ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

 தொகுத்தவர்: -  

திருமதி  றூ.யூ.மூ. திவ்யா பிரபு  ணூ.ய்.றீ.,ஷ்.பு.றீ; சென்னை

    உண்மையில் ஜீவாத்மன் ஒரு பொழுதும் பரமாத்மாவிடத்திருந்து பிரிந்திருப்பதில்லை.

    எப்பொழுது வேண்டுமானாலும் சமாதியில் உடலை உகுத்துவிட இயலுமஆனால் இறை சாந்நித்தியத்தை அனுபவிப்பதற்கும் பக்தர்களோடு இணக்கம் கொண்டிருப்பதற்கும் இலேசாக ஆசையை நான் வைத்திருக்கிறேன்.

    சான்றோன் ஒருவனைத் தங்கள் வீட்டுக்கு அதிதியாக அழைக்கிறவர்கள் சில வேளைகளில் அந்தச் சான்றோனுக்குத் தக்கபடி உபசாரம் செய்வதில்லைஅப்படி அவர்கள் பராமுகமாக இருப்பது அறியாமையினால் இருக்கலாம்; அல்லது அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்ஆனால் சான்றோன் அதை முன்னிட்டுச் சிறிதேனும் மனம் நொந்து கொள்ளலாகாதுஅவன் மனம் நொந்து கொள்வானாகில் விருந்துக்கழைத்த மனிதனுக்குப் பெருந்தீங்கு விளையும்அம் மனிதனுடைய நலத்தை முன்னிட்டு சான்றோன் மனம் நோகாதிருந்து கொள்ளவேண்டும்.

    வெறும் அத்வைத ஞானம் மட்டும் எனக்குப் போதாது. என்னிடத்தில்சிறிதளவாவது அகங்காரம் இருக்கும் வரையில் என்னை ஆட்கொண்டுள்ள இறையும் என்னுடன் இருக்கிறான்.

    நான் ஓர் இயக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறேன்நான் மக்களுக்கு உபதேசம் செய்கிறேன் என்று எண்ணுகிற அகங்காரம் பக்குவமாகாத அகங்காரம்.

    யான் எனது என்னும் செருக்கு மெய்ப் பொருளை மறைத்திருக்கிறது.

    தனது நிழலைத் தானே பிடிக்க முடியாதுஅந்த நிழல் போன்றது அகங்காரம்அதை அகற்ற யாருக்கும் இயலாதுசூரியன் தலைக்கு மேல் வந்தால் நிழல் பாதத்துக்குக் கீழ் மறைந்து போகிறதுபிரம்ம ஞானம் வருகிற பொழுது அகங்காரம் அகன்று போகிறது.

    சூரியன் மிகப் பெரியது எனினும் சிறிய மேகம் ஒன்று காட்சிக்கு எட்டாது அதை மறைத்து வைக்கிறதுஅந்த மேகம் போன்றது அகங்காரம்ஞானத்திற்கு இடைஞ்சலாயிருப்பது அகங்காரம்குரு கிருபையால் இந்த அகங்காரம் அகன்று போமாகில் ஒருவனுக்கு இறை தரிசனம் கிட்டுகிறது

    உப்பு பொம்மை ஒன்று சமுத்திரத்தை ஆழம் பார்க்கச் சென்றதுஅப்படிச் சென்ற பொம்மை கடலின் உப்பு ஜலத்தில் தனது வியக்தியை இழந்ததுஅதே விதத்தில் சுத்த ஞானத்தைப் பெறுகிறவன் தனது ஜீவ வியக்தியை இழக்கிறான்தான் பெற்ற அனுபவத்தை எடுத்து விளக்குதற்கு அவன் ஜீவபோதம் பெற்று வருவதில்லை.

    சாதகன் ஒருவன் ஞானக் கண்ணைப் பெற்றாக வேண்டும். மனது தூயதாகும்போது அத்தூய மனதே ஞானக்கண்ணாக வடிவெடுக்கிறது. ஒருவன் இந்த ஊனக்கண் கொண்டு கடவுளைக் காண்கிறானா? இல்லைஊனக்கண்ணால் இறைவனைக் காண முடியாதுசாதனத்தின் விளைவாக ஒருவனுக்கு ஞானக்கண் உண்டாகிறதுஇறையைக் காண அதுவே உதவுகிறது.

    இறையைக் காண்பது எங்ஙனம்? இந்த ஊனக்கண்ணால் நாம் இறைவனைக் காண முடியாதுஅதற்கு ஞானக்கண் வேண்டும்.

    இறையருள் அடையப் பெற்ற பிறகே ஒருவனுக்கு ஞானக்கண் திறக்கிறதுஅத்தகையவனுக்கே பிறருடைய ஆத்மபரிபாகம் எத்தகையது என்பது நன்கு விளங்குகிறது; பொருந்துகிற சாதனவகைகளையும் காட்டித்தர அவனுக்கு இயலுகிறது.

    அத்வைத சித்தி வாய்க்கு முன்பு சைதன்ய உணர்வு வாய்ப்பதில்லை. இறையை நாம் அறிந்து கொள்ள முடியுமா? நாம் படைத்துள்ள இந்த இந்திரியங்களைக் கொண்டுபுத்தியைக் கொண்டும் நாம் இறையை அறிந்து கொள்ள முடியாது. அவரை அறிவதற்கு மனது தூயதாக மாறியமைய வேண்டும். 

    மாடு மேய்க்கும் சிறுவர்கள் சிலரை ஒரு தடவை நான் பார்த்தேன். அவர்களைப் பார்த்ததும் சுவர்க்கத் தோட்டங்கள்தாம் எனக்கு ஞாபகம் வந்ததுஅச்சிறுவர்களுக்கு பட்சணம் கொஞ்சம் வழங்கினேன்பிறகு அதினின்று ஒரு சிறு பகுதியைப் பிரசாதமாக நான் எடுத்துக் கொண்டேன்.

    அக்ஞானத்தில் உழல்பவர்கள் இருள் சூழ்ந்துள்ள குடிசைகளுள் வாழ்ந்திருப்பவர்களுக்கு நிகர். ஆனால் ஞானத்தைப் பெற்றவர்களோ கண்ணாடி வீடுகளில் வசித்திருப்பவர்களுக்கு நிகர்அவர்கள் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் பார்க்க முடியும்.

    ஆங்கிலச் சிறுவன் ஒருவன் ஒரு மரத்தடியில் தன் உடலை மூன்று வளைவாக வளைத்து நின்று கொண்டிருப் பதைப் பார்த்தேன்எனக்குச் சமாதிநிலை கூடியது. நான் இளைஞர்களிடத்து அளவுக்கு மிஞ்சிய பற்றுதல் வைக்கக் கூடாது என்றும், என் மனதை எப்பொழுதும் பரம்பொருளிடத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்றும் குரு என்னைக் கண்டித்துப் பேசினார்அதனால் எனக்குக் கொஞ்சம் சஞ்சலம் உண்டாயிற்றுநான் உலகப் பற்றுடையவனாக மாறிவிட்டேனோ வென்று என்னைப் பற்றி ஐயம் உண்டாயிற்றுஅப்பொழுது திடீரென்று குரு காட்சி கொடுத்து தானே அனைத்தும் எனக் கூறலானார்!