ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

காவியம்

ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

    அல்ஹா´மிய் நாயகம் அவர்கள்

அகழ்யுத்தம்

(கலிவிருத்தம்)

குரைஷிக் குழாத்துடன் குரைலாக் கூட்டமும்

புரையுறும் கத்பான் புலையர் குழுவும்

நிரையாய்ச் சேர்ந்தே நேர்த்திட யுத்தம்

விரைந்தன ரிவர்தமை வேரறுத் திடவே.

கொண்டுகூட்டு:

குரைஷிக் குழாத்துடன் குரைலாக்கூட்டமும் புரை உறும் கத்பான் புலையர் குழுவும் நிறையாய்ச் சேர்ந்தே யுத்தம் நேர்த்திட விரைந்தனர்இவர்தமை வேர் அறுத்திட.

பொருள்:

குரைஷிக்  கூட்டத்துடனே குரைலா என்றொரு கூட்டமும் குற்றமுற்ற கத்பான் எனும் இழிவு படைத்த  ஒரு கூட்டமும்  ஒரே அணியிற் சேர்ந்து யுத்தம் நடத்திட வேகமாய்ச் சென்றனர்இஸ்லாமிய சேனையை வேரறுத்திடுதற்காக.

குறிப்பு:   

குரைஷ் : ஒரு குழாத்தினர், குரைலா : இஃதொரு கூட்டம். புரை : குற்றம். உறுதல்அடைதல்கத்பான்இதுவும் ஒரு கூட்டம்புலையர் : இழிந்தவர்நிரை : அணிநேர்ந்திட : யுத்தம் நிகழ்ந்திட, பொருதல்இவர்தமை : முஸ்லிம்களைமுஸ்லிம்களை அடியோடு இல்லாமலாக்க.