ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

பேராசிரியை முத்து மக்தூம் பாத்திமா னி.பு., னி.Pஜுஷ்யி.,

 அரபுப் பேராசியை, வாவு வஜீஹா மகளிர் கல்லூரிகாயல்பட்டணம்.

தவமே செய்த தவமதனால்  தரணி செய்த பெருந்தவத்தால்

பவமே தொலைக்கும் நன்மருந்தாய் பாக்கியம் நல்கும் செழுமழையாய்

அவமே போக்கும் அருட்பிழம்பாய்அகிலம் தனக்கோர் பேரருளாய்

நவமாம் உலகைச் சமைத்திடவே இதோ நபிகள் நாயகம் தோன்றிவிட்டார்!

    அரபு நாட்டில் மக்கா என்னும் இடத்தில், உயர்ந்த வணிகக் கோத்திரமான குரை´ இனத்தில் அப்துல்லா ஆமீனா தம்பதிகளுக்கு ஏக புதல்வராக கி.பி 571ல் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 இல் திங்கட்கிழமை அதிகாலையில் பிறந்த நபிபெருமான் அல்லாஹ் அருளிய அழகிய முன்மாதிரி.

    அன்னை வயிற்றில் இருந்தபோதே தந்தையையும் தமது ஆறாம் வயதில் பெற்ற தாயையும் இழந்துவிட்ட முஹம்மது என்னும் பாலகர் உலக மக்களுக்கோர் அருட் கொடையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டார்கள் என இறைவன் தனது திருமறையில் அத்தியாயம் 21 வசனம் எண் 107ல் கூறியுள்ளான்சிறு வயதிலேயே நல்ல குணங்களுடன் நபிகள் இருந்ததால் அக்கால மக்கள் அவர்களை உண்மையாளர், நம்பிக்கையாளர் என அழைத்தார்கள்முஹம்மது ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்து வாலிப வயதை அடைந்த போது இருமுறை விதவையான கதீஜாவை திருமணம் செய்து விதவைகளின் வாழ்வில் மறுமணமும் மறுவாழ்வும் பற்றிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் ஏற்படச் செய்தார்கள்.

நபிகளாரின் எளிய, ஏழ்மை வாழ்க்கை.

    அன்னை கதிஜா பிராட்டியாரை நபிகளார் திருமணம் செய்து கொண்டதால் அவர்களின் எல்லையில்லாப் பொருள் மற்றும் செல்வங்களுக்கு பொறுப்பாளராக இருந்தபோதும் அவர்கள் அவற்றைத் தமக்காகப் பயன்படுத்தியதே இல்லைஇதற்கு மாறாக ஏழ்மை வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தார்கள்.

    ஒருமுறை அல்லாஹ் உஹது மலையை தங்கமாக்கித் தருகிறேன் என்று  நபிகளிடம் கூறியதற்கு அதை ஏற்க மறுத்துயா அல்லாஹ்! நான் ஒரு வேளை பசித்திருந்து உன்னை நினைத்து உணவு கேட்டுப் பெறவும் அதை உண்ட பின் அதற்காக உனக்கு நன்றி செலுத்தி வாழவுமே என் மனம் விரும்புகிறதுஎன்றார்கள்.

    அண்ணல் அவர்கள் தம் வாழ்நாளில் எளிமை, நாவன்மை, நேர்மை, எச்சரிக்கையுடனிருத்தல், பெருந்தன்மை, தன்னலமின்மை, பிறருக்கு உதவும் பண்பு, உறுதிஊக்கம், சோர்வின்மை, நட்பு, நன்றி மறவாமை, ஆண்டவனுடைய ஆற்றலிலும் கருணையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை, இவ்வளவு நற்பண்புகளையும் கொண்ட நபிகள் மக்களுக்கு வரலாற்றுப் பொற்சாசனமான இறுதி உரையில் அங்கு கூடியிருந்த மக்களைத் தங்களின் கருணை நிறைந்த கண்களால் சுற்றி நோக்கியவாறு அவர்களிடம் பிரியா விடைபெறும் தோரணையில் தங்களின் சரித்திரப் பிரசித்தி பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்அன்னவர்களின் அப்பொன்னுரை- தீஞ்சுவை மிக்க தேவாமிர்தச் சொற்பொழிவு அன்றுள்ள மக்களுக்கு மட்டுமின்றி, இனி என்றென்றும் தோன்றும் மனித சமுதாயத்தின் உய்வுக்கான உயரிய கருத்துக் கருவூலமாக அமைந்த அந்த வார்த்தைகள் இதோ....

    அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன்அவனுக்கு இணை துணை எதுவுங்கிடையாது ஆட்சி அனைத்தும் அவனுக்கே உரியதுஅனைத்துப் புகழுக்குரியவன் அவனேயாம்உயிர் அளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் அவனாகவே இருக்கிறான்அவன் சர்வ வல்லமை பொருந்தியவன்நீங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள் நெருங்கிக் கொண்டு வருகிறதுஅந்த நாளில் உங்களின் செயல்களைப் பற்றி அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான்ஆகவே, சொத்துரிமை உடைய ஒருவனுக்கு அவனது உரிமைக்கும் அதிகமாகச் சாசனம் செய்து வைத்தல் கூடாதுஅமானிதப் பொருள்கள் வைத்திருந்தால் அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்கடனாகப் பெற்றதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்வாக்குத் தத்தம் செய்து பொறுப்பேற்றவன் தனது வாக்குத் தத்தத்தை நிறைவேற்ற வேண்டும்ஒருவர் மற்றொருவரின் சொத்தை அனுமதியின்றிக் கபளீகரம் செய்து கொள்ளாதீர்கள். இன்று முதல் எவரும் எந்த வகையாகவும் வட்டி வாங்கக் கூடாதுகொலைக்குப் பழி வாங்கக் கூடாது. குற்றம் செய்தவனே அக்குற்றத்திற்குப் பொறுப்பாளி. தந்தையின் குற்றத்திற்குத் தனயனும், தனயனின் குற்றத்திற்குத் தந்தையும்பொறுப்பாளி அல்ல.  நீங்கள் தவறு செய்யாதீர்கள்.  பிறரும் உங்களுக்கு அநீதி இழைக்க மாட்டார்கள்.   செயல்களில் தூய்மையான  எண்ணத்தையும், ஜமாஅத் என்னும் சமுதாய ஒற்றுமையையும் உங்களின் நோக்கங்களாகக் கொள்ளுங்கள்.  இவை உங்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி வலிவும் பொலிவும் பெற்றவர்களாக விளங்கச் செய்யும்.

    அடிமை ஒருவன் உங்களுக்குத் தலைவனாக ஏற்படினும் இறைவனின் கட்டளைப்படி அவன் நடந்து கொள்வானாயின் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள்.

    பெண்கள் வி­யத்தில் நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்உங்கள் மனைவியர் மீது உங்களுக்குச் சில உரிமைகள் இருப்பதைப் போல், உங்கள் மீதும் அவர்களுக்குச் சில உரிமைகள் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்பெண்கள், உங்களிடம் ஒப்படைக்கப்பெற்ற இறைவனின் அமானிதத்திற்கு ஒப்பானவர்கள்அவர்களைப் பேணிக் காத்துத் திருப்பி ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்அவர்களை அன்புடன் ஆதரியுங்கள்விவாகரத்து செய்வது அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பானது என்பதை அறிந்து கொள்ளுங்கள் 

    இவ்வாறு  உண்மை வார்த்தைகளையும்  வாழ்க்கையின் முன்மாதிரியையும் எடுத்துரைத்தவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள்.

    அன்று முதல் இன்று வரை எத்தனையோ சீர்திருத்தக்காரர்களும், மதத் தலைவர்களும், தத்துவ மேதைகளும், சிந்தனயாளர்களும், ஆட்சியாளர்களும், புரட்சியாளர்களும் தோன்றி உலகின் போக்கினை மாற்றியமைத்துள்ளனர்ஆனால்  அவர்களுள் மனிதனின் முழு அம்சத்தையும், உள்ளும் புறமும் ஆன்மாவும் சரீரமும் ஒருங்கே இணைந்து மக்களுக்கு ஓர் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே.

    இறைவனின் தூதர் என்றால் அற்புத சக்தி படைத்தவராகத்தான் இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கையின் பாரம்பரியத்திலே வந்த மக்கள் அண்ணல் நபிகளாரிடம் நீங்கள் கொண்டு வந்த அற்புதம் எது? என்று கேட்ட போது உண்மையிலேயே அவர்களுக்கு பல அற்புதங்கள் அருளப்பட்டிருந்தாலும் தாம் கொண்டு வந்த ஒரே அற்புதம்  திருக்குர்ஆன் ஆகும் என்று கூறினார்கள். உண்மையிலேயே திருக்குர்ஆன் போன்ற ஓர் அற்புதத்தை உலகில் வேறெங்கும் காண முடியவில்லை. அஃது எழுதப்பட்ட நூலல்லஅருளப்பெற்ற வேதம்.

    பல தெய்வ நம்பிக்கைகளும் சிலை வணக்கங்களும் பகைமையும் வேற்றுமையும் பரவிக் கிடந்த அரேபியாவில் இஸ்லாம் என்னும் ஓர் குடையின் கீழ் ஒன்றுபடுத்தி மக்களை நல்வழிப்படுத்திய அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கொண்டு வந்த தூது அகில உலகத்துக்கும் பொதுவானதுஅவர்களது வழிகாட்டலும் சிந்தனைகளும் மனித சமுதாயம் அனைத்தையும் மனதிற் கொண்டு இறுதிநாள் வரை மாற்றம் ஏற்படாத வண்ணம் வகுக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டது. அதில் கிழக்கோ மேற்கோ கறுப்பருக்கோ (அல்லது) வெள்ளையருக்கோ உயர்குடி பிறந்தவருக்கோ தாழ்ந்தவருக்கோ என எந்த ஒரு தனிப் பிரிவினருக்கு மட்டும் உரித்தாவதாக இல்லைஅனைத்துப் பிரிவினரையும் ஏற்றமுடையதாக எடுத்து அருளப்பட்ட சட்டங்களைக் கொண்டதுஇப்படிப்பட்ட நல்வழிகளை பின்பற்றி அதன்வழி நடந்த அண்ணல் பெருமானாரைப் பின்பற்றி அறிஞர்களும் மேதைகளும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.

    நபிகள் நாயகம் அவர்கள் இவ்வுலகில் தோன்றியிருக்காவிட்டால் ஒரே இறைவணக்கம் என்னும் விடி விளக்கே இவ்வுலகில் இல்லாது போயிருக்கும்என்று ராஜாராம் மோகன்ராய் கூறியுள்ளார்.

    பிறப்பால் உயர்வு தாழ்வு நீக்கி மனிதனை மனிதனாக வாழச் செய்தவர் நபிகள் நாயகம்என்று டாக்டர். அம்பேத்கர் முன்மொழிந்துள்ளார்.

    உலக மதங்கள் அனைத்தையும் நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்! அவற்றில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகள், விஷேச குணங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளன! அப்போதனைகள் அனைத்தும் ஒன்று என்னும் தத்துவத்தில் நின்றிலங்குவதை நான் உணர்கின்றேன்! ”என ஜீன ராஜ தாஜா எடுத்துரைக்கின்றார்.

    அரேபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவன் என்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி  தரையினில் பொதுமை பொங்கச் சகோதர நேயம் ஓங்கக் கரவிலா மறையைத் தந்த கருணையே போற்றி போற்றி!” என்று தமிழ்த் தென்றல்  திரு.வி. போற்றிப் புகழுகிறார்.

    உலகில் தோன்றிய தூதர்களில் நபிகள் நாயகம் அவர்களே மாபெரும் மகான்அன்னவர்கள் போதித்த மார்க்கத்தின் அடிப்படை சமத்துவமாகவே உள்ளதுஎன்று அறிஞரொருவர் கூறியுள்ளார்.

    விதவைகள் மறுமணம்பற்றி இன்றும் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வர முடியாமல் இழுபறியாக உள்ளது! ஆனால் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதோடு விதவைகளை மணந்து வாழ்ந்து வழிகாட்டியவர்கள்- நபிகள் நாயகம் அவர்கள்” என்று  கி.ஆ.பெ. விசுவனாதன் கூறியுள்ளார்.

    ஆட்சி செய்பவர்கள் நபிகள் நாயகம் அவர்கள் செய்த சீர்திருத்தங்களைப் பின்பற்ற வேண்டும்என்று மகாத்மா காந்தி அறிவுரைத்தார்கள்அந்த அறிவுரையைப் பின்பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை நாமும் பின்பற்றி நடப்போம் என்று  சபதம் ஏற்போம்.