ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

தொகுப்பு : மு. முஹம்மது அலி ஹக்கிய்யுல் காதிரிய்,திருச்சி.

    நத்ஹர் வலி (ரலி) அவர்கள் வாய்திறந்து மலர்ந்தார்கள். பிள்ளைகளே! தொழுகைக்காக ஐந்து வேளையிலும் எழுப்பப்படும் பாங்கோசை ஆன்மிக வெற்றி பெற உங்களை அழைக்கும் அழைப்பாகும்.

    ஹைய அலல் ஃபலாஹ் என்னும் குரலை நீங்கள் கேட்கிறீர்கள்ஆனால் அதன் பொருளை நீங்கள் புரிந்து கொள்வதில்லை.

    தொழுகையும் நோன்பும் உங்களிடத்திலே பழக்கத்தின்பால் பட்டதாகிவிட்டது.  ­ரீஅத்தான சட்டதிட்டங்களை கவனிக்கிறீர்களே தவிர அதன் ஹகீகத்தான தத்துவத்தை நோட்டமிடுவதில்லை. தொழுகையும் நோன்பும் சட உடலின் உள் முகமாக இருக்கும் சூக்கும உடலை வெளிபடுத்துவதற்கான பயிற்சியாகும்.

    மண், நீர், நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் மண்ணை நீர் கரைத்து விடுகிறது. நெருப்பு நீரை ஜீரணிக்கிறது. நெருப்பைக் காற்று அணைத்துவிடுகிறதுகாற்று ஆகாயத்தில் ஒடுங்குகிறதுஆகாயம் மறையும் இடம் சூக்குமம்.

    தம்பூராவின் கம்பியில் நாதம் இருப்பது போல (நாசூத் ஆகிய) நமது இடத்தில் சூக்குமம் மறைந்து இருக்கிறதுஅந்த சூக்கும சரீரத்துக்குள்தான் ஆன்மா (ரூஹ்) இருக்கிறதுசூக்குமத்துக்கு அறபியில் மலக்கூத்து என்ற பெயருண்டுஎப்படி இந்த ஜட உடலும் ஐம்பூதம் கொண்ட உடலும் இந்த பூமியில் வாழ்கிறதோ அதுபோல சூக்குமம் பூதக் கண்ணுக்குத் தெரியாத சூக்கும உடலில் வாழ்கிறதுஇந்த சூக்கும உடலுக்கும் மரணத்துக்கும் சம்மந்தம் கிடையாதுதனக்கென்று அழியா சூக்கும உடல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவே மனிதன் பூமியில் பிறக்கிறான்ஆனால் பூமியின் மீதுள்ள கவர்ச்சிப் பொருள்களான மண், பொன், பெண் இவைகளின் மீதான ஆசை அவன் கண்ணை மறைத்து விடுகிறதுஇவை ஜடஉலகைச் சேர்ந்த கவர்ச்சிகள்.

    நித்திய சொர்க்க வாசமென்பது இந்த சூக்குமத்துக்கு உரியதாகும்இதனை ஒவ்வொரு மதமும் அதனதன் போக்கில் வருணித்தாலும் உண்மையயன்பது ஒன்றுதான்.  சூக்கும உடலை நீ கைப்பற்றிக் கொள்ள வேண்டிய இடம் இந்த பூமியாகும்.  எனவே இந்த பூமிக்கு வந்த வேலையை நீங்கள் முதலில் கவனிக்க வேண்டும்.

    ஜபதபம், திக்ரு, ஃபிக்ரு, யோகம், ஞானம், தரீகத், ஹகீகத், மஅரிபத் என்னும் எல்லா வார்த்தைகளுக்குமான ஒரே பொருள் நீ சூக்கும உடலை அடைந்து கொள்ள வேண்டுமென்பதுதான்மதங்களில் கூறப்படும் யோக சாதனைகள் பலவாறு உள்ளன. மதங்களின் வெளிப்படையான சட்டதிட்டங்கள் இறைவனால் வெளியாக்கப்பட்ட வேத நூல்களை ஆதாரமாகக் கொண்டவை.

    ஆனால் மதங்களின் அந்தரங்க ஞானம் என்பது ஞான குருமார்களை ஆதாரமாகக் கொண்டதாகும்ஒரு தாயின் கற்பவறையில் பத்துமாத காலம் ஒரு குழந்தை வளர்ந்து முழுமையடைந்து பூமிக்கு வெளிவருகிறதுஇந்தக் குழந்தை உண்டாவதற்கு தகப்பன் காரணமாயிருக்கிறான்ஒரு சிஷ்யன் அல்லது சிஷ்யையின் ஜட உலகத்தில் உள்ள இருதய கமலம் என்னும் கல்பாகிய கருவறையில் ஒரு சூக்குமம் உருவாகி வெளிப்பட நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. உள்ளுள் உயிராக தோற்றப்படும் ஆன்மா ஆகிய மெய்ப்பொருள் ஜடஉடலின் கோலத்தை தன் கோலமாக ஆக்கிக் கொள்ளும்போது தான் சூக்குமம் முழுமையடைந்து வெளிப்படுகிறது.

    பிறப்பு என்பதெல்லாம் ஆன்மா ஜட உடலில் புகுந்து கொண்டு சூக்கும உடலைத் தயாரித்துக் கொள்ள தேவைப்படும் கால அவகாசமாகும்அந்த சூக்கும உடல் இறைநேச அழியா நிலையை அடைகிறதுஇந்தச் சூக்குமம் முழுமையடைந்து வெளிப்பட குருதான் காரணமாயிருக்கிறார்.

    எனது பிள்ளைகளே! நான் பல்வேறு சாதனைகளை உங்களுக்குப் போதித்திருக்கிறேன்இப்போது நான் கூறுவதைக் கவனியுங்கள்உங்களைப் போன்று கண்ணாடியில் நீங்கள் காணும் உருவத்தை உங்கள் முன் ஒளி உருவமாக நிறுத்திப் பழகுங்கள். பின்னர் அந்த ஒளி உடலை உங்களுக்குள்  நிறைத்து நீங்கள் அதிலிருந்தபடியே தொழுகை முதலான அனைத்து அனுஷ்டானங்களையும் உணவருந்துதல் முதலான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வாருங்கள்ஆண்டவன் அடியானுக்கும் கஅபத்துல்லாவுக்கும் நடுவில் இருக்கிறான் என்னும் எண்ணத்துடன் தொழுது கொள்ளுங்கள் என்னும் நபி மொழியின் பொருளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கிடையே நபி உண்டாகியிருப்பதை நீங்கள் கவனிப்பதில்லையா?   

    என்னும் மறை திருவசனம் என்ன கூறுகிறது என்பதனையும் ஆராய்ந்து பாருங்கள்இந்த நபி  மொழியும் இந்த இறைவசனமும் நான் கூறுகின்ற சூக்கும ஒளி உடலைப் பற்றிய தெளிவான குறிப்பாகும்.

    அல்லாஹ்வை திக்ரு செய்து தியானிப்பதிலிருந்து உலகக் கவர்ச்சிகள் உங்கள் கவனத்தைத் திசை திருப்பிட வேண்டாம் என்னும் இறைவனின் எச்சரிக்கை திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.

    உலகப் பொருள்களை நீங்கள் நுகரலாம். ஆனால் உலகத்தின் அற்புதங்களான மண், பொன், பெண் இவை உங்கள் மனதில் தாமரை இலை தண்ணீரைப் போலவே நிற்க வேண்டும்எண்ணாத  எண்ணமெல்லாம் எண்ணி மயங்காதவர் மனக்கண்ணாடிக்குள் முகமாம் என்று ஞானிகள் கூறுவது போல உங்கள் மனதை உலகக் கவர்ச்சிகளிலிருந்து விலகியிருக்கப் பழகுங்கள்

    யோக சாதனைகளின் நோக்கம் மனதைப் பரிசுத்தப்படுத்துவதுதான்பரிசுத்தமான மனம் கஅபாவினும் உன்னதமானதாகும்மனம் என்னும் கருப்பையிலிருந்துதான் சூக்கும ஜோதி உடல் வெளிப்படும்நீங்கள் நித்திய வாழ்வு மட்டுமல்ல; ஆகுக என்றதும் நீங்கள் இச்சிக்கும் எப்பொருளும் ஆகிவிடக்கூடிய ஆண்டவனின் ஆற்றலையும் பெற்று பேரின்ப வாரிதியில் திளைப்பீர்கள்.

    பாபா மெளனித்தார்கள்.  அந்த மெளனம் கலையாமலேயே படுக்கைக்குச் சென்று  உறங்கிவிட்டார்கள்.  இரவு பூமி மீது கவிழ்ந்தது.  அதிகாலைப் பொழுதில் விடியா விடியலில் தஞ்சையிலிருந்து இரு குதிரை வீரர்கள் விரைந்து வந்தார்கள்.  தஞ்சை மகராஜன் இராஜராஜ சோழன் முன்னிரவில் காலமாகிவிட்டதாக வந்த செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.  தன் மடியில் வந்து விழுந்து அழுது புரண்ட ஆத்தும குமாரி மாமாஜிக்னி என்று குந்தவை நாச்சியாரின் கூந்தலை வருடி பாபா ஆறுதல் கூறினார்கள்.  மகளே உன் சகோதரனின் பெயர் செத்தவர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்றார்கள்.

    குந்தவை நாச்சியாரின் முந்திய இரவில் சொற்பொழிவின் போது பாபா கிழக்கு நோக்கி கூச்சலிட்ட வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்கள்மகனே! இராஜராஜ் வெட்டவெளியில் நிற்காதே சூக்குமத்தில் பாய்ந்துவிடு! என்னும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் நாச்சியாருக்குப் புரிந்ததுதோழர்கள் பலரும், கலந்தர்கள் அனைவரும் நாச்சியாருக்கு ஆறுதல் கூற வந்து  நின்றனர்அவர்கள் பலரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்ததுமறைந்த மன்னன் இராஜராஜன்சிவபக்தன்.  இஸ்லாமிய ஞானியான பாபாவுக்கும் அவருக்கும்  எப்படி  ஆத்மிக நெருக்கம் இருக்க முடியும்?  மற்றவர்களின் மனதில் இருக்கும் கேள்வியை உணர்ந்து கொண்டு எல்லோரும் அறிந்து கொள்ளுமாறு பாபா தெளிவாகக் கூறினார்கள்.

    குருவுக்கும் சீடனுக்கும், குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையில் தான் மதம் உயிரோட்டத்துடன் இருக்கிறது.” மறைந்த மன்னன் இராஜராஜன் தப்லே ஆலம் ஆகிய எனது உத்தமமான சீடர்களில் ஒருவன்.

        சூக்குமம் காரணம் மகாகாரணத்தொடு துலங்கிடற் கருள்புரியவும்

        ஏற்றபடி ஆன்மவடிவு என்முகத் தெதிர்நின்று இலங்கிடற் கருள் புரியவும்  -

                      (குணங்குடி மஸ்தான் ஒலியுல்லா பாடல் பாகம் - பொறை நிலை.)

இம்மை மறுமையாகிய சகலவிதப் பந்தங்களையும் புனிதமாக திரஸ்கரித்தால் தான் உன் சிரேஷ்டமான உள்ளத்துக்கு ஹக்குத் தஆலாவின் திவ்விய சூக்கும தரிசனம் பிராப்தமாகும்.               (பத்ஹூர் ரப்பானி 61 கெளதுல் அஃலம் (ரலி))

        பூதறி சதுர்திஹி சம்ஹிதஹ சூட்சுமைஹி

        மனோஜீவா தேகம் உபைதி தேகாத் கர்மாத்

        வக்த்வாத்து தஸ்ய திருஷ்யம் தீப்மையஹி வினாதர்சனம்          ( அஸ்திரூபம்.)

ஐம்பூதங்களில் மண்ணாகிய பூதத்தைத் தவிர்த்துவிட்டு ஆன்மா, நீர், காற்று, தீ, வானம் ஆகிய நான்கு பூதங்களுடன் கூடிய சூட்சும சரீரத்துடன் தேகத்தை விட்டு தேகம் தாவி அலைகிறதுமோட்சம் என்னும் தெய்விக நிலை அடையும் வரை ஆன்மாவின் பயணம் நீடிக்கிறது.  (சரஹசம்ஹிதா - சரஹர்.)    (நன்றிபேரின்ப சாகரம் நூல் )