ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

தொகுப்பு  :  ஷிகுல் கலீல், திருச்சி.

ஹள்ரத் ஷாகுல் ஹமீது ஆண்டகையின் மாண்பு எத்தகையது?

மறைந்த அறிஞர் மு. கரீம் கனி குறிப்பிடுகிறார்:

    நபியின் வாரிசுதாரர்களாகிய (உலமா) அறிஞர்களின் சரித்திரத்தை ஆராயுங்கள்ஹிஜ்ரி 1015 வரை ஏழாயிரம் ஆண்டுகளின் காலச்சக்கரம் முடியும் வரை அந்தக் காலச்சக்கர வேகத்துக்குத் தகுந்த வண்ணமே முஸ்லிம் உலகில் தோன்றிய அறிஞர்கள் நபியின் கருத்துகளை விளங்குவோராக இருந்தார்கள்பிறகு 354 ஆண்டின் மறு வேகமான. காலச்சக்கரம் ஆரம்பித்த காலத்தில் தோன்றிய முதல் அறிஞர் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது ஆண்டகை (ரலி) ஆவார்கள்ஒரு நகரிலிருந்து கொண்டு உபதேசம் செய்து கொண்டு இருந்தார்களா? சிந்தியுங்கள்.

    போக்குவரத்துச் சாதனங்கள் உண்டாகாதிருந்தும் கால்நடையாகவும் பாய் மரக்கப்பல் வாயிலாகவும் அவர்கள் உலகத்தைச் சுற்றி தீன் முழக்கம் செய்த மாண்பைக் கவனியுங்கள்கால்நடையாக வடக்கில் இமயமலையையும் கடந்து மகாசீனம் வரை சென்று பிரச்சாரம் செய்தார்கள்பிறகு மேற்கில் அரபு நாடுகளில் பிரச்சாரம் செய்தார்.

    இக்கால சகாப்தமாகிய முந்நூற்றி ஐம்பத்தி நான்கு ஆண்டுகளின் ஆரம்பத்தில் தோன்றி மாறிய கலாச்சார வேகத்தை உணர்ந்து, அதற்குரிய பிரயாசையுடன் தீனுடைய பொறுப்பை நிறைவேற்றிய மகான் அல்லவா ஹழ்ரத்  ஷாஹுல் ஹமீது ஆண்டகை? கடைசிக்  காலத்தில் தமிழ்நாட்டில் வந்து சமாதி பெற்றதால் கல்விக்குறைவுள்ள நம்மவர்கள் அவர்கள் எழுதியதையும், போதித்ததையும் பாதுகாக்கத் தவறிவிட்டோம்ஹழ்ரத்  ஷாஹுல் ஹமீது (ரலி) அவர்களின் குருவாகிய செய்யிதுனா முஹம்மது கவுது (ரலி) அவர்கள் வட இந்தியாவில் குவாலியரில் சமாதி பெற்றிருக்கிறார்கள்.

    வட இந்தியாவில் கல்வி நிலை தென்னிந்தியாவை விட ஒரு படி மேலாக இருந்த காரணத்தினால் ஹழ்ரத் முஹம்மது கவுது(ரலி) எழுதிய எழுத்துக்களும் செய்தருளிய போதனைகளும் அழியாது இருக்கின்றன. இவற்றைப் படித்து  பயனெய்தும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது உண்டு.  அது கொண்டு ஹழ்ரத்  ஷாஹுல் ஹமீது (ரலி) அவர்கள் எத்தகைய போதனைகள் அக்காலத்தில் செய்தருளியிருக்கக்கூடும் என்பதை ஒரு விதத்தில் அறிவோம்.  

    கலப்பற்ற தவ்ஹீதின் ஞானத்தையே ஹழ்ரத் முஹம்மது கவுது (ரலிஅவர்கள் போதித்தார்கள். தங்கள் கருத்தை அறியாமல் வருடம் ஒருமுறை தங்கள் பெயரைக் கொண்டு விழா மட்டும்  நடத்தும் கோஷ்டியை உண்டாக்குவதற்காக  இந்த நாதாக்கள் வரவில்லைஉலகில் சுத்த சத்திய தவ்ஹீது நிலை பெறுவதற்காக தங்களின் ஜீவியத்தையே தத்தம் செய்து உலகில் தீன் சுடர் கொளுத்திய மகானாக விளங்கினார்கள்கொம்புத் தேங்காய் முளைக்க வைக்கவும் சிலரின் வயிறுகளில் உள்ள மருந்தீடுகளை வெளியாக்கவும், பிசாசு பிடித்தவர்களை சுத்திகரிக்கவும் அவர்கள் வரவில்லைஇவை சில்லரை சித்துக்கள்ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்களின் கால்தூசிப் பட்டவர்கள் செய்யக்கூடியவைஅவர்கள்   ஒரு சகாப்த ஆரம்பத்தில் மறு சகாப்தற்குரிய ஆரம்ப முயற்சிகளை விட்டு, கடைசிக் காலத்தில் கனி தரக்கூடிய விருட்சங்களுக்கு சிந்தனை செய்திகள் தந்தார்கள். இவை மறுக்க முடியாத பேருண்மை அல்லவா?

     திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து தீன்கூறி நிற்பர் கோடி

    சிங்கா சனாதிபர்கள் நதரேந்தியே வந்து ஜெய ஜெயாவென்பர் கோடி

    ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் வலிமார்கள் அணிஅணியாய் நிற்பர் கோடி

    அஞ்ஞான வேரெறுத்திட்ட மெய்ஞ்ஞானிக ளணைந்தருகில்  நிற்பர் கோடி

    மக்க நகராளும் முஹம்மதிரஸூல் தந்த மன்னரே என்பர் கோடி

    வசனித்து நிற்கவே கொலு வீற்றிருக்குமுன் மகிமை சொல்ல வாயுமுண்டோ

    தக்க பெரியோனாருள் தங்கியே நிற்கின்ற தவராஜ செம்மேருவே

    தயவு வைத்தென்çனையாள் சற்குணங்கொடி கொண்ட ஷாஹுல் ஹமீதரசரே!ஷாஹுல் ஹமீதரசரே!!


நாகூர் ஆண்டகையின் நன்மொழிகள்

( 1 ) கோபம் நல்வினை அனைத்தையும் துண்டிக்கும் ஒரு கூர்மையான ஆயுதமாகும்.

( 2 ) சினமென்னும் நெருப்பை நல்லுணர்வு எனும் நீரைக் கொண்டு பெரியோர்கள் அணைத்து  உயர்வும் பெற்றார்கள்.

( 3 ) கோபம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையைத் தடுத்து விடும்கோபம் கொண்டு நடப்பவர்களுக்கு எதுவும் கைகூடாது.

( 4 ) தொழுகையைக் கைவிடாதீர்கள்தொழுகைக்காக ஒவ்வொரு முறை தலை தாழ்த்தும் போதும் உங்கள் மதிப்பு இறைவனின் முன்னிலையில் உயர்கிறது.                     

 (  5 ) நீங்கள் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதற்காக மனம் கசிந்து இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்அவன் மன்னித்தருள்பவனாக இருக்கிறான்.

( 6 ) மரணம் என்பது வாழ்க்கையின் ஓர் அத்தியாயத்தில் முடிவும் மறு அத்தியாயத்தின் ஆரம்பமும் ஆகும்வரவு செலவு கணக்கு போல மக்களின் ஏட்டில் இறைவன் நன்மை தீமைகளை எழுதிக் கொள்கிறான்இதனை உணராமல் மரணத்தை மறந்து செயலில் ஈடுபடுபவர்கள் இறுதியில் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.

( 7 ) நல்ல செயல் புரிவதற்காக நீங்கள் ஓர் அடி எடுத்து வைத்தால் சுவர்க்கம் புகுவதற்கு உங்களுக்கு ஒரு படி அமைக்கப்படும்.

( 8 ) நல்ல எண்ணங்களை நினையுங்கள்நல்ல கருமங்களைச் செய்யுங்கள்நல்லவற்றையே நீங்கள் பெறுவீர்.

( 9 ) வறுமையின் சுகம் காணுங்கள்இறைவனின் பிடியினால் வறுமையின் வலி தெரியும்.

( 10 ) உடல் வலிமை ங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் போது, இறைவனை வணங்குவதற்காகத்தான்.

( 11 ) நாம் செய்யும் நன்மை, தீமை பலன்களையே நாம் பெறுவோம்.

( 12 ) இறைவனின் பார்வை எந்நேரமும் நம் மீது இருக்கிறது என்று தீமையை விட்டு விலகியிருப்பீர்.

( 13 ) விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுங்கள்விலக்கப்பட்ட தீமைகளைச் செய்யாமல் இருங்கள்.