ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

தமிழ்மாமணி, மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி

கலீபா. வலிய்யுல் கரீம் அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்கள்அதனை அவதானிப்போம்!

    எனது வியாபாரமாகிய மர கூப் கான்டிராக்ட் தொழிலில் ஒரு சக வியாபாரி அக்கிரமாகவும், அகாரணமாகவும்  தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தார்நான் கான்டிராக்ட் எடுக்கும் கூப்பு ஏலங்களிலே போட்டியாக வந்து ஏலத் தொகையை அதிகமாக்கி விடுவது, அது போன்ற வி­யங்களில் வீம்பாக செயல்படுவதுமாக இருந்து கொண்டிருந்தார்அவர் ஒரு முஸ்லிமாகவும், பந்துக்களில் உள்ளவராகவும் இருந்தும், அவர் தொடர்ந்து இவ்வாறு செய்து வருவது மனதுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துக் கொண்டிருந்தது.  16.08.63 ஆம் தேதி அது சம்பந்தமாக முறையிட்டு தர்பாருக்கு நான் எழுதியிருந்த கடிதத்திற்குப் பதிலாக மகா சன்னிதானத்தில் இருந்து 21.08.63ந்தேதி எழுதப்பட்ட பட்டோலை எனக்குக் கிடைத்ததுஅதில் பரிசுத்த ஹக்கின் ரஹ்மத்திற்கும், முஹிய்யத்தீனிய தர்பாரின் பாதுகாப்பிற்கும் உரிய பிள்ளை மஹபூப், சூபி அப்துல் கரீம் ஆலிம் சாஹிப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்கைரியத்தை விரும்புகிறோம்உங்களது கடிதம் 16.08.63 ஆம்தேதி  கிடைத்ததுஏதோ ஒரு சில பொறாமைக்காரர்களால் ஏதோ இடைஞ்சல்கள் நேரிடுவதாக எழுதியிருந்தீர்கள். அந்தப் பொறாமைக்காரர்கள் நெருப்புடன் விளையாடும் புழுக்களாகும். தர்பாரின் சக்தியால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்தர்பாரின் இரட்சண்ணியம் உங்களுடன் இருக்கிறதுகொஞ்சமும் கவலை கொள்ளாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்ததுடன் 6.9.63 ஆம்தேதி எழுதிய பட்டோலையிலும் ஹக்கின் திருவருளைக் கொண்டு உங்கள் விரோதிகள் படுதோல்வி அடைவது நிச்சயம்நீங்கள் நல்லாய் இருப்பீர்கள்ஹக்கு உங்களைக் காப்பாற்றி நல்வாழ்வு அருளும். அதற்காவன நடைபெறுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

    அப்பால் கொஞ்ச நாட்களுக்குப் பின் அந்த மனிதன் அந்த வரு­த்தில் ஏலத் எடுத்து விறகுகளை வெட்டி சேகரம் செய்து வைத்திருந்ததில் எப்படியோ நெருப்புப் பிடித்து அவையயல்லாம் எரிந்து வீணாகிவிட்டது.  

    அவர் சர்க்காரில் அதற்காக நிவாரணம் தேடி பணத்தை செலவழித்தும் எவ்வித நிவாரணமும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்அதிலிருந்து நமக்கு இடையூறு செய்யும் சக்தியற்றவராகவும் ஆகிவிட்டார்இவ்வாறான முறையில் அந்தத் தீயவரிடமிருந்து தர்பார் இரட்சண்யம் அருளியது. மகா சன்னிதானத்தின் பாதுகாப்பும் இரட்சண்யமும் எப்பேர்ப்பட்டது என்பதை நிதர்சனமாக உணர்ந்து ஷிக்ரு செய்தோம்.