ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai         »     2014     »     Mar2014     »       அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு


முஹம்மதுநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின்

வாழ்க்கைவரலாறு

மூலம் : திருநபிசரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சிமாபெரும்வெற்றி
முஸ்லிம்கள்அவ்வருடம் மக்காவிற்குள்பிரவேசிக்காமல் திரும்பிப்போய்விடுவது அதிக வருத்தத்தைக்கொடுக்கக் கூடியது தான் .முஸ்லிம்கள்இதுவரை குறைஷிகளுடன் செய்தபோர்கள் ஒன்றிலாவது தோல்வியடையவுமில்லை . அவர்களேவெற்றியடைந்தும் வந்திருக்கிறார்கள் .மேலும் ,எதிரிகள்வந்து தாக்கினால் ,இஸ்லாத்திற்காகத்தங்கள் உயிரைப் பலி கொடுக்கஎப்போதும் ஆயத்தமாகவே நாயகத்தோழர்கள் இருக்கிறார்கள்.


முஸ்லிம்களுக்குஇத்தகைய சாதகங்கள் இருந்தும்அவ்வருடம் ஹஜ் உம்ராச் செய்யாமல்திரும்பிப் போக பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எதற்காகச் சம்மதித்தார்கள்
?சண்டைசெய்வதைத் தவிர்க்க வேண்டும்என்பதே அவர்களின் முக்கியநோக்கம் .குறைஷிகளுடன்சமாதானமாயிருந்தால்தான் ,அவர்கள்முஸ்லிம்களுடன் பழகி ,இஸ்லாத்தைப்பற்றி நன்கு அறிவதற்குச்சந்தர்ப்பம் வாய்க்கும் .ஆதலால்எவ்விதத்திலும் குறைஷிகளுடன்சமாதானம் நிலவ வேண்டுமென்றஎண்ணத்துடன் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு குறைஷிகளுடன் சமாதானஉடன்படிக்கை செய்தார்கள் .


இம்முறையினால் இஸ்லாம் துரிதமாகப்பரவ ஏதுவாயிற்று என்பதைப்பின்வரும் சம்பவங்கள் நன்குவிளக்கும்
.மக்காவிலிருந்துமுஸ்லிம்களிடம் போய்ச்சேருகிறவரை திரும்பக்குறைஷிகளிடம் அனுப்புவதுமுஸ்லிம்களுக்கு மிகவும்வருத்தத்தைக் கொடுக்கக்கூடியதே .ஒருவன்முஸ்லிம்களிடம் போவதானால்ஒன்று அவன் உண்மையான முஸ்லிமாகஇருக்க வேண்டும் அல்லதுவஞ்சகனாக இருக்க வேண்டும் .உண்மையானமுஸ்லிமாக இருந்தால் அவன்எங்கிருந்தலும் ஒன்றுதான் .ஆனால்அவன் முஸ்லிம்களுடன் இருப்பதைவிடமுஸ்லிம் அல்லாதவருடன்இருப்பதில் அனுகூலமுண்டு .அவர்கள்அவனைத் துன்புறுத்தக்கூடுமானாலும் உண்மையானமுஸ்லிமை அத்துன்பங்கள்பொருட்படுத்தாது .அதற்குஉதாரணமாக மக்கத்துக் குறைஷிகள்ஆரம்பகாலத்தில் மக்காவிலுள்ளமுஸ்லிம்களை எண்ணிறந்ததுன்பத்திற்கு உட்படுத்தியும்ஒருவரை யாவது இஸ்லாத்தைவிட்டுவிடும்படி செய்யமுடியவில்லை .


ஆனால்முஸ்லிம் அல்லாதாரின் மத்தியில்ஓர் உண்மை முஸ்லிம் இருப்பாரேயானால்அவர்கள் அவனைப் பார்த்துஇஸ்லாத்தில் சேருவதற்குவழியுண்டாக்கும் .அவன்உண்மையான முஸ்லிமாயில்லாமல்வஞ்சகனாயிருந்தால் அவன்முஸ்லிம்களுடன் இருப்பதைவிட மற்றவர்களுடன் இருப்பதேநல்லது . அவன்முஸ்லிம்களுடனிருந்தால்முஸ்லிம்களுக்கு கெடுதியேஅன்றி நன்மை உண்டாகாது .முஸ்லிம்களின்அந்தரங்க நிலைமையை அறிந்துமக்காக் குறைஷிகளுக்குஅறிவிக்கவும் கூடும் .ஆனதால்இந்நிபந்தனையும் நன்குசிந்தித்தால் முஸ்லிம்களுக்குவிரோதமானதல்ல .இஸ்லாமியவரலாற்றில் இந்த உடன்படிக்கையானதுமிகவும் முக்கியமானது .ஏனெனில்பிற்காலத்திலுண்டான இஸ்லாத்தின்வளர்ச்சிக்கு இதுவே மூலகாரணமாயிருந்தது .இதுசாதாரண உடன்படிக்கையாகத்தெரிந்தாலும் ,அதிலும்வெளித் தோற்றத்தில் முஸ்லிம்களுக்குவிரோதமாகத் தோன்றினாலும் ,திருக்குர்ஆனில்இதற்கு இறைவன் வெற்றி என்னும்பட்டத்தை அருளியிருக்கிறான் .இன்னாஃபத்தஹ்னா ல ( க் ) கபத்ஹன்ஃ முபீனா ”-“ நாம்உமக்குத் தெளிவான நிச்சயமானவெற்றியைக் கொடுத்தோம் எனஅருளியுள்ளான் . இவ்வுடன்படிக்கையின்நிபந்தனைகளை உமர் ( ரலி )அவர்கள்கேட்டதும் அவர்களுக்கு அதிகவருத்த முண்டாயிற்று .மற்றசஹாபாக்களும் அதிக வருத்தப்பட்டனர்உடன்படிக்கையைஎழுதிக் கொண்டிருக்கும் போதுஒரு சம்பவம் நடந்தது .குறைஷிகளின்தூதராய்ச் சமாதானம் பேசவந்திருந்த ஸுஹைலுடைய குமாரரானஅபூஜந்தல் ( ரலி )என்பவர்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார் .அவர்இஸ்லாத்தைத் தழுவி இருந்ததால்மக்காக் குறைஷிகள் அவரைக்கடுமையாகத் துன்புறுத்திவந்தனர் .அவர்எவ்விதமாகவோ தப்பிக் காலில்மாட்டப்பட்ட விலங்குடன்சமாதானக் கூட்டத்தின் மத்தியில்ஒடி வந்து விழுந்தார் .அப்போதுஸுஹைல் ,பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை நோக்கி ,இதுஉடன்படிக்கையை நிறைவேற்றுவதற்குவாய்த்த முதலாவது சந்தர்ப்பம் .ஆதலால்நிபந்தனைப்படி அபூஜந்தலைஎன்வசம் ஒப்புவித்து விடவேண்டும் என்று சொன்னார்.


அதற்குபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடன்படிக்கையேஇன்னும் எழுதி முடியவில்லையேஎன்று சொல்ல
;அவர் ,அப்படியானால்நாங்கள் சமாதானத்திற்குஒப்புக் கொள்ள மாட்டோம் .அபூஜந்தலைஎங்களிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும் என்று ஒரே பிடிவாதமாகச்சொன்னார் .பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அதற்குச் சம்மதிக்கவேண்டியது ஏற்பட்டது .குறைஷிகள்அடித்தஅடியால் அபூஜந்தலுடைய சரீரத்தில்எங்கு பார்த்தாலும் காயங்களினால்ஏற்பட்ட தழும்புகளே அதிகம்இருந்தன . அவர்அங்குக் கூடியிருந்தமுஸ்லிம்களுடன் தம்முடையகாயங்களையயல்லாம் காட்டி ,இஸ்லாமியசகோதரர்களே !இந்தநிலையில் என்னை மறுபடியும்பார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா ?நானோமுஸ்லிமாகி விட்டேன் .என்னைகாஃபிர்களுடைய கையிலாஒப்படைக்கிறீர்கள் ?என்றுகூறவும் முஸ்லிம்கள் அதிகவருத்த மடைந்தனர் .ஹள்ரத்உமர் ( ரலி )அவர்கள் ,தம்மைஅடக்க முடியாமல் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் சமூகத்தில் சென்று ,யாரசூலல்லாஹ் !தாங்கள்இறைவனின் உண்மையான நபியல்லவா ?”என்றுகேட்கவும் அருமை பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ,நிச்சயமாகநான் உண்மையான நபியாக இருக்கிறேன்என்று சொல்ல ,உமர்( ரலி )அவர்கள் ,நாம்இருப்பது நேரான வழியல்லவா ?”என்றுகேட்க பெருமானார் ஸல்லல்லாஹுஆம் என்றார்கள் .


உமர்
( ரலி )அவர்கள் ,குறைஷிகள்இருப்பது தவறிய வழியல்லவா ?எனவினவ பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஆம்என்று சொல்லவும் ,உமர்( ரலி )அவர்கள்இந்நிலையில் ,மதசம்பந்தமானவிஷயத்தில்நாம் எதற்காகநம்மைத் தாழ்வு படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் .அதற்குப்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நான்அல்லாஹ்வின் தூதன் .அவனுடையகட்டளைக்கு மாறு செய்ய முடியாது .அவன்ஒரு போதும் என்னைக் கேவலப்படுத்தமாட்டான் .அவன்எனக்கு உதவி செய்வான் என்றுசொன்னார்கள் .இதைக்கேட்டதும் உமர் ( ரலி )அவர்கள்ஹள்ரத் அபூபக்கர் ( ரலி )அவர்களிடம்சென்று நடந்த விருத்தாந்தத்தைக்கூறினார்கள் .


அப்போதுஅபூபக்கர் ( ரலி )அவர்கள்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ,அல்லாஹ்வின்நபியென்றும் அவர்கள் எதைச்செய்தாலும் அல்லாஹ்வின்கட்டளைப்படி செய்வார்களென்றும்சொல்லிவிட்டார்கள் .பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் அது சமயம்ஆட்சேபித்துப் பேசிய குற்றத்தைஉமர் ( ரலி )அவர்கள்நினைத்துத் தங்கள் ஆயுட்காலமெல்லாம் வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்கள் .அக்குற்றத்திற்குப் பரிகாரமாகத்தொழுவார்கள் .நோன்புவைப்பார்கள் .சிறப்பானதர்மங்களைச் செய்வார்கள் .அடிமைகளைவிடுவிப்பார்கள் .எத்தகையபயபக்தி !

மற்றமுஸ்லிம்களும் அபூ ஜந்தலின்நிலைமையை உத்தேசித்து அதிகக்கவலைப்பட்னர் .ஆனால்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளையானதால்யாரும் வாய்திறந்து ஒன்றுமேபேச முடியவில்லை .


பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அபூஜந்தலை நோக்கி ,“ நீர்பொறுமையுடனும் ,அடக்கத்துடனும்இருப்பீராக !உமக்காகவும் ,கஷ்டத்திலிருக்கும்மற்ற முஸ்லிம்களுக்காகவும்அல்லாஹ் ஏதாவது வழி உண்டுபண்ணுவான் .இப்போதுஉடன்படிக்கையோ முடிந்துவிட்டது .நாம்அவர்களுடன் பேசி முடிவுசெய்வதற்கு மாறு செய்ய முடியாதுஎன்றுசொல்லி விட்டார்கள் .அபூஜந்தலைமக்காவிற்குக் கொண்டுபோய்விட்டார்கள் .முஸ்லிம்கள்ஹுதைபிய்யா என்ற இடத்திலேயேகுர்பானியும் அதைச் சேர்ந்தகிரியைகளையும் நடத்தினார்கள் .உடன்படிக்கைநடந்த மூன்று நாட்கள்வரைபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யாவிலே தங்கி இருந்தார்கள் .பின்புஅவர்கள் அதைவிட்டுப் புறப்பட்டுமதீனாவிற்குப் பயணமானார்கள் .போகும்வழியில் இன்னா ஃபத்தஹ்னால ( க் ) கஃபத்ஹன்முபீனா என்ற குர்ஆன்வசனங்களையுடைய சூரா அவர்களுக்குஅல்லாஹ்வின் சமூகத்திலிருந்துஅருளப்பட்டது .அதன்பொருளாவது நிச்சயமாகநாம் உமக்குப் பகிரங்கமானவெற்றியை அருளினோம் !


( வெற்றிதொடரும் ...)