ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

உங்களுக்குத் தெரியுமா?

ழுத்தரசு..எம். ஹனீஃப்- திருச்சி

    நைஜீரியாவில் போகோ ஹராம் என்னும் அமைப்பு நடத்தி வரும் அட்டூழியங்களை ஊடகங்களும், மீடியாக்களும் ஏராளமான செய்திகளை நாள்தோறும் பரப்பி வருகின்றனபடிப்போர், ஆத்திரமும் ஆவேசமும்  படக்கூடிய வகையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

    போகோ ஹராம் 250க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்திச் சென்றுவிட்டார்கள் என மேலை நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றபோது மக்கள் கவலை கொண்டார்கள். கடின எதிர்ப்பை தெரிவிக்கலானார்கள்அடுத்த இரண்டொரு நாட்களில் மீண்டும் 20 மாணவிகள் அவர்களால் கடத்தப்பட்டு விட்டார்கள் என்னும் செய்திகள், அதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட அந்த மாணவிகளை விற்பனை செய்ய இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றனஇந்த தகவல்களை வைத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தையும், நாக்கில் நரம்பின்றிப் பேசவும், இழிவுபடுத்தவும் மீடியாக்கள் மதப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருப்பதை அறிய முடிகிறது.

போகோ ஹராம் என்றால் என்ன?

    இத்தகைய நிலையில், அவர்களது போராட்டம் குறித்து முஸ்லிம்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்வோர் அவர்கள் மீது வெறுப்பும், எதிர்ப்பும் கொள்ள வேண்டும் என்னும் பாணியில் திட்டமிட்டு தவறான அர்த்தம் கற்பித்து அவதூறு பிரச்சாரங்கள் அவிழ்த்து விடுவதில் மீடியாக்கள் கருத்தூன்றி செயல்படுவதையும் அறிய முடிகிறதுபோகோ என்றால் அந்தப் பகுதி வழக்கு மொழியில் போஸர் என்று சொல்லப்படுவதாகும்அதாவது, திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், சட்ட விரோதமான மக்கள் மன நிலைக்கு எதிரான கேடுகெட்ட காரியங்களில் ஈடுபடுவதற்கு பலமாக இந்த சொல் உபயோகிக்கப்படுகிறது எனச்  செய்தியாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், போகோ ஹராம் என்னும் அமைப்பு நைஜீரியாவில் ஆட்சி செலுத்தும் கிறிஸ்தவ அரசின்      அட்டூழியங்களுக்கும், கொடுமைகளுக்கும் எதிராக இயக்கம் நடத்தும் ஒரு நிறுவனமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

    அவைகளின் கருத்துப்படி போகோ ஹராம் என்றால் திருட்டு ஹராம், கொள்ளை ஹராம், ஏமாற்றுதல் ஹராம், மோசடி ஹராம், மதுபானம் ஹராம் என்பன போன்ற பொருளுடையதேயாகும் எனவும் கூறப்படுகிறது.

காரணம் என்ன?

    போகோ ஹராம் என்னும் இந்த அமைப்பு நைஜீரிய அரசை எதிர்த்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டிய நிர்பந்தத்திற்கு ஏன் வந்தது? என்பதையும் இங்கு சற்று அலசுவோம்...  நைஜீரியாவின் மொத்த ஜனத்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 50 சதவீதம்இவர்களை ஆட்டிப் படைப்பவர்களும், அதிகாரம் செலுத்துபவர்களும் கிறிஸ்தவர்களாகவே இருந்து வருகிறர்கள்முஸ்லிம்களுக்கான அடிப்படை உரிமைகளிலிருந்தும் அவர்களை ஓரங்கட்டியிருக்கிறதுமுஸ்லிம்கள் அங்கு அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லைமுஸ்லிம் பிள்ளைகள் கல்விக் கூடங்களில் சேர வேண்டுமானால் அந்தப் பகுதி தலைவர் இந்தக் குழந்தை இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான் என்பதற்கு நான் பொறுப்பேற்கிறேன் எனக் கையயாப்பமிட்டு சான்று அளிக்காதவரை பள்ளியில் சேருவது என்பது இயலாத காரியம்இவ்வாறு முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன. நகர குடிமக்களாக ஏற்றுக் கொள்வதும் பிரமப்பிரயத்தனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டின் முழுக் கட்டுப்பாடும் கிறிஸ்தவர்களின் பொறுப்பில் இருப்பதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் பிற்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைத்திட அவர்களை சிறுபான்மையினராகக் காட்டிட என்னென்ன செய்ய வேண்டுமோ அவையனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றனஅரசுப்பணிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவதில்லை. நாட்டின் வளமானவர்களாகவும் கருதப்படுபவர்கள் கிறிஸ்தவர்களேஅரசுப் பணி வாயில்கள் திறந்திருப்பதெல்லாம் அவர்களுக்காக மட்டுமே என்னும் நிலை அங்கு சர்வ சாதாரணமாகவே உள்ள நிலையாகும்.

சிறையும் கொலையும்!

    கடந்த பல வருடங்களாகவே நைஜீரிய செக்யூரிட்டி போர்ஸ் (பாதுகாப்புப் படை) முஸ்லிம் வாலிபர்களை சிறைப் பிடிப்பதிலும் கொலை செய்வதிலும் முனைந்து வருகிறதுஇவற்றையயல்லாம் உலகச் செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதில்லைஇதுவரை போகோ ஹராம் ஊழியர்கள் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்ஏராளமான மஸ்ஜிதுகளும் மதுரஸாக்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளனபோகோ ஹராம் நடவடிக்கைகள் குறித்து வாய் கிழியப் பேசுபவர்கள் தொண்டை வெடிக்கக் கூச்சலும், கூக்குரலும் எழுப்புபவர்கள் பத்திரிகையாளர்கள், டி.வி நிறுவனங்கள் முஸ்லிம்கள் மீது ஏவி விடப்படும் நைஜீரிய அரசு அக்கிரமங்களை கொடுமைகளைப் பற்றி வாய் திறந்ததுண்டா, படம் பிடித்துக் காட்டியதுண்டா? பத்திரிகைகளில் பேனா முனையிலாவது வெளிப்படுத்தியது உண்டா? அது மட்டுமல்ல, போகோ ஹராம் அமைப்பு பலாத்கார இயக்க வன்முறை அமைப்பு இரத்த வெறி அமைப்பு என்றெல்லாம் நாட்டுக்கும் உலகுக்கும் எடுத்துக் காட்டவும், போகோ ஹராம் நிறுவனம் கல்வி நிறுவனங்களை அழிப்பதிலும், மாணவ மாணவியரைக் கடத்துவதிலும் ஈடுபாடு கொண்ட அமைப்பு என மேலை நாட்டு மீடியாக்கள் முஸ்லிம் கேந்திரங்கள், மதுரஸாக்களுக்கு எதிராக நைஜீரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்கள், அவற்றை தரைமட்டமாக்கிய கொடுமைகள் குறித்து வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?

குழந்தைகளும் தப்பவில்லை!

    நைஜீரியாவின் கிறிஸ்தவ மி­னரி அமைப்பு என்.ஜி.ஓக்கள் முதலானோர் முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவதில் முனைந்து வருகிறார்கள்.

    அரசாங்கமோ ஆப்ரே­ன் போர்னியோ, ஆப்ரே­ன் யூபே மற்றும் ஆப்ரே­ன் ஆதம்வா முதலான பெயர்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்கள், பெண்கள், சிறுவர்களைக் கொன்று குவித்திருக்கிறதுநைஜீரிய அரசின் காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொலை பாதக செயல்களினால் முஸ்லிம் பெருமக்களின் இதயங்களில் ஏற்பட்டுள்ள ஆழமான வடுக்கள் இன்னமும் பசுமையாகவே பதிந்து போயுள்ளன.

வக்கிரமமான அக்கிரமம்!

    நைஜீரிய அரசு முஸ்லிம்கள் மீது தொடர்ந்து கொடுமைகள் இழைத்து வந்திருக்கிறதுஅதனால்தான் போகோ ஹராம் துப்பாக்கி ஏந்தும் நிலை வருகிறது. 2009 இல் போகோ ஹராம் நிறுவனத்தின் தலைவர் முஹம்மது யூசுப் அவர்களை போலீசார் வன்முறை தாக்குதலால் கொலை செய்தனர்அதன்பிறகு அபூபக்கர் ஷேக்காவ் அதன் புதிய தலைவரானார்.  2009 இலேயே ராணுவ நடவடிக்கைகளின் முலம் 800 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்இந்த சம்பவத்தால் வெகுண்டெழுந்த முஸ்லிம் வாலிபர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு போகோ ஹராமில் சேரலாயினர்

    2013ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மிகப் பெரியதோர் இராணுவ நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழக்க முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன

மார்க்க நடவடிக்கை ஆட்சியாளரின் ஆத்திரம்!

    மதுரஸா ஒன்று   துவக்கம் முதல் நாடு முழுக்க சமுதாய எழுச்சிப் பணிகள் வேகமடைந்து வந்ததைத் தொடர்ந்து ஆங்காங்கே மதுரஸாக்களும், மஸ்ஜிதுகளும் உருவாகி போகோ ஹராம் நிறுவனம் மக்களிடையே நல்ல மதிப்பையும்  மரியாதையையும் செல்வாக்கையும் பெற்று வந்ததுஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளுக்கு பெரும் இக்கட்டாக அமைந்தனஇதனால் ஆத்திரமுற்ற அவர்கள் போகோ ஹராம் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கினர்முஸ்லிம்கள் மிகுதமாக வாழ்ந்து வரும் நைஜீரியா தங்கள் பிடியிலிருந்து நழுவி விடக்கூடாது என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக முஸ்லிம்கள் பொருளாதார பலமே பெறாது பார்த்துக் கொள்வதுடன் அவர்களை எப்போதும் ஆட்சியை எதிர்பார்த்து வாழக்கூடியவர்களாக வைத்திருக்கவே விரும்புகிறதுமேலும், எண்ணெய் வளமிக்க இந்நாட்டில் அனைத்து அதிகார வட்டமும், கிறிஸ்தவர்களைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதிலும் படிப்படியாக முஸ்லிம்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்கான வழிமுறைகளிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    1960 ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்த நைஜீரியா இன்று வரை கிறிஸ்தவ மி­னரியிலிருந்து அதன் வலிமையான பிடியிலிருந்து விடுபட முடியாமல் விழி பிதுங்கியிருக்கிறது.

    இந்நிலையில், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை நிர்மூலமாக்கவும், அவர்களின் எண்ணிக்கைகளை மாற்றுவதற்கும் அதற்கான முயற்சிகளில் அயராது செயல்படுவதற்கும் என ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவ பாதிரிமார்களை நைஜீரியா இறக்குமதி செய்திருப்பதாகவும் கூறுகின்ற செய்திகள், இதுவரை அவர்கள் மேற்கொண்ட எந்தவித முயற்சிகளும் முஸ்லிம்களிடம் எடுபடவில்லை எனவும் தெரிவிக்கின்றன.

நன்றி: மணிச்சுடர்2014 ரமளான் சிறப்பு மலர்