ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »      உமர் ( ரலி ) புராணம்காவியம்உமர் ( ரலி ) புராணம்காவியம்

ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹா ஷிமிய் நாயகம் அவர்கள்


முதலாவது உதய காண்டம்


இறையருட்பொழிக வேகனே யீக

நிறைதவத்தவர்க்கு நீடே யருள்க

நறையினின்ப நலம்பொரு டருக

கறையறவாழக் கரந்தரு வாயே.கொண்டுகூட்டு :

இறைஅருள் பொழிக ஏகன் +ஏ ஈ க நிறைதவத்தவர்க்கு நீடே அருள்க.நறை இன் இன்பநல(மும்)பொருளும் தருககறை அற வாழக் கரம் தருவாயே. 


பொருள்

இறையோனே,உன் அருளைநமக்குப் பொழிவாயாக.ஏகனாகிய ஒருவனே,நமக்குக்கொடுப்பாயாக. நின்னைநாடி நற்றவஞ் செய்வோருக்குதெடர்ந்து அருள் புரிவாயாக.தேனை விடஇன்பமான நலத்தையும் பொருட்செல்வத்தையும் தந்தருள்வாயாக.அவ்வாறே ஈந்துகுற்ற மற்று வாழ்தற்கு உன்உதவியைத் தருவாயே. 


குறிப்பு

பொழிதல்: மழைபோற்பெய்தல். ஈதல்: கொடுத்தல்,நறை +இன் :தேனை விட.கறை :குற்றம்.கரம் :உதவி.