ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை


பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை
புத்தகம் உருவான கதை


அதிரை எஸ் . ­ ர்புத்தீன்டி . காம் .( துபை )


2011 ஜனவரி மாதம் ஒரு நாள் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கூட்டத்தில்துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக மலர் ஒன்று வெளியிடவேண்டுமென முடிவெடுத்தோம் . அதன்பொறுப்பு என்வசம் ஒப்படைக்கப்பட்டது .


பிறகு ஒரு நாள் நான்யோசித்தேன் . துபையில் எத்தனை பேர் எழுதுவார்கள் ? எழுதுபவர்கள்மிகக் குறைவு . ஒரு சிலர் எழுதித் தருவார்கள் . மலர்வேண்டாம் ; உலகத்தரம் வாய்ந்த ஒரு புத்தகம் எல்லோரும் படிக்கும் அளவுசிந்தனை செய்யும் முகமாக வர வேண்டும் . இந்தப் புத்தகம் ஒவ்வெரு முஸ்லிம் வீட்டிலும்இருக்க வேண்டும் . முக்கியமான புத்தகமாக அதாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைப் பற்றி மட்டுமே பேசும் சிறந்த - மற்றும் இதுவரை தமிழ்உலகில் இப்படி ஒரு தெகுப்பு வராத அளவிற்கு மூன்று முக்கியமான அம்சங்களுடன் வர வேண்டும் . உலகத்தரம்வாய்ந்த அட்டை , அச்சு , உள்ளே உள்ளவி ­ ­ யங்கள் ( கட்டுரை , கவிதை , வரலாற்றுச்செய்திகள் ) இது முஸ்லிம் அல்லாதவர்களும் படிக்க - அதேசமயம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய அகமியமான வி ­ யங்கள் அதில் மிளிர வேண்டும் என்னும் சிந்தனையுடன் புத்தகத்தின்அளவு , ஆரம்பம் முதல் கடைசி பக்கம் வரை எப்படி வர வேண்டும் உருவாகவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டேன் . அருட்கொடை பெயர் உருவானது .


இதை முதலில் துபை சபைச்செயலாளர் நண்பர் முஹம்மது யூசுப் அவர்களிடம் பகிர்ந்தேன் .அவர்மிகவும் சந்தோ ­ மாகஏற்றுக் கொண்டார் . பிறகு நண்பர் கலீபா ஆலிம் புலவர் ஹுசைன் முஹம்மது அவர்களிடம்பகிர்ந்தேன் .   அவர்களும்மிகவும் ஒரு பொறுப்பு கலந்த சந்தோ ­ மாகஏற்றுக் கொண்டார்கள் .   துபைசபை நிர்வாகத் தலைவர் கலீபா . . பிசஹாபுதீன் அவர்களிடம் தெரிவித்தேன் .   பிறகுஎன் நண்பர்களான காதர் மொய்தீன் , சிராஜுதீன் ( பேராவூரணி ) அவர்களிடமும்பகிர்ந்து கொண்டேன் .


2011 பிப்ரவரி மாதம் இலங்கையில் வாப்பா நாயகம் நடத்திய ( வெலிகம ) மீலாதுவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற சமயத்தில் சங்கைமிகு ஷெ ­ ய்குநாயகம் அவர்களிடம் இதைத் தெரிவித்த போது நன்றாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார்கள் .


உடனே முதல் வேலையாகமறைஞானப்பேழையில் 2011 பிப்ரவரி மாத இதழில் கட்டுரைகளுக்காக அறிவிப்புக் கொடுத்தோம் . மீண்டும் 2011 ஜூலை 18- ஆம்தேதி சங்கைமிகு ஷெ ­ ய்கு நாயகத்தை நானும் ஆலிம் புலவரும் துபையில் சந்தித்துமறுபடியும் புத்தகம் சம்மந்தமாக விரிவாகப் பேசினோம் . ஷெ ­ ய்குநாயகம் அவர்கள்   ஒருவாழ்த்துக் கட்டுரையும் எழுதித் தர வேண்டினோம் . அவர்கள்ஒரு வாழ்த்துக் கவிதையும் கட்டுரையும் தர சம்மதித்தார்கள் .


பிறகு ஆலிம் புலவரும் நானும் ஜூலை மாதம் 2011- ல் கட்டுரை கவிதைகள் வேண்டி பல எழுத்தாளர்கள் , கவிஞர்களுக்குஅழைப்புக் கடிதங்கள் அனுப்பினோம் .   நானும்எழுத ஆரம்பித்தேன் . நண்பர்களையும் எழுதத் தூண்டினேன் .


சங்கைமிகு ஷெ ­ ய்குநாயகம் வாப்பா அவர்களின் புனித 2012- ஆம் வருட துபை விஜயத்தில் புத்தகம்சம்பந்தமாக பேசும் போது அருட்கொடை என்ற பெயரை பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை என்று மாற்றினார்கள் . ஆலிம்புலவர்   இதுவரை அச்சுக் கோர்த்தவைகளை அனுப்பக் கேட்டேன் . 70 பக்கங்கள்அளவிற்கு DTP செய்து திண்டுக்கல்லில் இருந்து கூரியர் மூலம் அனுப்பினார் . துபையில்வாப்பா நாயகம் அவர்களிடம் காண்பிக்க அதைப் பார்த்துவிட்டு புத்தகம் மிகவும் சிறப்பாகவரும் என வாழ்த்தினார்கள் .


புத்தகப் பணிகள் தொடர்ந்தன . நேர்த்தியாகமற்றும் நம் விருப்பம் போல் . ஷெய்கு நாயகம் சந்தோ ­ ம்அடையும் வகையில் புத்தகம் வெளிவருவதற்கு எந்த பதிப்பகத்தாரிடம் கொடுப்பது ? எனயோசித்துக் கொண்டு இருந்தேன் .


நான் இந்தியா சென்றிருந்தபோது கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்தை தஞ்சாவூரில் பார்த்தேன் . நேர்த்தியாகஇருந்தது . சென்னையைச் சேர்ந்த அவர்கள் அச்சிடுவது சென்னையில் அல்ல . மணிப்பாலில் . பலமாதிரியான மற்றவர்கள் வெளியிட்ட புத்தகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபொழுது , கிழக்குப்பதிப்பகத்தார் வெளியிட்ட புத்தகங்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தேன் . இந்நிலையில்ஆலிம்புலவரும் பல தொடர்புகளைக் கொண்டு பல பதிப்பகத்தார்களிடம் விசாரித்து வந்தார்கள். முடிவில் கிழக்குப் பதிப்பகத்தில் கொடுப்பது என்று முடிவு செய்து வாப்பா நாயகம் அவர்களிடம் தெரிவித்தோம் .   அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள் .


இதற்கிடையில் கட்டுரைகள் , கவிதைகள் மற்றும் வரலாற்றுச் செய்திகள் சேகரிக்கப்பட்டு பல முறை துபையில் தோஹாவில் முஹம்மதுயூசுப் அவர்களும் , திண்டுக்கல்லில் ஆலிம்புலவர் அவர்களும் அச்சுப்பிழைகளைச்சரிசெய்ய ஆரம்பித்தோம் . பலமுறை திரும்பத் திரும்பப் பார்த்த போதும் அச்சுப்பிழைகள்வந்து கொண்டே இருந்தன . இதை மு . மேத்தா அவர்களிடம் ஒருமுறை சொன்ன போது , அதுஅப்படித்தான் வரும் . இது ஒரு அச்சுப்பேய் – Print Devil என்று சொல்வார்கள் .   எத்தனைமுறை பார்த்தாலும் வந்து கொண்டுதான் இருக்கும் . தொடர்ந்து Proof பார்த்துக்கொண்டேயிருங்கள் என்றார்கள் .


ஆலிம்புலவர் தொடர்ந்து DTP யில் புத்தகத்தைப் பதிவு செய்துகொண்டே இருந்தார் . Complete DTP, Complete Layout வேலைகள் முடிந்தவுடன் 01/09/2013 அன்று   கவிஞர்மு . மேத்தா அவர்களுடன் நானும் ஆலிம்புலவரும் சென்னையில் கிழக்குப்பதிப்பகத்திற்குச் சென்றோம் . கிழக்குப் பதிப்பக மேனேஜர் திரு . பிரசன்னாநாங்கள் நினைப்பது போன்று ( கிட்டத்தட்ட ) செய்துதருவதாகச் சொன்னார் . அது அப்படியிருக்க , கவிஞர்மு . மேத்தா அவர்கள் எங்களிடம் வேறு சில முக்கிய பதிப்பகங்களும்போய்ப் பார்க்கலாம் என்று கூறி எங்களை அன்றே நர்மதா , குமரன்உள்ளிட்ட பதிப்பகங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள் - ஒருமாற்று யோசனைக்காக கவிஞர் மு . மேத்தா அவர்கள் வீட்டில் நாங்கள் மூவரும் கலந்தாலோசித்துக் கொண்டு இருந்தோம் . புத்தகமதிப்புரைகள் தமிழகத்தில் மிகப் பிரபலமான மற்றும் முக்கியமான தலைவர்களிடம் பெற வேண்டும்என ஆசைப்பட்டிருந்தேன் . நண்பர் முஹம்மது யூசுப் மற்றும் ஆலிம்புலவரின் ஆசையும் அதுவே . ஆலோசித்ததன்முடிவில் , பெருமானாரைப் பற்றிய ஒரு புத்தகத்திற்கு யாரிடமும் மதிப்புரைபெற வேண்டாம் ! தேவையில்லை என முடிவு செய்தோம் .


கவிஞர் மு . மேத்தாஅவர்கள் அன்புடன் சொன்னார்கள் . நிறைய செலவு செய்து அட்டை , அச்சுஉட்பட அனைத்தும் மிகச் சிறப்பாக வர வேண்டும் என உறுதி கொண்டு புத்தக வேலையை ஆரம்பித்துள்ளீர்கள் . அப்படிஇருக்கும் போது உள்ளே உள்ள வி ­ ஷயங்களும் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் . கட்டுரைகளின்தரத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டும் . கட்டுரையின் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாகஇருக்க வேண்டும் . கட்டுரையின் நடுவில் கொஞ்சம் கூட தொய்வு ஏற்பட்டிருந்தாலும்அந்தக் கட்டுரையை முழுவதுமாக நீக்கிவிடுங்கள் - அதுஉங்களுக்கு வேண்டிய அல்லது முக்கியமானவர்களுடைய ஆக்கமாக இருந்தாலும் சரியே ! என்றுகூறினார்கள் . அவர்கள் சொன்னதற்குப் பிறகு மீண்டும் கட்டுரைகள் மற்றும்கவிதைகளை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தோம் .   விளைவு பல கட்டுரைகளை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . கடைசியில்   Final Deletingand Editing - க்குப் பிறகு ஆலிம்புலவர்சென்னை சென்று கிழக்குப் பதிப்பகத்தில் Final DTP - யைக் கொடுத்தார்கள் .


பொறியாளர் ஹைதர் நிஜாம்அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் கிழக்குப் பதிப்பகத்தில் ஒரு பங்குதாரர் . அதன்நிமித்தம் சகோதரர் ஹைதர் நிஜாம் அவர்களிடம் நான் அவர் உரிமையாளர் மூலமாகப் பேசக் கேட்டுக்கொண்டேன்கிழக்குப் பதிப்பக உரிமையாளர் ஒருமுறை சகோதரர் ஹைதர் நிஜாம் அவர்களிடம் நேரடியாக நாங்கள் சிறப்பாக புத்தகத்தைச் செய்துதருகிறோம் என்றும் கூறியுள்ளார் . கிழக்குப் பதிப்பகத்தார் அச்சுப்பணியைத்தொடர்ந்தார்கள் . பிறகு ஒருநாள் புத்தகம் நீங்கள் நினைத்தது போல அடிக்க இந்தியாவில்வாய்ப்பில்லை என்று என்னிடம் கூறிவிட்டார்கள் . எங்கள்மனது மிகக் கஷ்டப்பட்டாலும் மனம் தளராது வப்பா நாயகத்தின் மிகப்பெரும் அருளால் எப்படியும்இந்தப் புத்தகம் சிறப்பாக வரும் . அதை வாப்பா நாயகம் நடத்தும் இலங்கை மீலாதுவிழாவில் கண்டிப்பாக வெளியாக்க வேண்டும் என நாங்கள் தீராதஆவலில் இருந்தோம் .   ஆலிம்புலவர் மற்றும் முஹம்மது யூசுப் அவர்களும் , வாப்பாநாயகம் இதை நிறைவேற்றி வைப்பார்கள் என்று கூறினர் . இதற்கிடையில் ஆலிம்புலவருக்கு   சிவகாசியில் மிகத் தெரிந்த ஒரு பிரபலமான அச்சகத்தில் அடிப்பது என ஒரு மாற்று யோசனையுடனும் இருந்தோம் .


இதற்குப் பிறகு சிலநாட்களில் திரு . பிரசன்னா , புத்தகம் நீங்கள் நினைத்தது மாதிரி அச்சடித்துக்கொண்டு வர முயற்சி செய்கிறோம் . ஆனால் உங்கள் இலங்கை விழாவில் வெளியிட நிச்சயமாக எங்களால் புத்தகம் தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் . ஏனென்றால்புத்தகம் அடித்து வருவது மணிப்பாலிலிருந்து . புத்தகம் முழுவதும் தயாராவதற்கு குறைந்தது 40 நாட்கள் ஆகும் என்று எங்களிடம் முன்பே கூறியிருந்தார் .


இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் . திரு பிரசன்னா அவர்கள் ஒருமுறை என்னிடம் கூறினார் . ( கிழக்குப்பதிப்பகம் வெளியிடும் ) புத்தகத்தை விட உங்களின் இந்த இஸ்லாமியப் புத்தகம் சிறப்பாகவர நான் நூறு சதவீதம் முயற்சி செய்கிறேன் என்று . மீண்டும்மீண்டும் கேட்டுக் கொண்டதற்கிணங்க , ஒரே ஒரு புத்தகம் பிரத்தியேகமாக சென்னையில்அடித்துத் தருவதாகவும் அது உங்களுக்குப் பிடித்திருந்தால் நாங்கள் புத்தகம் தயாரித்துத்தருவோம் என்றும் திரு . பிரசன்னா கூறினார் .


2014 ஜனவரி மீலாது விழாவில் கலந்து கொள்வதற்காக நாங்கள் திருச்சியிலிருந்துகிளம்பி கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதும் மதியம் நான் திரு . பிரசன்னாவைத்தொடர்பு கொண்ட போது , அவர் ஒரே ஒரு நூல் இப்பொழுதுதான் தயாராகி உள்ளது என்று தெரிவித்தார் . அதைசென்னையில் உள்ள கிழக்குப் பதிப்பக புத்தக ஸ்டாலிலிருந்து பெற வேண்டும் என்றும் தெரிவித்தார் .   அதை அடுத்த நாளிற்கே வெலிகமாவிற்குக் கொண்டு வர வேண்டும் . எப்படி ?


சகோதரர் ஹைதர் நிஜாம் அன்று இரவு விமானத்தில் சென்னையிலிருந்து இலங்கை வருவது எனக்குத் தெரிந்திருந்தது . நான்உடனே அவரைத் தொடர்பு கொண்டேன் . அவர் இலங்கை வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்குக்கிளம்பிக் கொண்டு இருந்தார் . அவர் வீடு , கிழக்குப்பதிப்பக அலுவலகம் , சென்னை விமான நிலையம் மூன்றும் மூன்று கோணத்தில் இருக்கிறது . இருந்தாலும்சகோதரர் அந்த ஒரு புத்தகத்தை அவசரமாக பெற்றுக் கொண்டு வெலிகமாவிற்குக் கொண்டுவந்துவிட்டார் .


புனித மீலாது விழாவில்இந்தப் புத்தகத்தை வாப்பா நாயகம் அவர்களின்   வெளியீடு செய்தார்கள் . பிறகுஇரண்டு வாரங்கள் கழித்து மணிப்பாலிலிருந்து ஒரு மாதிரி புத்தகமும் வந்தது . மிகநன்றாக இருந்தது . புத்தகத்தின் அட்டை இன்னும் கூடுதலாக நன்றாக இருக்க , அட்டையின்வண்ணத்தை மாற்றச் செய்தோம் .2014 மார்ச் மாதம் எல்லாப் புத்தகங்களும்அச்சிடப்பட்டு மணிப்பாலிலிருந்து சென்னை வந்து பிறகு எங்களிடம் சேர்ந்தது . துபைக்குசில புத்தகங்கள் கொண்டு வந்து முதலில் சங்கைமிகு ஷெ ­ ய்குநாயகம் அவர்களிடம் காண்பிக்க மிகவும் நன்றாக உள்ளது என்று சந்தோ ­ ஷப்பட்டுவாழ்த்தினார்கள் . துபையில் மார்ச் மாதம் 28- ம்தேதி கலீபா . . பி . சஹாபுதீன் அவர்களின் இல்லத்தில் நடந்தமஜ்லிஸில் சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள் தங்களின் புனிதக் கரங்களால் வெளியிட்டார்கள் .


இந்தியாவில் மே மாதம் 25- ம்தேதி திருச்சி ஃபெமினா ஹோட்டலில் ஆலிம் புலவர் , கிப்லாஆசிரியர் என் . அப்துஸ்ஸலாம் ஆலிம் , மற்றும்திருச்சி முரீதுப்பிள்ளைகளின் உழைப்பால் மிகச் சிறப்பாக இப்புத்தகம் வெளியிடப்பட்டது .   அல்ஹம்துலில்லாஹ் ! இந்தப் புத்தகம் மிகச் சிறப்பாகவெளிவருவதற்குக் காரணம் எம்பெருமானார் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிகப்பெரும்கருணையும் அவர்களின் திருப்பேரர் சங்கைமிகு ஷெ ­ ய்குநாயகம் அவர்களின் மாறா அன்பும் ஆசியும் என்பதுதான் சத்தியம் .