ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் கீமியாயே ஸஆதத் நூலிலிருந்து  

கோவிந்தக்குடி மஹமூதா பீவி.

    மனிதனுடைய உடலில் அநேக புதுமைகளிருக்கின்றன. தேக இணைப்பையும் உறுப்புகளின் பலன்களையும் அறிவது ஒரு பெரிய இல்மாயிருக்கும்மனிதனுடைய உடல் உற்பத்தியின் விவரத்தில் சிந்திப்பது அல்லாஹு தஆலாவுடைய சிபத்துகளை அறிவதற்குத்  திறவுகோலாகும்ஆதலால் அவன் தன் இருப்பினால் அவசியம் அல்லாஹ்வுடைய  இருப்பை அறிவான்.

    மனிதனுடைய ஒவ்வோர் உறுப்பிலும் உள்ளேயும் வெளியேயும் பற்பல விநோதமான வஸ்துகளும் அருமையான பூராயங்களும் இருக்கின்றனமனிதனுடைய சரீரத்தில் பல்லாயிரம் நரம்புகளும் எலும்புகளுமிருக்கின்றன. எனினும் கண்ணானது பல விதமான பத்து வகுப்புகளால் உண்டாக்கப்பட்டிருக்கிறதென்றும் அவ்வகுப்புகளில் ஒன்று குறைந்து போனால் நேத்திரப் பழுது உண்டாகுமென்றும், ஒவ்வொரு வகுப்பினால் நாடிய கருத்தென்னவென்றும், நேத்திரத்திற்கு அது ஏன் தேவையாயிற்றென்றும் நீ அறிகிறாயில்லைகண்ணின் அளவு சிறியதாயிருந்தாலும் அதன் இல்முடைய விரிவு பெரிய கிதாபுகளில் அடங்காதுஇதையே நீ அறியாவிட்டால் உள்ளுறுப்பான ஈரல், மண்ணீரல் முதலியவைகள் ஏன் படைக்கப்பட்டன என்பதும் உமக்குத் தெரியாதுஈரலை உண்டாக்கினது எதற்கென்றால் இரைப்பையிலிருந்து அதனிடம் போகின்ற பலவகையான ஆகார சத்துகள் எல்லாவற்றையும் ஓர் நிறமான இரத்தமாக்கி சகல உறுப்புகளுக்கும்  ஆகாரமாக்கும்  தன்மையை அதில் உண்டாக்கவேயாம்ஈரலில் இரத்தம் கொதித்து பதப்படும் போது அதனால் கொஞ்சம் வண்டல் அதில் தங்கிவி விடுகிறதுஅது சிலேத்துமாயிருக்கும்அந்த சிலேத்தும நீரை ஈரலில் நின்றும் இழுத்துக் கொள்வதற்காக மண்ணீரல் உண்டாக்கப்பட்டிருக்கிறதுஇன்னும் இரத்தத்தின் மேல் மஞ்சள் நிறமான ஒரு நுரை சேர்கிறது. அது பித்தமாயிருக்கும்அந்தப் பித்த நீரை இரத்தத்தில் நின்றும் பிரித்துக் கொள்வதற்காக பித்தை உண்டாக்கி இருக்கிறதுஇன்னும் இரத்தம் ஈரலை விட்டுப் புறப்படும் போது  தடிப்பில்லாமல் நீர் போல் தெளிந்திருக்கும்அந்த நீரை இரத்தத்தில் நின்றும் இழுத்துக் கொள்வதற்காக குண்டிக்காய்கள் உண்டாகின்றனஏனெனில் பித்த நீரும், சிலேத்தும நீருமில்லாமல் இரத்தம் சுத்தமாகி நரம்புகளுக்குச் செல்வதற்கேயாம்பித்துக்கு யாதொரு ஆபத்து வந்தால், பித்த நீர் தங்கி விடுகின்றதுஅதனால், பாண்டு ரோகமும் மற்றும் பித்த சம்பந்தமான வியாதிகளும் உண்டாகின்றன

    மண்ணீரலுக்கு யாதொரு ஆபத்து அணுகினால் சிலேத்தும நீர் இரத்தத்துடன் இருந்து விடுகின்றதுஅதனால் கடும் பித்த வியாதிகள் ஜனிக்கின்றனகுண்டிக்காய் பிணி கொண்டால் அப்போது இரத்தம் தடிப்பாகாமல் நீர்த்திருக்கும்அதனால் மகோதர வியாதியுண்டாகும்.

    இது போலவே வெளியுறுப்பு, உள்ளுறுப்பு முதலிய ஒவ்வோர் உறுப்பையும், ஒவ்வொரு காரியத்துக்காகப் படைத்திருக்கிறது. அதில்லாமற் போனால் தேக சவுக்கியத்துக்குக் கெடுதி உண்டாகும்சரீரம் சிறிதாயிருக்கின்றது என்கினும் அது சர்வ லோகத்துக்கும் அறிகுறியான நமூனவாயிருக்கிறது. ஆனால் உலகத்தில் உண்டாயிருக்கிறவை அதில் தென்படுகின்றன.

    எலும்பானது மலை போலும் வியர்வையானது மழை போலும் உரோமங்களானவை   மரஞ்செடிகள் போலும், தலை,மூளையானது வானம் போலும், புலன்களானது நட்சத்திரங்கள் போலுமாயிருக்கின்றனஇதை விரித்தால் பெருகும்இவையன்றி உலகத்திலிருக்கிற ஒவ்வொரு தொழிலாளிகளும், இதில் தென்படுவார்கள்எப்படியயன்றால் இரைப்பையில் ஆகாரத்தைச் சேமிக்கப் பண்ணுகிற சக்தியானது சமையற்காரன் போலிருக்கிறதுஆகாரத்தை ஈரலுக்கும் சக்கையை மலப்பைக்கும் தள்ளுகிற  சக்தியானது  செக்கன் போலிருக்கிறதுஈரலில் சென்ற ஆகார சத்துக்கு இரத்த வர்ணத்தைக் கொடுக்கிற சக்தியானது சாயக்காரன் போலிருக்கிறதுபெண் பிள்ளையுடைய ஸ்தனத்தில் உதிரத்தைப் பாலாகவும், ஆண் பிள்ளைகளுடைய முதுகிலும் பீஜங்களிலும் அதை விந்துவாகவும் செய்கிற சக்தியானது வண்ணான் போலாகும்ஒவ்வோர் உறுப்பிலுமிருந்து ஈரலில் உள்ள ஆகாரச்சத்தை தன் பக்கம் இழுக்கிற சக்தியானது  வலிப்பான் போலாகும்ஈரலில் நின்றும்  நீரையிழுத்து  நீர்ப் பையில் போகச் செய்கிற குண்டிக்காயின் சக்தியாகிறது தண்ணீர்க்காரன் போலிருக்கிறதுசக்கையை வெளியே  தள்ளும் சக்தியானது தொட்டி போலாகும்பித்தம், சிலேத்துமம் இவைகளை எழுப்பித் தேகத்தைக் கெடுக்கும்படி செய்கிற சக்தியானது கலகம் விளைக்கும் கள்ளன் போலாகும்பித்தம்  மற்றும் வியாதிகளை அகற்றுகிற சக்தியானது நீதமுள்ள தலைவன் போலாகும்இவ்வி­யங்களையும் விரித்தால் பெருகும்.

    ஆதலால் நீ அறியவேண்டியதென்ன வென்றால் பல வகையான ஆலம்கள்- உலகங்கள் உனக்குள்ளேயிருக்கின்றனஆதலால் இவ்வகையாகவும் தன்னை அறிவது அல்லாஹ்வை அறிவதற்குத் திரிபு கோலாகும்தன்னை அறிந்தவன் தன் றப்பை அறிந்தான்.