ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

இலங்கை வீரகேசரி இதழில் 20.12.2014 அன்று  வெளிவந்த   சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் நேர்காணல்

இலக்கியமே ஓர் ஆழி

பிரபல எழுத்தாளர் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அவர்கள் வழங்கிய நேர்காணல்

    இலக்கியமே ஓர் ஆழிஅதிற் கரை காண்டலில் விழைதலே அறிஞர் கடன்இலக்கிய மின்றேல் எதனினும் இன்பம் இராதுஇவ்வாறு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா இளம் வயதிலேயே திருக்குர்ஆனை முழுவதுமாக ஓதி முடித்துவிட்டார்கள்திருக்குர்ஆன் ஓதத் தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அருமைத் தந்தையாரான ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானாவிடமே முறைப்படி கற்றுத் தேர்ந்தார்கள். அதே போன்று வாழ்க்கைப் பாடத்தையும் தம் தந்தையாரிடமே முறையாகக் கற்று சன்மார்க்க ஞான மேதையாகவும் தமிழ்ப் புலவராகவும் திகழ்கிறார்கள்.

    வி.வி. தேர்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள்பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர்ப் பயிற்சி கலாசாலையில் கல்வியைப் பூர்த்தி செய்த இவர்கள் தமிழ், அரபு மொழி, இஸ்லாமிய நாகரீகம் போன்ற பாடங்களைப் போதித்து பின்னர் அதிபராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியாகவும், கல்வி அதிகாரியாகவும் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்கள்அரபு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சம பாண்டித்தியம் பெற்றுள்ள கலீல் அவ்ன் 

    மெளலானா நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாதுதமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் தன்னை அறியும் மெய்ஞ்ஞானத்துக்கும் இவர்கள் ஈழத்தின் ஒரு மூலையிலிருந்து கொண்டு தங்களின் 77 ஆவது வயதிலும் ஆரவாரமின்றி அழகுத் தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் சங்கமத்துக்கு வழங்கிய நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

    

இலங்கை எழுத்தாளர்களுடன் அல்லாது இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்படக் காரணம்?

    இலங்கையில் கதவு தாழிடப்பட்டிருந்ததுபுகுத் முடியவில்லைஎனினும் இந்தியாவில் விரியத் திறக்கப்பட்டிருந்ததுஅங்கு புகுதலில் எளிது கண்டேன்அதனாலேயே நாம் எழுதும் நூல்களனைத்தும் அங்கேயே அச்சிடப்பட்டன. அச்சிடப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனஅங்கு அதிக வரவேற்பு இருந்தது. இதனாலேயே இந்திய எழுத்தாளர்களுடன் இணைந்து செயல்படக் காரணமாயிற்றென்பேன்.

    ஆரம்ப கால இலக்கியத்துக்கும் தற்கால இலக்கியத்துக்கும் எவ்வாறான வேறுபாடு காணப்படுகின்றது?

    எமது ஆரம்ப கால இலக்கியம் சங்க கால இலக்கிய நூல்களுடன் தொடர்புடைத்துஎமது வயது பதினேழுக்கு மேல் மரபுக் கவிதைகள் எழுதுவதில் மிக்கார்வங்கொண்டு எழுதி வந்தோம்அன்றிலிருந்து இன்று வரை எழுதப்படும் பாக்கள் யாவும் யாப்பிலக்கண அமைவு கொண்டுள்ளமையால் அன்றும் இன்றும் தரத்தில் ஒரே நிலை கொண்டதுயாப்பிலக்கண ஒழுங்கு முறைப்படியே புதுப் பாக்களையும் எழுதுவோம்பாட்டுக்கு எதுகையும் மோனையும் உயிர் போன்றவையாப்பிலக்கண வலுவின்றி பா அமைத்தலையே புலவர்கள் விரும்புவார்கள்முன்னைவிட இப்போது யாத்துவரும் இலக்கிய நூல்கள் மிக்கன.  (அதிகம்).

 

நீங்கள் துறவற நிலைக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டதன் காரணம்?

    என் குடும்பத்து முன்னோர்களில் அதிகம் பேர் இல்லத்துறவு பூண்டவர்களேவாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட துறவு எனின் சாலும்எமது துறவறம் இல்ல மனையாளையும் பிள்ளையையும் துறந்து கானகமேகுவதன்று.  இதனையே நாம் இல்லத்துறவு என்போம். 


எவ்வாறான புத்தகங்களை எழுதுவதற்கு நாட்டம் கொள்வீர்கள்? இதுவரை எத்தனை நூல்களை எழுதியுள்ளீர்கள்?

    புராணங்கள், கவிதைகள் முதலான இவையாவும் யாப்பிலக்கண அமைவோடு அமைவதையே நாம் விரும்புகிறோம்புது வகைக் கவிதைகள் (பாரதியார் எழுதிய கவிதைகளைப் பன்பற்றியும்) நூல்கள் எழுதியுள்ளோம்இப்போது உமர் (ரலி) புராணம் எனும் பெயருடன் ஒரு புராணம் எழுதி வருகிறோம்ஓரிலக்கண நூலும் எழுதி வருகிறோம்யாப்பிலும் ஒருவிளக்க நூல் எழுதுகிறோம்இதுவரை இருபது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளோம்இன்னும் பல நூல்கள் அச்சிடற்குள்ளன.


இவ்வளவு காலம் இலக்கியத் துறையில் இருந்தும் நீங்கள் வெளியுலகிற்கு வராமல் இருந்ததற்கான காரணம் என்ன?

    முன்னர் 82 - லும் இது பற்றி எழுதியுள்ளோம்பகைவரும் பொறாமைக்காரரும் இதற்குத் தடைக் கல்லாயமைந்திருப்பர் எனக் கருதுகிறோம்.


சாதாரணமாக எழுத்தாளர் ஒருவரின் பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

    நம் பணி பணத்துக்காக வெனக் கருதாதிருத்தல் வேண்டும்பெருமைக் கெழுதாமல் இலக்கியங்களுக்கு ஏற்ற தரத்தில் எழுதல் வேண்டும்சங்க கால இலக்கியத்துக்கு அதன் தரத்திற்கமைந்த நடையில் எழுதல் வேண்டும்எதை எவர் வாசிக்கிறாரோ அவருக்கது பொருத்தமான நடையாக அமைவது சிறந்ததுசிறந்த இலக்கியத்தை பத்திரிகைத் தமிழுடன் கலத்தல் நல்லதன்று என்பது எம் கருத்துஎதை எவர் விரும்புகிறாரோ அதற்கேற்ற விளக்கம் அதில் இருத்தல் வேண்டும்.

இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

    மனங்களுக்கேற்ற புதுப்புது கல்வியைத் தரும் கலைத்துறைக்குகந்த நல்ல விடயங்களை எழுதல் அவசியம்பார்த்ததையே பார்த்து பிரதி பண்ணாமல் மனதுக்கேற்ற நல்ல புதுவிடயங்களை எழுத்தாளர்கள் அமைத்துக் கொள்ளல் வேண்டும்.  நல்ல இலக்கியச் சொற்களை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.  சொல்லாராய்ச்சியோடு எழுதல் வேண்டும்.  பல்லுடைக்கும் தமிழ் என்றெல்லாம் கூறி கம்பராமாயணம், சீறாப் புராணம் முதலான மற்றும் சங்ககால இலக்கிய நூல்களை உதாசீனம் செய்யாதிருத்தல் வேண்டும்.  ஆயின் சொல்வளம்  குன்றி, தாயினும் தந்தையினும் பேச்சு வழக்குகள் எம்மில் ஊன்றிவிடும்.  அதனை எளிய தமிழெனவும் சொல்ல முடியாது.  கொச்சைத் தமிழ் வழக்கில் அது அமைந்து விடும். இவையயல்லாம் கவனித்து எழுதுதலே இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் தொண்டு செய்தல் எனவாகும்.

நீங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் பற்றி?

    மகானந்தாலங்கார மாலை - (சித்திரக் கவிதை) ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர்.  (இலங்கை சாகித்திய மன்றத்தில் பரிசு பெற்றது).  பேரின்பப் பாதை (ஞான விளக்கம் தமிழில்) மனிதா! (அமுத மொழித் தொகுப்பு) கஸீதத்துல் அஹ்மதிய்யா (அரபு தமிழ் வாரிதாத்துப் பாக்கள்), தாகிபிரபம் (ஞான விளக்கம்), இறையருட்பா (ஞானக் கவிதைகள்), அற்புத அகில நாதர் (கவிதை), நாயகர் பன்னிரு பாடல் (கவிதை),அவ்ன் நாயகர் அருள்மொழிக் கோவை (ஆங்கிலம் தமிழ்), பத்று மெளலிது (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு), பர்சன்ஜி மெளலித் (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு), துஹ்பதுல் முர்ஸலா (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்), ஹகாயிகுஸ்ஸபா (பரமார்த்தத் தெளிவு), மருள் நீக்கிய மாநபி, நபி வழி நம் வழி, ஒளியை மறைக்கத் துணியும் தூசு இறைவலிய் ஸய்யிது முஹம்மது மெளலானா (கவிதை), உண்மை விளக்கம், குறிஞ்சிச் சுவை ஆகிய நூல்களை எழுதியுள்ளோம்அது மாத்திரம் அல்ல. இறைநாட்டப்படி அடுத்த வருடம் முதற் பகுதியில் நூல்களை வெளியிடவும் உள்ளோம்.

நேர் கண்டவர்  :  முஹம்மது ஹிஜாஸ்