ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 

மூலம் : 

திருநபி சரித்திரம். தொகுப்பு : முஹம்மதடிமை, திருச்சி .

    மக்கா வெற்றியைத் தொடர்ந்து..

    தெளராத் வேதத்தில் ஆண்டவன் ஸீனாவிலிருந்து வந்தான்.  ­ஈரிலிருந்து வெளியானான்பாரானின் மலைக் குன்றுகளிலிருந்து தோன்றினான்பதினாயிரம் பரிசுத்தவான்களுடன் அவர் வந்தார்அவருடைய வலக்கையில் சட்டம் என்னும் நெருப்பு இருக்கிறது.

    இம்முன்னறிக்கையில் ஸீனா (தூர்ஸீனா) விலிருந்து நெருப்பு வெளியாவது ஹள்ரத் மூஸா (அலை) அவர்களும், ­ஈரிலிருந்து வெளியாவது ஹள்ரத் காத்தமுன்னபீ முஹம்மது முஸ்தபா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுமாம்பாரான் என்பது மக்காவின் சமீபத்திலுள்ள ஒரு குன்றின் பெயர்அம்முன்னறிக்கையில், பதினாயிரம் பரிசுத்தவான்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்ற ஸஹாபாக்கள் எண்ணிக்கையில் பதினாயிரவர்தான்அவர்கள் அனைவரும் பரிசுத்தவான்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

    அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான அடியார்கள்உலக ஆசைக்காக அவர்கள் சண்டைக்குப் புறப்படவில்லைஅல்லாஹ்வின் திருநாமத்தை ஓங்கச் செய்வதற்காகவும், அதை மகிமைப்படுத்துவதற்காகவுமே வெளிக்கிளம்பினார்கள்போகும் வழியில் அறபிக் கூட்டத்தார்களில் அநேகர் இவர்களுடன் வந்து சேர்ந்தார்கள்முஸ்லிம்கள் மக்காவிலிருந்து சுமார் ஒரு மன்ஸில் தூரத்திலுள்ளமர்ரல்லஹ்ரான்என்னும் இடத்தில் வந்து தங்கியிருந்தார்கள்முஸ்லிம் சேனை தங்கியிருந்த இடத்திற்குச் சமீபத்திலுள்ள மேட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அடுப்பு மூட்டிச் சமையல் செய்யும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கட்டளையிட்டார்கள்அவ்வெளிச்சத்தைக் கண்டு குறை´கள் முஸ்லிம் சேனையின் அளவிறந்த எண்ணிக்கையை ஒருவாறு மதித்து, அதனால்

    முஸ்லிம்கள் மக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்காமல் இருப்பதற்காகவே அப்படிக் கட்டளையிட்டார்கள்முஸ்லிம் வீரர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் கட்டளைப்படிச் செய்ய, அம்மேட்டில் எங்கு பார்த்தாலும் ஒரே பிரகாசமாய் இருந்ததுகுறை´கள் அதைக் கண்டு ஆச்சரியமடைந்து அதை அறிந்து வரும்படி அபூஸுப்யானையும் அவருடன் புதைல் இப்னுவர்க்கா, ஹக்கீம் இப்னு ஹஸ்ஸலாம் ஆகிய இருவரையும் அனுப்பினார்கள்.

    அபூஸுப்யானும், அவருடைய தோழர்களும் மக்காவை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம் சேனை தங்கியிருக்கும் இடத்திற்குச் சமீபமாய் வந்து அம்மேட்டை நோக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்குப் பார்த்தாலும் நெருப்புப் பற்ற வைத்திருப்பதைக் கண்டதும் அவர் மனம் கலங்கியதுஅபூஸுப்யான் மனக் கலக்கத்துடன் இத்தனை அடுப்புக்களையும், இவ்வளவு ஏராளமான சேனைகளையும் இதுவரை இங்குக் கண்டதில்லையே! என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இருட்டில் ஓர் அந்நியர் அபூஸுப்யானுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட சப்தம் கேட்டது.

    அவ்வாறு கூப்பிட்டது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் பெரிய தந்தையான ஹளரத் அப்பாஸ் (ரலி) அவர்கள்தாம்பதினாயிரம் முஸ்லிம் வீரர்கள் படையயடுத்து வந்திருப்பதையும் அவர்களைத் தடுப்பதில் பலனில்லை என்பதையும் மக்காவிற்குப் போகிறவர் மூலமாகக் குறை´களுக்கு முன்கூட்டியே அறிவித்து விட வேண்டுமென்ற நோக்கத்துடன் அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்காவை நோக்கிச் சென்றார்கள்வழிநடுவில் அபூஸுப்யானைக் கண்டு அவரிடம், அபூஸுப்யானே! முஸ்லிம் சேனைகளின் அடுப்புகளிலிருந்து வெளிவரும் பிரகாசந்தான் உமக்கு மனக்கலக்கத்தை உண்டாக்கியதுஇதிலிருந்து முஸ்லிம் சேனைகளின் எண்ணிக்கை உமக்கு ஒருவாறு தெரியவரும்இவ்வளவு பெரிய சேனையைக் குறை´கள் எதிர்ப்பதில் பலனில்லைஆதலால் என் சகோதரர் குமாரரிடம் நீர் வந்தால் உம்மை மன்னித்து விடும்படி நான் சொல்லுகிறேன் என்று சொன்னார்கள்.

    அபூஸுப்யானோ இதுவரை இஸ்லாத்தின் மீது கடும்பகை கொண்டவர்முஸ்லிம்கள் மக்காவில் இருக்கும் போது அவர்களுக்குச் செய்த கடுந் துன்பங்களும் அவர்களை அழித்து, ஒழித்துவிட வேண்டுமென்று மதீனாவின் மீது அவர் பல தடவை படையயடுத்துச் சென்றதும் இஸ்லாத்தை அழிப்பதற்காக அறபிக் கூட்டத்தார்களை அவர் தூண்டியதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களைக் கொன்று விடுவதற்காக அவர் செய்த சூழ்ச்சிகளும், அவரை முஸ்லிம்கள் கொன்று விடுவதற்குப் போதிய குற்றங்களாயிருந்தன.  அவைகள் ஒவ்வொன்றும் அவரின் முன் தோன்றி அவரைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன.  முஸ்லிம்கள் இக்குற்றத்திற்குப் பழி வாங்குவார்களே என்னும் எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.  ஆனால் இவைகளுக்காக அஞ்சாதிருக்கும்படி அந்தக் கருணை வள்ளல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் காருண்யம் அவரைத் தூண்டிக் கொண்டிருந்தது.

    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் இரக்க குணம் அபூஸுப்யானுக்கு நன்கு தெரியுமாதலால் அச்சந்தர்ப்பத்தைக் கை நழுவவிடக் கூடாதென்று நினைத்து அவர் ஹள்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களுடன் செல்வதற்குச் சம்மதித்தார்அப்பாஸ்  (ரலி) அவர்கள் அபூஸுப்யானைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குச் சென்றார்கள்.

    அவர் சென்றதை முஸ்லிம்கள் கண்டு கொண்டார்கள்முஸ்லிம்கள் அவருடைய இரத்தத்தில் தாகமுள்ளவர்களாகவே இருந்தனர்அபூஸுப்யான் முஸ்லிம்களுக்குச் செய்த தீங்குகள் அனைத்தும் முஸ்லிம்கள் மனதைவிட்டு அகலவில்லை.

    அச்சமயம் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களிடம் சென்று  இவருடைய தலையை வெட்டுவதற்கு எனக்கு உத்திரவு தரும்படி வேண்டுகிறேன் என்று சொல்ல, அப்பாஸ் (ரலி) அவர்கள் அவருக்குத்தான் பிணை ஏற்றியிருப்பதாயும் அவரைக் காப்பாற்றும்படியும் கேட்டுக் கொண்டார்கள்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் அபூஸுப்யானைக் காப்பாற்றுவதற்காக வாக்களித்து, அன்றிரவு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் வைத்திருந்து காலையில் தங்களிடம் கொண்டு வரும்படிச் சொன்னார்கள்அன்றிரவு முழுவதும் அப்பாஸ் (ரலி) அவர்களின் கூடாரத்திலேயே அபூஸுப்யான் தங்கியிருந்தார்.

    காலையில் அபூஸுப்யான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடைய சமூகத்தில் கொண்டு வரப்பட்டார்அவரை நோக்கிப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், அபூஸுப்யானே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான நாயன் வேறு யாருமில்லை என்பதை இப்போதாவது நீர் தெரிந்து கொண்டீரா? எனக் கேட்க, அவர் வேறு நாயன் இருந்திருந்தால் எங்களுக்கு உதவியிருப்பானே என்று சொன்னார்அப்போது 

    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள், நான் அந்த அல்லாஹ்வின் உண்மையான நபி என்பதும் இப்போதாவது உமக்குத் தெரியவில்லையாஎன்று கேட்க அபூஸுப்யான் மேன்மை தங்கிய தலைவரே! அதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது என்று சொல்ல, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள்  சந்தேகிக்க வேண்டிய காலம் சென்றுவிட்டதுஒன்றன்பின் ஒன்றாக அநேக அறிகுறிகள் வெளியாகிவிட்டனஇஸ்லாத்தில் சேர்ந்தால் மட்டும் விமோசனம் அடையலாம் என்று சொல்லவும் அபூஸுப்யான் உரக்க சப்தத்துடன், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்றும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் சாட்சி சொல்லுகிறேன்) என்று சொல்லி இஸ்லாத்தைத் தழுவினார்.

(ஹள்ரத் அபூஸுப்யானின் மனமாற்றம் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித மாற்றத்தைத் தந்தது? என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்..)