ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஹள்ரத் குஹ்ஸ்தானி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பாங்கில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் எனும் இரு ­ஹாதத்தில் முதலாவது ­ஹாதத்தை கேட்கும்போது ஸல்லல்லாஹு அலய்க்க யாரஸுலல்லாஹ் என்றும் இரண்டாவது ­ஹாதத் கேட்கும்போது கர்ரத் ஐய்னீ பிக யாரஸூலல்லாஹ் என்று கூறி தனது இரு பெருவிரல்களையும் கண்கள் மீது வைத்து யா அல்லாஹ் பார்வையிலும், கேள்வியிலும் சுகத்தை அதிகப்படுத்துவாயாகஎனச்சொல்ல வேண்டும்ஏனெனில் நபியவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு சுவனத்தின் பக்கம் அழைத்துச் செல்லக் கூடியவர்களாவார்கள்.  (நூல் : கன்ஜுல் இபாத்  ­ரஹுந்நிகாயஹ்)

வஹப் இப்னுமுனப்பஹ் (ரலி அறிவிக்கிறார்கள்

பனீஇஸ்ராயீலர்களில் ஒருவர் 200 வருட காலமாக இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தார்இவ்வாறு பல பாபங்களை செய்து நீண்ட காலமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார்அவர் மரணித்தவுடன் மக்கள் அவரை அருவறுப்பான மாட்டுத் தொழுவத்தில்  தூக்கி  எறிந்து விட்டனர்அல்லாஹு ஆலா நபி மூஸா (அலை) அவர்களுக்கு அந்த மனிதரை நல்லடக்கம் செய்யவும் என வஹி அறிவித்தான். அப்போது மூஸா (அலை) அவர்களிடம் பனூஇஸ்ராயீலர்கள் இவர் மிகப் பெரும் பாபிமோசமானவர் எனக் கூறினர்இதைக் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் யா அல்லாஹ்! இவரை என் மூலம் சங்கை செய்த காரணம் என்ன? என்றார்கள்அதற்கு அல்லாஹ் அவரைப் பற்றி பனூ இஸ்ராயீலர்கள் சொல்வது சரிதான்எனினும் அவர் தெளராத்தை  திறந்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் அதை முத்தமிட்டு அவரது இரு கண்களிலும் ஒற்றிக் கொள்வார். இதனால்தான் நான் அவருக்கு அந்தத் தகுதியைக் கொடுத்து, அவர் பாபத்தை மன்னித்தேன்அவருக்கு 70 ஹூருல் ஈன்களை மணமுடித்துக் கொடுத்தேன் என்று இறைவன் கூறினான்.  ( நூல் : ஸீரதுல் ஹலபிய்யா பாகம் 1 / பக்கம் 85,  ஹில்யதுல் அவ்லியா பாகம் 4 / பக்கம் 46)

மேற்கூறப்பட்ட ஆயத், ஹதீஸ்களில் இருந்து பெருமானாரின் பெயர் கேட்டால் ஸலவாத் கூறி இரு பெருவிரல்களையும் முத்தமிட்டு கண்ணில் ஒற்றிக் கெள்வது  ஸுன்னத் ஆகும்அப்படி ஒற்றிக் கெள்வதன் மூலம் நமக்கு அதிகமான நன்மைகள் இருக்கின்றன, நிவாரணமும் இருக்கிறது, பாப மன்னிப்பும் இருக்கிறது இன்னும் சுவர்க்கமும் கிடைக்கிறதுமேற்கூறப்பட்ட  ஹதீஸில் பனூ இஸ்ரயீலர் ஒருவர் எந்தவொரு நன்மையும் செய்யாமல் 200 வருடமாக பாபம் செய்தவர் கண்ணில் ஒற்றிக் கொண்டு  பெருமானாரின் பெயரைச் சிறப்பித்ததற்கு இறைவன் அளித்த கூலி சொர்க்கம்எனவே நாமும் அகிலத்தின் அருட்கொடையின் அருளான பெயரைக் கேட்டு ஸலவாத் கூறி கண்ணில் ஒற்றிக் கொண்டு  நபியவர்களின் பொருட்டால் அனைத்து விதமான நன்மைகளையும்  அடைவோமாக!