ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருமறை அறிவியல்

    பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் ஆசனம் பயிலக்கூடாது என்றும், கர்ப்பிணிப் பெண்கள் கருத்தரித்த ஐந்தாம் மாதத்திலிருந்து குழந்தைப் பேற்றுக்குப் பின் இரண்டு மூன்று மாதங்கள் வரை ஆசனம் செய்தல் கூடாது என்றும் உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் பெண்கள் மாதவிடாய் (ஹைலு) மற்றும் பிரசவத் தீட்டு (நிபாஸ்) காலங்களில் தொழக் கூடாது என்று உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டு மட்டும் சொல்லப்பட்டதல்ல; தூய்மையானவனான இறைவனை வணங்குவதற்குத் தூய்மையான உடல் வேண்டும் என்பதேயாகும்தொழுபவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டு (உளூச் செய்து கொண்டு) தொழ வேண்டும் என்று கடமையாக்கப்பட்டுள்ளதால் இஸ்லாம் சுத்தத்திற்கு முதலிடம் அளிக்கும் மார்க்கமாக அமைந்துள்ளதுஇதனைக் கீழ்க்காணும் இறைவசனம் எடுத்தியம்புகிறது:

    தொழுகைக்காக உளூச் செய்து கொள்ளுங்கள். குளிக்கும் அவசியம்  ஏற்பட்டால் குளித்துக் கொள்ளுங்கள்; நிர்பந்த நிலை ஏற்படும் போது தயம்மும் செய்து கொள்ளுங்கள்  ( 5 : 6)

    மேலும், தொழுகையை நிலை நாட்டுங்கள்; தொழுகை அசுத்தமான மானக்கேடான காரியங்களிலிருந்து தடுக்கிறது ( 29 : 45) என்றும்,

     ஜகாத் (தர்மம்) உளத்தூய்மைக்கான வழியாகும் (9:103) என்றும் திருவசனங்கள் நமக்கு அறிவிக்கின்றன.

    இறைவனுக்கு ஸுஜூது செய்வது என்பது இறைவனுக்குத் தலை வணங்கி அவனைத் தொழுவதாகும் என அறிகிறோம்இது வெளிப்படையான பொருள்ஆனால் திருக்குர்ஆனில் உள்ள வசனங்களில் குறிப்பிடப்படும் ஏவல் விலக்கல்களின்படி நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அதன் உட்பொருள்இதுதான் அல்லாஹ்வுக்கு வழிபடுதலாகும்இதுதான் இஸ்லாம்இத்தகையவர்களே படைப்பில் நல்லவர்கள் (ஹைருல் பரிய்யா) என்றும், இறைவன் சொல்லியபடி நடக்காதவர்கள் படைப்பில் மிகக் கெட்டவர்கள்ர்ருல் பரிய்யா) என்றும் (98 : 6-7) இறைவன் கூறுகிறான்.  

    இந்நிலையில் மற்ற உயிரினங்களை  ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்குத்  தள்ளப்படுகிறார்கள்.  ஆக, “மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்”                       (95 : 4) என்று சொன்ன இறைவன் அடுத்த வசனத்தில் (மனிதனை அவன் செயல்களின் காரணமாக) “அவனைத் தாழ்ந்தவர்களில் மிக்க தாழ்ந்தவர் களாக்கினோம் (95 : 5)” என்றும் எச்சரிக்கிறான்.

    ஆக, தாவரத்தைப் போல தலைகீழாக நிற்க வைக்காமலும் பிராணிகளைப் போல குனிந்த நிலையில் நிற்க வைக்காமலும் நம்மை அழகிய அமைப்பில் உருவாக்கி, உன்னதமான நிலைக்கு உயர்த்திப் பகுத்தறிவையும் கொடுத்துப் படைத்தவனையே அறியும் பேற்றையும் பெற்றதற்கு நன்றி செலுத்த ஒரு நாளைக்கு ஐந்து முறை சில மணித்துளிகள் ருகூவிலும் ஸஜ்தாவிலும் இருந்து நாம் இறைவனை நினைவு கூர வேண்டும் என எதிர்பார்க்கும் அர்ரஹ்மானின் அன்புக் கட்டளைக்கு அடிபணிவது நியாயம்தானே!

    நாம் தொழுகையில் கியாம் (நிலை), ருகூவு, ஸஜ்தா மற்றும் ஜல்ஸா (இருப்பு) ஆகிய நிலைகளில் நம்மை ஈடுபடுத்தி மனதை ஒருமுகப்படுத்தி இறை வசனங்களின் மூலம் இறைவனை அவனது குணம் (தாத்து) மற்றும் தன்மை (ஸிஃபத்து) களால் புகழ்ந்து, நாம் நேர் வழியில் வாழ அவனது அருளையும், உதவியையும் நாடி எல்லோருடைய பாவ மன்னிப்புக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

    மேலும், அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என பழந்தமிழ் இலக்கியம் கூறுவது போல, மற்ற படைப்பினங்களுக்கில்லாத வகையில் மனிதனுக்கு மட்டுமே இறைவன் கைகளைக் கொடுத்துச் சிறப்பித்துள்ளான். நமது உயர்வான நிலைக்கும் அனைத்துச் செயல்களுக்கும் கைகளே இன்றியமையாத உறுப்புகளாகத் திகழ்வதால், கைகளைக் கொடுத்த இறைவனிடமே நாம் தொழுகையில் இரு கைகளையும் ஏந்தி மிக்க மேலானவனுடைய அருளை இம்மையிலும் மறுமையிலும் பெற வேண்டுகிறோம்இறைமறை காட்டும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அவ்வாறு இறைஞ்ச வேண்டும்இந்த வாய்ப்பை மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்அல்ஹம்து லில்லாஹ்.

    இறைவனே! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என் சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக; எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையை (துஆவை)யும் ஏற்றுக் கொள்வாயாக (14 : 40).  இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இறைஞ்சுவது நாம் தொழத பின் துஆ கேட்க வேண்டும் என்பதை  அறியச் செய்கிறது.

    இறையருளைப் பெற வேண்டி ஏந்திய நம் கைகளின் விரல்களின் மூலம் அகில உலகத்தையே சூழ்ந்துள்ள இறையயாளி (அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமிக்கு ஒளி (24:35)  ( சிதுஷ்விவிஷ்லிஐ லிக்ஷூ ஸஷ்மிழியி க்ஷூயிற்ஷ்d க்ஷூrலிது உலிவிதுலிவி) நமது விரல்களின் நுனியில் உள்ள பெனிசினியன் செல்கள் மூலம் (  Pழிஉஷ்ஐஷ்ழிஐ ளீலிrஸ்ரீற்விஉயிeவி ) உட்கவரப்பட்டு  நரம்புகளின் வழியாகப் பெருமூளையை அடைகிறதுபின் அங்கிருந்து நரம்புகளின் வாயிலாக உடலின் எல்லாப் பாகங்களையும் அடைந்து மீண்டும் விரல் நுனிகளின் வாயிலாகவே இறைவனது பேரொளியாகிய அருட்கடலை அடைகின்றதுஇவ்வாறு வெளிச் செல்லும்பொழுது பெனிசியன் செல்கள் மின் அதிர்வுகளுக்குட்பட்டு மெல்லிய இரேகைகளை கைகளில் தோற்றுவிக்கின்றனஇத்தகைய அமைப்பு மனித இனத்திற்கு மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது

    ஆக நாம் இறைவனது ஒளியால் பிணைக்கப்பட்டு நாம் எங்கிருந்தாலும் அவன் நம்முடனே இருந்து நம்மைப் பாதுகாக்கிறான்இவ்வாறு நாம் இறையயாளியால் இயக்கப்படுகிறோம்இவற்றைக் கீழ்க்காணும் இறை வசனங்கள் வாயிலாக அறியலாம்.

    வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான்நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனேயே இருக்கிறான்அன்றியும் அல்லாஹ் நீங்கள்செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான் (57 : 4)

    அடுத்துநிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் (மலக்குகள்) இருக்கிறார்கள். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள், நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். (82 : 10, 11, 12)

    ஆக, மலக்குகள் நம்மைச் சூழ்ந்து இருப்பதால்தான் நாம் தொழுகையை முடிக்கும் பொழுது மலக்குகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று ஸலாம் சொல்லுகிறோம்இவ்வாறு நம்மைப் படைத்து, பாதுகாத்து நம்முடனேயே இருந்து நாம் செய்பவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கும் அல்லாஹ்வுக்கு மாற்றமாக நாம் தவறு செய்ய நினைப்போமா?

    மனிதனது ஈமானில் சிறந்தது அவன் எங்கிருந்தாலும் அவனுடன் அல்லாஹுத்த ஆலாவும் இருக்கிறான் என்பதை அவன் உணர்தல் ஆகும்.  (அல்ஹதீஸ்)