ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

எம்.ஆர். ­பீர் அஹ்மத் (ஹக்கிய்யுல் காதிரிய் - இலங்கை)

    ஷாஹுல் ஹமீத் என்ற பெயரைக் கூறும்போதே எமது நெஞ்சங்களுக்கு உரமாக நினைவாக வருவது நாகூரில் நின்று அரசாளும் குதுபுல் ஹிந்த் சங்கைமிகு பாதுஷா நாயகமவர்களையேஅவர்களது திருநாமம் சூடப்பட்ட பாக்கியவான்களில் ஒருவரே  பாடகர் ஷாஹுல்  ஹமீத் அண்ணன் அவர்கள்அவர் எம்மை விட்டு மறைந்து இன்றைக்கு 17 ஆண்டுகள் சென்றிருந்தாலும் இசைத்துறையில் அவரது இடைவெளி இன்னும் நிரப்பப்படாமல்தான் இருந்து கொண்டிருக்கிறதுஇஸ்லாமிய இசை உலகில் பல இசையமைப்பாளர்கள் வந்தாளும் தமிழகத்திலே இஸ்லாமிய இசைக்கென்று தனித்த ஒரு பாணியினை அறிமுகப்படுத்திய முன்னணி இசையமைப்பாளர்தான் அண்ணன் ஷாஹுல்ஹமீத் அவர்கள்இன்று இசைப்புயல் .ஆர்.ரஹ்மான் அவர்களின் சூஃபிச இசை என்ற இசை வடிவங்களுக்கு அவருக்கு முதல் வழிகாட்டியாகத் திகழ்ந்து, அவரது ஆன்மீகத் தேடலுக்கு உரமூட்டியவர்களில் இவருக்கும் முக்கியமான ஒரு பங்கும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.   அதனால்தான் என்னவோ இசைப்புயலுக்கும் இவரது நினைவு நாள் வரும்போதெல்லாம் கண்கள் ஈரமாகிக் கொண்டிருக்கிறது

ஆன்மிக பந்தம்

    அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்களை நான் நேரடியாகச் சந்தித்தோ, பேசியதோ இல்லைஆனாலும்  எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஒரு பந்தம் ஆத்மார்த்த ஆன்மிகமான பந்தம்தான். அவரும் ஆலிம்புலவரும் இணைந்து வெளியிட்ட  இஸ்லாமிய இசைத் தொகுப்பு (யா நபியல்லாஹ்) அவர் மறைவிற்குப் பின் என்னை ஆத்மிகத் துறைக்கு ஈர்ப்பதற்கு ஓர்  ஊன்றுகோலாக இருந்ததுஅவரது வஃபாத் செய்தியை பின்னர் ஒரு பத்திரிகையில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்அப்போது நான் கல்லூரியில் படிக்கும் மாணவன்இலங்கையைப் பொறுத்த வரையில் ஷாஹுல் ஹமீத் அவர்கள் சினிமாத் துறையில்தான் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தாராம்அது அப்போதைக்கு அவரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் எனக்கு இருக்கவில்லைஅண்ணன் ஷாஹுல்  ஹமீத் அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை நோக்கும் போது மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உண்மையான நேசம் கொண்டவர்களது வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படியான நற்பண்புகளால் நிறைந்த ஒரு விலாயத்துடையவரது வாழ்க்கை மாதிரியே தான் இருந்திருக்கிறதுஏனெனில் அவரது வாழ்க்கையில் அவரது நாவிலிருந்து தெரிந்தோ தெரியாமலோ வெளியான வார்த்தைகள் அப்படியே அவருக்கு நடைபெற்றிருக்கிறதுஅவரது மறைவுச் செய்தியைக் கூட அவருடன் நெருங்கிப் பழகியவர்களோடு சில சந்தர்ப்பங்களில் சொல்லியும் இருக்கிறார்ஏன் சினிமாத் துறையிலே தான் பாடிய முதல் பாடலிலே தனது மறைவு செய்தியைப் பாடலாகவே பாடுமாறு அமைய (ராசாத்தி என்னுசுரு என்னதில்லராவோடு ராவாக சேதி வரும் கேளு புள்ள) பாடியே காட்டியுள்ளார்அவர் மறையும் போது சினிமாத் துறையினைச் சார்ந்தவர்களினும் பார்க்க அவரது நற்பண்புகளினால் ஈர்க்கப்பட்ட உள்ளங்கள்தாம் நிறையவே கண்ணீர் வடித்துள்ளதுஅவருடன் பழகிய அவரது வயதிலும் மூத்தவர்கள் அவரைப் பற்றிச் சொன்னவையயல்லாம் அவர் மிகப் பணிவானவர், எளிமையானவர், தற்பெருமையற்றவர், அவரிடம் நிறைய நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வி­யங்கள் நிறைய உள்ளன!

நற்பண்பின் சாட்சிகள் சில நிகழ்ச்சிகள்.

    ஒருமுறை அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்கள் குடும்பத்தோடு தர்ஹா ஒன்றுக்குச் செல்லுகின்ற வழியிலே ஒருவர் மயங்கி கீழே விழுந்து இருப்பதைப் பார்த்து அவரை எழுப்பி அவருடைய இவ்வாறான நிலைக்குக் காரணம் பற்றி விசாரித்த போது, “தனது வறுமைதான் தன்னை இவ்வாறு ஆக்கியுள்ளதுஎனக்கு

    எந்த நிலை வந்தாலும் நான் பிச்சை கேட்டு வாழ விரும்பவில்லைஎன்று அம்மனிதர் எடுத்துக் கூற, அப்போதைக்குரிய அம்மனிதருடைய தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு, தனது முகவரியைக் கொடுத்து தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொள்ள; பின்னர் அண்ணன் ஷாஹுல்ஹமீத் அவரைக் கவனித்து அவருக்கு மாம்பழக்கூடை ஒன்றினை வாங்கி அந்த வியாபாரம் செய்யக் கூடியவர்களையும் அறிமுகம் செய்து வைத்து தொடர்ந்து  இந்த வியாபாரம் செய்து வாருங்கள் என்று ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றி வைத்த  மாமனிதர்இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது எனக்கு ஞாபகம் வருவது அன்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பிச்சை கேட்டு வந்த ஒரு திடகாத்திரமான மனிதருக்கு கோடரி ஒன்றினை வாங்கிக் கொடுத்து மரம் வெட்டி தொழில் செய்து, தம்மை ஒரு மாதம் கழித்து வந்து பார்க்குமாறும், பின்னர் ஒரு மாதம் கழித்து நிறைய பணத்துடன் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வந்து அந்த மனிதர் பார்த்த சம்பவமே? அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த மனிதருக்கு கஷ்டமான தொழிலைக் கூட செய்யக்கூடிய திடகாத்திரம் இருப்பதைப் பார்த்து ஒரு கோடாரி வாங்கிக் கொடுத்து தொழிலுக்கு வழிகாட்டிய அந்த மாநபியின் நற்பண்புகளின் ஒன்றை அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்கள் தனது வாழ்க்கையில் தன்னைச் சந்தித்த மனிதர் வறுமையிலும் பிச்சை கேட்க மாட்டேன் என்ற ஒரே நோக்கத்திற்காக தொழிலைக் காட்டிக் கொடுத்து அவரது  வாழ்க்கையிலே ஒளியூட்டிய சம்பவமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவத்தை ஒட்டி நிற்பதில் மாநபியின் நற்குணச் சிறப்புகளில், மகிமைகளை நிறையவே தனது வாழ்க்கையில் கடைப்பிடித்துள்ளார் என்பது கண்கூடாக இருக்கின்றது.

    இன்னொரு முறை ஒரு ஏழை சகோதரர் ஒருவர் நோன்பு  துறந்து அவர் வீட்டிலே உணவருந்த வேண்டும் என்று கேட்க அவரும் அதற்கு வாக்குறுதி அளிக்கின்றார்அந்தக்  குறிப்பிட்ட தினத்தில் அவரது இசைக்கச்சேரி அந்த ஏழை சகோதரர் வீட்டிற்கு பல மைல் தூரத்திற்கு அப்பால்தான் இருந்ததுஅன்றைய தினம் ஒரு தண்ணீர்க் கோப்பையுடன் ஈத்தழம்பழம் கொண்டு நோன்பு துறந்து கச்சேரியை இரவு 9 மணி வரைக்கும் நடத்திவிட்டு அந்தக் களைப்புடனேயே மணி நேரம் பயணம் செய்து அந்த ஏழையின் வீட்டிலேயே தமது  இராப்போசனத்தையும், சஹர் வேளை யையும் ஒன்றாக அந்த விருந்தினை ஆக்கிக் கொள்கிறார்இந்தச் சம்பவம் அந்த ஏழை மனிதரையே நெகிழச் செய்துவிட்டதுஅவருடைய அந்தஸ்திற்கு அன்றைய  தினம் இரவு உணவு வேளையை ஏழை வீட்டில் உண்ணாது ரத்து செய்திருக்கலாம்

    என்றாலும் தனக்குக் கொடுத்த வாக்கும், தனது நிலைமையும் அறிந்து நடந்து கொண்ட அந்த நற்குணத்தினைக் கூறி அந்த ஏழை கூறுகிறார். “என் வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்திலும் நான் அழுததில்லை, துவண்டதில்லைஆனாலும் அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்கள் மறைவுச் செய்தி ஒன்று மட்டும் என்னை அழ வைத்துவிட்டது”.ஷாஹுல் ஹமீத் தமது பிள்ளைகளிடம் கூறுவாராம்.  “நோன்பு என்பது வயிறு நிறைய சாப்பிட்டு வயிறு உப்பத் தூங்குவது அல்ல; வயிறு குறைய சாப்பிட்டு ஏழையின் பசியில்  நாங்களும் பங்கு சேர்வதேஎன்று.

பணிவு

    சமீபத்திலே தொலைக்காட்சியிலே அவரது மேடை நிகழ்ச்சிப் பாடல் ஒன்றினைப் பார்க்கும் சந்தர்ப்பம் நேரிட்டதுபொதுவாக எல்லாப் பாடகர்களும் ஒரு பாடலைப் பாடுவதற்கு முன்னர் அந்தப் பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட சூழ்நிலை, அந்தப் பாடல் நம்மை எவ்வளவு பிரபல்யப்படுத்தியது, அது ஏற்படுத்திய தாக்கம் இவைகளைத்தான் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வார்கள்ஆனால் .சா. ஹமீத் அவர்களோ அதற்கு மாற்றமாக அவர் பாடிய சொந்தப்பாடலைப் பாடுவதற்கு முன்னால் நான் இந்தப் பாடலைப் பாடும்போது ஏதும் தவறுதல்கள் நேர்ந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் என்று தமது ரசிகர்களிடம் பணிவாகக் கேட்டுவிட்டு சிறப்பாகப் பாடி முடிக்கின்றார்மேடை அதிரும் கரகோ­த்தோடு... இப்படியான பணிவினை முன்னணிப் பாடகர்களிடம் காண்பது ரொம்ப அரிதான விடயமே.

    1982  காலப்பகுதியினிலே அவரது இஸ்லாமிய இசைப் பயணத்தின் ஆரம்பக் காலம்பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இஸ்லாமியப் பாடல்களையே தொகுப்புகளாக இடம்பெறச் செய்யப்பட்ட நேரம். இக்காலத்திலேயே இசைப்புயலுக்கும் இவருக்கும் நட்பு தொடர்ந்ததுஇசைப்புயல் இவரைச் சினிமாவிற்கு அழைத்தபோதும் அவரது மனமோ சினிமாத் துறையில் நாட்டம் கொள்ளவில்லைமாறாக இஸ்லாமியப் பாடல்களைத்தாம் இயன்றளவு வெளியாக்க வேண்டும் என்ற தேட்டம் நிற்கிறதுஅந்தத் தேட்டம் அவருக்கு முழுமையாக நிறைவேற்றிய மனதிருப்தி சங்கைமிகு ஷைகு நாயகம் இயற்றியயாநபியல்லாஹ்என்று தொடங்கும் அறபுப்பாடலுடனான தமிழ் இஸ்லாமிய இசைத் தொகுப்பினிலே தான் ஏற்பட்டது என்று சொன்னாலும் அது மிகையாகாது.  “யாநபியல்லாஹ்என்ற இசைத் தொகுப்புப் பாடல்கள் இன்னும் மீலாது விழாக்களில் இசைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறதுஅத்தொகுப்பில்  ஆலிம் புலவர் எழுதியுள்ள எல்லாப் பாடல் வரிகளுக்கும் உயிரூட்டும் விதமாக அண்ணன்வஸல்லம் அவர்கள் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது.  அந்த வரிகளுக்குக் கொஞ்சமும் பாரம் குறையாமல், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காதலர்களுக்கு ஆத்மாவிற்கு விருந்து தரும் இசையாகவே இசை அமைத்த அந்த பானி உண்மை நபி நேசர்களுக்கு மட்டும்தான்  முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    அந்தப்பாடல் ஆடியோ வெளியீட்டு விழாவில் அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்கள் உரையாற்றும் போது, எனது இசைப்பயணத்தின் நோக்கமே மாநபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இவ்வாறான ஓர் இசைத் தொகுப்பு ஒன்றினை வெளியாக்குவதேஅதை இன்று நிறைவு செய்துவிட்டேன்இனி எனது முடிவு எப்படியானாலும் எனக்குச் சந்தோ­ம் என்று அர்த்தம் பட அவர் கூறியது தனது மறைவினை இறைவன் அவரது நாவிலிருந்து வெளியுலகத்திற்கு வெளியாக்கிய முதல் சம்பவமே.

 பிரிவின் அழைப்பு    

    இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்னை ஒரு பலமான விசை ஒன்று வந்து அழுத்துகிற மாதிரியும் அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள தான் எவ்வளவு முயன்றும் முடியாமல் போனது போல கனவு கண்டதாக அவருடன் நெருங்கிப் பழகியவர்களிடம் கூறியும் இருக்கின்றார்விலாயத்துடைய அந்தஸ்து உடையவர்களுக்கு அவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ காலம் நெருங்கும் போது தனது மறைவுச் செய்திகளை தம்மோடு இருப்பவர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருவது இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விடயமல்லவா? எப்படியோ அவரது வஃபாத்திற்கு ஒரு விபத்து காரணமாயிற்றுஅம் மாமனிதர் இந்த உலகத்துடையவர்களது கண்களுக்கு தன் உருவத்தை மறைத்துக் கொண்ட தினம் 03ம் தேதி மார்ச் 1998. 

    அந்த விபத்தில் அவருடன் ஓரிருவர் மறைந்தனர்அந்த விபத்து  நேர்வதற்கு  சில வினாடிகளுக்கு முன்னரும் கூட அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியான பேச்சுக்களையே பேசியுள்ளார்அவர்களது புகழை நிறையப் பாட வேண்டும்அவைகளை நோன்புக் காலங்களில் சஹர் வேளைகளில் தொலைக்காட்சியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதேஇந்த இடத்தில் நமக்கு நினைவூட்டுவது அவர் பாடிய பாடல்மாநபியே உங்கள் மகிமையை சொல்ல எவரிங்கு உண்டுஇறைவனைத் தவிர”  என்ற பாடலில் வரும் சில அடிகள்,“ மரணிக்கும் போதும் அவர் பெயர் வேண்டும் 

    கபுரில் கூட அவர் துணை வேண்டும்.”  அவரது கடைசி வினாடிகளிலும் கூட மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது புகழைப் பாட வேண்டும் என்ற எண்ணமேதான் இருந்து வந்துள்ளதுஇதை சிந்திக்கும் போது அந்த ஆத்மா தனது உடலிலே இறுதி மூச்சை அடக்கும் போது கூட மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நினைவிலேயே தான் நின்று இருக்கும் என்பது தெளிவாகின்றது அல்லவா? அல்ஹம்துலில்லாஹ்.

விலாயத் கிரீடம்

    அவர் மறைந்து ஆண்டுகள் 17 சென்றாலும் அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்களுடைய இசையை இன்றும் நான் ரசிக்கின்றேன்அதற்கு மேலாக அவர் தன்னை ஆத்மிகத்தில் ஆக்கிக் கொள்ள தேர்ந்தெடுத்த ஆத்மிக வழிகாட்டியான (வாப்பா நாயகம்) அவர்களை எம் உயிரினும் மேலாக நேசிக்கின்றேன்எம் ஷைகு நாயகத்தின்  நேசம்தான் என்னவோ .. ஹமீத் அவர்கள் மறைந்தாலும் அவரைப் பற்றிய  இந்த ஆக்கத்தை எழுதுவதற்குரிய பந்தத்தை ஏற்படுத்தியதுஇசை உலகில் அவர் குரல் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறதுஆனால் ஆத்மிக உலகில் அவர் உடலும் உயிரும் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறதுசங்கைமிகு வாப்பா நாயகத்துடைய அவையிலே அவரைப் பற்றி பேச்சு எடுத்த போதெல்லாம் அவர்கள் சொன்னதுபாடகர் ஷாஹுல் ஹமீத் விலாயத்துடைய அந்தஸ்தில் இருக்கின்றார்அவரைப் பற்றியுள்ள சிந்தனை எமக்கு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறதேஎன்று. இதற்குச் சான்றாகவே 2001ஆம் ஆண்டு ஆஸூரா 10 ஆவது தினம் வெள்ளிக்கிழமை பஜ்ருடைய நேரம் அவரைப் பற்றி நான் கண்ட கனவு ஷைகு நாயகமவர்களது கூற்றினை உண்மைப்படுத்துகிறதுஅதன் சுருக்கம் பின்வருமாறு:

மறைந்தும் வாழ்வோர்

    வெலிகமாவில் சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் இல்லத்திற்கு அண்ணன் ஷாஹுல் ஹமீத்  அவர்கள் வருகை தருகின்றார்ஷைகு நாயகத்தின் அனுமதியோடு அவரை எனது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன்கூடவே ஒளியுருவத்தைச் சேர்ந்த இருவர் எம்மோடு வருகின்றார்கள்பாதையில் நடந்து போகின்றோம்இவரை கவனமாக கூட்டிச் செல்ல வேண்டும்ஏனெனில் இவர் விபத்தில் நின்றும் மயிரிழையில் தப்பித்து வந்தவர் என்று எனது அடி மனம் கூறிக் கொண்டே இருக்கின்றதுஎனவே அவரை மிகுந்தக் கவனத்தோடு சாலையில் கூட்டிச் செல்கின்றேன்ஒன்றாக இருந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மீண்டு வாப்பா நாயகத்துடைய வீட்டிற்கு வரும் வழியில் சற்று மழை தூறுகின்றதுசாலை ஓரமாக 

     ஒதுங்குகின்ற போது திடீர் என்று வந்த வாகனம் ஒன்றினை அவர் நிறுத்தி அதில் ஏறிப் போகின்றார்அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்கள் சொல்லாமலே போய்விட்டாரே என்ற எண்ணத்துடன் பக்கத்தில் நின்ற ஒளி உருவ மனிதர்களிடம்வந்துவிட்டுப் போனவர் அண்ணன் ஷாஹுல் ஹமீதா, வேறு யாருமா? ”என்று கேட்க அவர்கள்  ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? என்று வினவ ,அவர்தான் மெளத்தாகிப் போய்விட்டார்கள் என்று சொல்கின்றார்களேஎன்று நான் கூற, அதற்கு அவர்கள் சற்று உரத்த தொனியிலேஹயாத்தோடு இருப்பவர்களைப் பார்த்து ஏன் நீங்கள் மெளத்தாகிப் போய்விட்டார்கள் என்று கூறுகிறீர்கள்என்று கூற கனவும் கலைகிறது, பஜ்ருடைய பாங்கு சப்தமும் கேட்கிறதுசில வினாடிகள் ஆயின  நான் அந்த நிலையில் நின்றும் மீள்வதற்குஅல்ஹம்துலில்லாஹ்இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை விமர்சனம் செய்யலாம்ஆனால் உண்மையை அல்லாஹ் நன்கு அறிபவன்.

    அண்ணன் ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு ஷைகு நாயகமவர்களோடு இருந்த தொடர்பு குறுகிய காலமேஎனினும் அந்தக்  குறுகிய காலத் தொடர்பிலே அவர் நிறைவான மனிதராக மாறியமைக்குக் காரணம் ஷைகு நாயகம் அவர்கள்மீது வைத்திருந்த உயிர்த்துடிப்புள்ள நேசமும் பாசமுமாகும். உயிர்த்தியாகியான அவர் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மீது கொண்ட அன்பானது இறைநேசர் உவைஸுல்கர்னீ (ரலி) அவர்களை ஞாபகமூட்டுவதாகவும் அமையும். மேலும் அவருடைய நேர்மை, தற்பெருமை பொறாமை அற்ற தன்மை, தன் ஷைகு நாயகத்தோடு எப்படி பணிவாக நடந்துகொள்ளவேண்டும் என்ற தன்மை என்பதெல்லாம் உண்மை முரீதீன்களுக்கு நல் உதாரணமாகும். இதற்கு வாப்பா நாயகமவர்களின் கூற்று சான்றாகும். “எம் தாற்பரியத்தை அறிந்து ஒரு நிமிட நேரமானாலும்  எம்மோடு தொடர்பு கொண்டவர்கள் பேறு பெற்றார்கள்; அதற்கு மாறாக எம் தாற்பரியம் அறியாது எம்மோடு நீண்ட காலம் நெருங்கிப் பழகினாலும் புண்ணியமில்லைஎன்பது ஈண்டு கவனிக்கத்தக்கதாகும். எனவே எம் நெஞ்சம் நிறைந்த பாடகர் ­ஹீதே ஷாஹுல்ஹமீத் அவர்களின் உயர்வான நிலைக்கு ஷைகுநாயகம் அவர்களின் அருள்பிரார்த்தனை என்றும் இருந்து வருகிறது  என்பதனை நாம் உணர்ந்து கொண்டு அவர்களின் அன்பர்களுக்கும் இக்கட்டுரை மனச்சாந்தியை அளிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். ஆமீன். அல்ஹம்து லில்லாஹ்.