ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

யூதச் சேட்டை

    கைபர்போரின் போது யூதர்களின் ஹின்று கில்ஆவை வெற்றி கொண்ட  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மற்றும் சில கோட்டைகளின் பக்கம் முன்னேறிச் சென்றார்கள். எல்லாக் கோட்டைகளையும் வெற்றி கொண்ட பின் கடைசியில் வதீஹ் இன்னும் ஸலாலீபின் பக்கம் முன்னேறினார்கள். இந்த இரண்டு கோட்டைகள் மட்டுமே பாக்கியாக இருந்தன. யூதர்கள் எல்லாப் புறங்களிலிருந்தும் வந்து பாதுகாப்புடன் இருந்தார்கள். 14 நாட்கள் முற்றுகையிட்டதற்குப் பிறகு நிர்பந்தமாக சமாதானத்திற்காக வேண்டினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். யூதர்கள் இப்னு அபில் ஹகீக் என்பவரைச் சமாதானப் பேச்சு வார்த்தைக்காக அனுப்பி வைத்தார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் சில நிபந்தனைகளை விதித்து அவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள்

    அவை : 1. கைபருடைய பூமியை விட்டு ஒரே நேரத்தில் எல்லோரும் காலி செய்து விட்டு நாடு கடந்து விட வேண்டும். 2. தங்கம், வெள்ளி இன்னும் ஆயுதங்கள் யுத்தச் சாமான்கள் அனைத்தையும் இங்கேயே விட்டு விட வேண்டும். 3. எதையும் மறைத்துக் கொண்டு எடுத்துச் செல்லக் கூடாது. 4. இதற்கு மாற்றமாக நடந்தால் அல்லாஹ்வும் தூதரும் பொறுப்பல்லர்

    ஆனால்  யூதர்கள் இவ்விதமான உடன்படிக்கை செய்ததற்குப் பிறகும் தங்களுடைய சேட்டையிலிருந்து விலகியிருக்க வில்லை.ஹுயைய் இப்னு அக்தப் உடைய ஒரு தோற்பையில் எல்லோருடைய நகைகளும் பாதுகாக்கப்பட்டு இருந்தன. அதை மறைத்து விட்டார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கினானா இப்னு ரபீஆவை அழைத்துக் கேட்டார்கள்: ‘அந்தப் பை எங்கே?’  கினானா கூறினார்: ‘யுத்தத்திலே செலவழிந்து விட்டதுஎன்று

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள்: ‘காலம் அதிகம் கடக்க வில்லையே! பொருள் அதிகமாக இருந்ததே!’ என்றுகினானாவிடமும் அவர்களின் சகோதரர் இன்னும் அவர்கள் அல்லாதவர்களிடமும் கேட்கப்பட்டது: அவர்கள் அனைவரும் செலவழிந்து விட்டது என்றே கூறினார்கள்

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்: ‘அந்தப் பையைக் கொண்டு வரப்பட்டால் உங்களுக்கு நலவாக இருக்காது’, என்று கூறி விட்டு அன்ஸாரி ஒருவருக்குக் கட்டளை யிட்டார்கள்: ‘இன்ன இடத்துக்கு நீங்கள் சொல்லுங்கள்! ஒரு மரத்தினடியில் புதைக்கப் பட்டுப் பாதுகாக்கப் பட்டு இருக்கிறது. அதை எடுத்து வாருங்கள்!’ 

    அந்தத் தோழர் சென்று அந்தப் பையை எடுத்து வந்தார். அவன் மதிப்பு 10000 தீனாராக இருந்தது. இந்தக் குற்றத்திற்காக அந்த மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.