ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மு.ஷாருக்கான் ஹக்கிய்யுல் காதிரிய், பெரம்பலூர் 

கருணையின் கடலாம் யாஸீன் நாதரின் வாழ்க்கைசரிதம் கேளுங்கள்

அருமை ஓங்கும் மாநபி பேரரின் அற்புத சரிதம் கேளுங்கள்

                      உத்தமர் உயர்வைக் கேளுங்கள்

      (கருணையின் கடலாம்...)

`தாஹா நபியின் முப்பத்து மூன்றாம் தலைமுறை வழியில் வந்தவராம்

எங்கும் நிறைந்த ஹக்கை உலகில் பாமரர்க்குணர்த்த வந்தவராம்

உத்தம நாதரை உலகிற்கு அளித்த வர்கள் உயர்ந்தவர்கள் அவர்களே

ஜமாலிய்யா மெளலானாவும், உம்மு ஹபீபா நாயகியும்.

அவர் யாஸீன் நாயகர்; திருமுல்லைவாசலின் நாயகர்.

  (கருணையின் உருவாம்...)

இயற்கை கமழும் திக்குவல்லையில் உயரிய ஷாபான் திங்களிலே

செம்மை வாய்ந்த எழில்முகத்தோடு சீராய் உதித்த ஞானமகான்

நிகழ்ந்த பத்தாம் வயதினிலே அருமைத் தாயாரை இழந்தனரே

புதல்வரின் துயரை அறிந்த தந்தை பாரதம் அழைத்தார் நாயகரை

அவர் யாஸீன் நாயகர், திருமுல்லைவாசலின் நாயகர்

 (கருணைக் கடலம்...)

கல்வியை கற்க மேலப்பாளையம் என்னும் நற்பதி அடைந்தனரே

அங்கு அஹ்மது அலியயன்னும் ஞானகுருவைச் சந்தித்தார்

அரபுக் கலையில் சிறந்திருந்த யாஸீன் நாயகர் இறைநேசர்

ஆளும் பதினேழாம் வயதில் அறபுக் கவிதை இயற்றினரே

அவர் யாஸீன் நாயகர், திருமுல்லைவாசலின் நாயகர்

மேலப்பாளையம் சென்ற பின்னர் பெரம்பூர் மத்ரஸா சேர்ந்தார்கள்

பாஸில் பட்டம் பெற்றனரே  ஒப்பே இல்லா ஞானமகான்

வடக்கு நோக்கி சென்றநாயகர்  வடக்கில் பட்டம்பல பெற்றார்கள்

தங்கு தடையின்றி தர்க்கம் புரிந்தோரை தவிடு பொடிய்யாய் ஆக்கினரே

அவர் யாஸீன் நாயகர், திருமுல்லைவாசலின் நாயகர்

(கருணையின் உருவாம்...)

கல்வியின் கரையை கண்ட நாயகர் தென்னகம் வருகை புரிந்தார்கள்

இல்லறம் சிறக்க வாழ்ந்தார்கள் நல்லறம் பேணி நடந்தார்கள்

வருடம் தவறாது இந்திய மண்ணிற்கு விஜயம் செய்த ஞானமகான்

தங்களின் மறைவை வெளிப்படையாக அறிவித்தே உடல் மறைந்தார்கள்

அவர் யாஸீன் நாயகர், திருமுல்லைவாசலின் நாயகர்

(கருணையின் உருவாம்...)

குத்புல் ஃபரீத் கெளதுல் வஹீத் ஜமாலிய்யா யாஸீன் மெளலானா

நபியின் ஜோதியை உலகிற்கு எடுத்து வந்த பேரொளியாம்

யாஸீன் நாதரை சந்திப்போம்  இனி தே  ஸலாம் உரைத்திடுவோம்

சுபம்மிகு சோபனம் பெற்றிடுவோம் அளவில்லா பேரின்பம் பெற்றிடுவோமே,

அவர் யாஸீன் நாயகர், திருமுல்லைவாசலின் நாயகர்

யா செய்யிது! யா யாஸீன் யா கெளது, யா முஹ்மீன்

யா அமீன், யா அமீர் யா அப்த அல்லாஹூ

இசை :-  சி.னி. ஹனீபா அவர்கள் பாடிய 

கருணைக் கடலாம் காதர் வலியின் காரண சரிதம் கேளுங்கள்.