ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      நூல் வெளியீட்டு விழா


காமூஸ் அரபு - தமிழ் அகராதி அறிமுகம்


பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

நூல் வெளியீட்டு விழா !

அறபுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளைஆய்வு செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் .                                            
பேராசிரியர் கே . எம் . காதிர்மொஹிதீன் வேண்டுகோள் !


அறபுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வுசெய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை நூல் வெளியீட்டுவிழாவில் பேராசிரியர் கே . எம் . காதர் மொஹிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .திருச்சி ஃபெமினா ஹோட்டல் காவேரி ஹாலில்
25-05-2014 மாலையில் அறபு - தமிழ் காமூஸ்அகராதி அறிமுகம் , மற்றும் பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை என்னும்நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது .


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர்பேராசிரியர் கே . எம் காதர் மொஹிதீன் தலைமையில் நடந்த இந்தவிழாவில் கவிஞர் மு . மேத்தா , பேராசிரியர்சாயுபு மரைக்காயர் ,தேங்கை ஷ ­ ரபுத்தீன்மிஸ்பாஹி , சிறப்புரையாற்றினர் . திருச்சிஜமால் முஹம்மது கல்லூரிப் பேராசிரியர் கான் முஹம்மது வரவேற்றுப் பேசினார்.  கிப்லா மாத இதழ் ஆசிரியர் மெளலவி என். அப்துஸ்ஸலாம் ஆலிம் தொகுப்புரை வழங்கினார். துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் ஏ . பி சஹாப்தீன் - அதிரை ­ ஷர்புத்தீன் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். முன்னதாக ஹாபிழ் வி. எம் . முஹம்மது ஜகரிய்யா யாஸீனிய் கிராஅத் ஓத . கலீபா ஆலிம்புலவர்  எஸ் . ஹுஸைன் முஹம்மது மன்பயீ  இறைத்துதிப்பா பாடினார் . பாடகர்  தேரிழந்தூர் தாஜுத்தீன் நபிபுகழ்ப்பா பாடினார் . தென்னக ரயில்வே என் . ராஜா முஹம்மது எம் . . நன்றி கூறினார் .


பேராசிரியர் கே . எம் . காதர் மொஹிதீன் தனது நிறைவுரையில் கூறியதாவது :-

அறபு - தமிழ்அகராதியும் , பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை என்னும் நூலும்  வெளியிட்டுள்ள இந்தச் சிறப்பான விழாவில் பங்கேற்பதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் ஆன்மிகப் பெரியவர்களில் கலீல் அவ்ன் மெளலானா அவர்களின் வழிகாட்டுதல் , ஆன்மிகப் பாதையில் பயணித்து , அதன் பயனை முழுமையாக   அடைந்து வருகின்ற ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினரே இங்கு நிரம்பியிருக்கிறார்கள் .


அறிவியல் , வாணிபம் , இலக்கியம் , மொழி , அரசியல் போன்றவற்றைப் பேசும் கூட்டங்களில் பங்கேற்போருக்கும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தோர் கூடுவதற்கும் ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது . இங்கே கூடியிருப்போர் , இதயங்களால் ஒன்றிணைந்திருப்பவர்கள் ; இந்த இதய இணைப்பை ஆன்மிக நெறி செய்கிறது .   ஆகவே தான் , வேறு எந்தக் கூட்டத்துக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இந்தக் கூட்டத்திற்கு இருக்கிறது என்று சொல்ல வேண்டும் .


ஆன்மிகச் செல்வர் கலீல் அவ்ன் மெளலானா அவர்களின்மேற்பார்வையில் இந்த அறபு - தமிழ் காமூஸ் அகராதி வெளியிடப்பட்டிருக்கிறது . அறபு , தமிழ் மொழிகளில் மிகப் பெரும் புலமையும்வித்வத்தன்மையும் பெற்றுள்ளவர்கள் மெளலானா அவர்கள். அவர்கள் உருவாக்கித்தந்திருக்கும் இந்த அகராதிஅறபு மொழி கற்போருக்கும் கற்பிப்போருக்கும் பெரிதும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை .


பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை

பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை என்னும் நூலில்நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய 41 ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன . இந்தச் சிறப்பான பணியை அதிரை எஸ் . ­ ர்புத்தீன் , . என் . எம் . முஹம்மது யூசுப் , ஆலிம்புலவர்எஸ் . ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோர் செய்தளித்திருக்கிறார்கள் . இது போன்றதொரு நூல் இதுவரை வெளிவரவில்லை என்றே சொல்லலாம் .


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , பிரபஞ்சம் உருவானது முதல் இறுதியில் அழியும் வரையிலும் உள்ள அனைத்தையும்பற்றி அறிந்திருந்தார்கள் ; சொர்க்கம் , நரகம்பற்றித் தெரிந்திருந்தார்கள் . எல்லாம் தெரிந்திருந்தாலும் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவன் அல்லர் ; இறைவனின் தூதர் , இறைவனின் அடியார் என்பதை அவர்களின்வாழ்க்கை தெளிவுபடுத்துகிறது . இந்தத் தெளிவைப் படிப்போருக்குத்தெரிவிக்கும் கருத்துக் கருவூலமாக இந்த பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை திகழ்கிறது .


இங்கே உரையாற்றிய அறிஞர்கள் அறபு மொழியின்சிறப்பு பற்றியும் தமிழ் மொழியின் தனித்தன்மை பற்றியும் , தமிழுக்கு முஸ்லிம்கள் ஆற்றியிருக்கும் தொண்டுகள் பற்றியும் விரிவாகஎடுத்துச் சொன்னார்கள் .


தமிழகத்தில் தமிழுக்கும் பிற உலகச் செம்மொழிகளுக்கும்இடையில் ஒப்பாய்வு தொடர்ந்து நடந்திருக்கிறது . கிரேக்கம் , லத்தீன் , சமஸ்கிருதம் , சீனம் , ஹிப்ரு போன்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையில் ஒப்பாய்வு செய்த தமிழ்நாட்டுஅறிஞர்கள் இருக்கிறார்கள் . அறபியையும் தமிழையும் ஒப்பாய்வு செய்யயாரும் முன் வருவதில்லை .அறிஞர் எம் . ஆர் . எம் அப்துர் ரஹீம் அவர்களின் சகோதரர்எம் . ஆர் . எம் . முஹம்மதுஹனீப் அவர்கள் சொற்பிறப்பியல் என்னும் ஆய்வு நூலை வழங்கியுள்ளார் . முதல் மனிதர் ஆதம் பேசிய மொழி தமிழ்தான் என்று அவர் நிறுவியிருக்கிறார் . தமிழ் இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பண்டைய தமிழ்நாட்டு மன்னர்களின்பெயர்கள் ஆதன் என்று வருகிறது என்று அவர் எடுத்துக் காட்டியுள்ளார் . அறபிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை மட்டுமின்றி , எல்லா மொழிகளுக்கும் மூல மொழி தமிழ்தான் என்பதை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். அவரைப் பின்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர்அறபிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்வதற்கு முன்வருதல் வேண்டும்ஆலிம்புலவர் ஹுஸைன் முஹம்மது பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிப் பாடியுள்ள வரிகள் இவை :

மஹ்மூது நபிகள் போல ஒரு மனிதர் தோன்றவில்லை ; அவர் வாழ்ந்த வாழ்வைப் போல மண்ணில் எவரும் வாழ்ந்ததில்லை . இந்தப் பாடலுக்குரிய விளக்கமாகத்தான் பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடைநூல் வெளிவந்திருக்கிறது .


மீலாது விழாக்கள் பல்கிப் பெருக வேண்டும் !

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்மீலாதுப் பெருவிழாக்கள் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் நடந்ததன் விளைவாக , இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஞானம் தமிழ் மக்களிடம் ஆழமாகப் பரவியது . அது இனியும் தொடர வேண்டுமெனில் மீலாது விழாக்கள் எல்லா ஊர்களிலும் சிறப்பாகநடத்தப்பட வேண்டும் . அந்த விழாக்களில் பங்கேற்குமாறு சகோதர சமுதாயஅறிஞர் பெருமக்களையும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் . அறபு மொழியில் உருவமற்ற இறைவனை அல்லாஹ் என்று குறிப்பிடுகிறோம் . தமிழ் மொழியிலும் உருவமற்ற இறைவன் வணங்கப்பட்டுள்ளான் என்று பெரியார் போன்றஅறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் இன்றைய பழக்கத்தில்உள்ள உருவமுள்ள தெய்வங்கள் தோன்றுவதற்கு முன்பு உருவமற்ற இறைவனையே தமிழ்மக்கள் வணங்கிவந்துள்ளனர் என்று அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்
அதற்கு உதாரணமாக கடவுள் என்னும் சொல்லை விளக்குகிறார்கள். கட + உள் = கடவுள் என்றால் , உள்ளத்தை , மனித மனத்தைக் கடந்த ஒன்று என்றும் , உள்ளதையெல்லாம் கண்முன் இருப்பதையெல்லாம்கடந்த ஒன்று என்றும் உள்ளுவதை - சிந்திப்பதை - கற்பனை செய்வதை எல்லாம் கடந்து நிற்கும் ஒன்று என்றும் பொருள் விவரிக்கிறார்கள் . கடவுள் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த தமிழ் மக்கள் , இறைவனுக்கு உருவம் கற்பிக்காமல் , ஏகத்துவமாக உள்ள ஒன்றையேவணங்குகிறார்கள் என்ற விளக்கமெல்லாம் வெளிவந்து கொண்டிருக்கிறது .


இஸ்லாமிய ஏகத்துவமும் தமிழ் மொழியில் உள்ளஏகத்துவமும் ஒன்றாகவே இருப்பதை ஆய்வாளர்கள் உணரும் காலம் விரைந்து வரும் என்பதில் ஐயமில்லை .   இவ்வாறு பேராசிரியர் கே . எம் . காதர் மொஹிதீன் பேசினார் .


ராஜா ஹோட்டல் அதிபர் முஸ்தபா கமால் , இன்ஜினியர் ஏ . கே . யூசுப் , ஃபெமினா ஹோட்டல் அதிபர் பைஸல் , சிங்காரத் தோப்புஏ . கே . அஹமதுபிரதர்ஸ் உரிமையாளர் , நவாப் மஸ்ஜிது கரீம் ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வி . எம் . பாரூக் , ஜி . எம் . ஹா ´ ம் , தாசில்தார் அம்ஜத் இப்ராஹீம் , ஹுமாயூன் , முத்தலிபு , வாப்பாசாஹிப் மற்றும் சமுதாயப் புரவலர்கள் , தொழில் அதிபர்கள் , ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முன்னணியினர் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர் .

நன்றி : மணிச்சுடர் நாளிதழ் .