது :அவுலியாக்களைஇன்கார் செய்வதைக் கொண்டுஹலாக்கு ( நாசம் )உடையபள்ளத்தில் விழ வேண்டாம் .ஏனென்றால்அந்த இன்கார் ஆளைக் கொல்லக்கூடியகொடிய விஷம் .அதுஉங்களைக் கொன்று விடும் .இதைஉங்களுக்கு முன்னோர்கள்காலத்திலும் எங்களின்காலத்திலும் பிரத்தியட்சமாகக்கண்டிக்கிறோம் என்று இமாம்இபுனு ஹஜர் மக்கீ ( ரஹ் )தங்களுடையபதாவாவில் தீர்ப்புச்செய்துள்ளார்கள் .


எவனொருவன்கெட்ட எண்ணத்தைக் கொண்டுஅவுலியாக்களை நோவினைசெய்வானேயானால் திட்டமாகஅவன் ஷரீஅத்தின் ( தாயிரா )எல்லையைவிட்டும் வெளியே புறத்தியில்ஆகிவிட்டான் என்று ஹள்ரத்ஷெய்குல் அக்பர் முஹிய்யுத்தீன்இபுனு அரபி ( ரலி )செல்லியுள்ளார்கள் .


அவுலியாக்களையும்ஆரிஃபீன் களான உலமாக்களையும்பகைமை கொள்வதாகிறது சின்னவிஷயம் அல்ல ;மிகுதம்பேர்களிடத்தில் அது குஃபுருஎன்பதாகவும் பயப்படப்படுகிறது .


அவுலியாக்களைநாவைக் கொண்டோ ,கல்பைக்கொண்டோ , அந்தஅவுலியாக்கள் ஹயாத்தானவர்களாகவோஅல்லது வபாத்தானவர்களாகவோஇருந்தாலும் சரியே ,எப்படிஆனாலும் அவர்களை இன்கார்செய்வதாகிறது சந்தேகமின்றிகுஃப்ராக இருக்கும்.மத்ஹபுகளின்தேட்டரவுப்படி முஸ்லிம்களின்இஜ்மாஃவைக் கொண்டு காஃபிராகஇருக்கும் .ஏனென்றால் ,அவன்தீனுல் இஸ்லாத்தையும் ஷரீஅத்துல்முஹம்மதிய்யாவையுமே இன்கார்செய்து விட்டான் என்பதே .இவ்விதம்செய்கு அப்துல் கனி நாபில்ஸீ ( ரஹ் )அவர்கள்ஹதீகத்துன்னதிய்யா 1- வதுபாகம் , 165- வதுபக்கத்தில் விரிவாகக்கூறியுள்ளார்கள் .


இதுபோலவே ஷரஹு ஜவாஹிரின் நுஸூல்2- வதுபாகம் 59- வதுபக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .எனவேஅவுலியாக்களோடு மோதத்துணிகின்றவர்கள் இத்தகையபயங்கர எச்சரிக்கைகளை கவனித்துநன்மையை நாடி உண்மையை உணர்ந்துகொள்ளட்டும் .


ஏகவல்லஇறைவனே ! உனதுநேசத்திற்குகந்த நல்லடியார்களைநெஞ்சமஞ்சாது நிந்திக்கும்இந்த நயவஞ்சகர்களுக்கு நீயேநல்ல புத்தி கொடுக்க வேண்டும் .


அன்பர்களே
!இறைநேசச்செல்வர்களான அவுலியாக்கள்செய்த கடும் தவங்களென்ன !இபாதத்துகளென்ன ! அவர்களைக்கொண்டு இவ்வையகம் அடைந்திருக்கும்அதிர்ஷ்டங்களென்ன !நல்லநஸீபுகளென்ன !இத்தகையபெறுதற்கரிய பாக்கியங்களைஅடைந்ததற்கு நாம் யாது கைமாறுஅளிக்கவல்லோம் !என்பதைநினைத்து ,நெக்குருகிமனமார இறைவனுக்கு நன்றிசெலுத்தித் துதிக்க வேண்டிஇருக்க தூற்றுவது என்ன நியாயம் !அதுமிகப் பெரிய அநீதம் !

( தொடரும் )