ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

தொகுத்தவர் :மிஸ்ரிய்யா, ஹைதராபாத்

    மனதுக்குள் ஊடுருவிச் செல்லும் சந்தேகங்களை உடனுக்குடன் நீக்குவதே  உண்மையான கல்வியாகும்.                                  - இப்னு அதாவு (ரஹ்)

    கல்வி  கற்றும் அனுபவம் பெறாதவன் கனி தராத மரத்தைப் போன்றவன்கல்வி கற்காத பக்திமான் கதவு  இல்லாத வீட்டைப் போன்றவன்       - இமாம் ஸஅதி

     நிறைய வி­யங்களை அறிந்து வைத்திருப்பது மட்டும் கல்வி அல்லகல்வி  என்பது பிரகாச ஒளியைப் போன்றதுமனிதன் நெஞ்சங்களில் அந்த ஒளியைப் பாய்ச்சுகிறான்  - இமாம் மாலிக் (ரஹ்)

    பொருள் சேமித்தும்  சாப்பிடக் கொடுத்து வைக்காத சீமான், கல்வி கற்றும் அதன்படி  நடக்காத அறிஞன் ஆகிய இருவரும் இவ்வுலகை விட்டுப் போகும் போது  கவலையைச் சுமந்து கொண்டு செல்லுகிறார்கள்  - இமாம் ஸஅதி

    மனிதர்களை நேசிப்பது அறிவில் பாதி; கேள்விகளை அழகாகக் கேட்பது கல்வியில் பாதி; எண்ணித்  துணிவது வாழ்க்கையில் பாதி  -   ஹள்ரத்  உமர் (ரலி)

    அறிவை வளர்ப்பதில் சுயநலம் வேண்டும்சுயநலம் இருந்தால்தான் முயற்சி இருக்கும்ஆர்வம் ஏற்பட வேண்டுமெனில் சுயநலம் வேண்டும்  -  படிக்காத மேதை திரு. காமராஜ்

    பாரதக் குழந்தைகள் ஒவ்வொருவரும் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று  உடலாலும் உள்ளத்தாலும் வளர்ச்சி பெற வேண்டும்                                                                                                                                                          -- ஜவஹர்லால் நேரு.

    அறிவைப் பெற முதலில் அடக்கமும் அடுத்தது செவி மடுத்தலும்  மூன்றாவதாய் நினைவாற்றலும் நான்காவது செயல்படுத்தலும் ஐந்தாவது பிறருக்குச் சொல்லித் தருதலும் அவசியமாகும்      - அல் பயானு  வத்தப்யீன்    

    கல்வியின் முக்கிய நோக்கம் தன்னம்பிக்கையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.                                                                                       - விவேகானந்தர்