ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      அமுத மொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுத மொழிகள்


4.05.2014 அன்று திண்டுக்கல் தலைமை கலீபா எச் . எம் . ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில்தெளஹீதை விளங்கிய மனிதன் நேர்மையாகத்தான் நடக்க முற்படுவான். அவன் மாற்றமாக நடக்க விரும்ப மாட்டான் . ஒருவருக்கு அநியாயம் செய்வது மனதுக்கு வித்தியாசமான முறையில்நடந்து கொள்வது மார்க்க ஒழுங்குமுறை மாறி நடப்பது, குடிப்பது  மேலும் இது போன்ற கெட்ட செயல்களைசெய்பவன் அறியாதவன்தான் . அவனை அறியவைப்பதற்காக தெளஹீதுடைய ஒழுங்குமுறை கொண்டு வரப்பட்டது.


ஆக தவ்ஹீதுதான் அதிலும் முதலாவது
. அவ்வலுத்தீனி மஃரிபதுல்லாஹ் . மார்க்கத்தில் முதலாவது அல்லாஹ்வைஅறிவதே ! இந்த ஹதீஸ் எல்லா மார்க்க அறிஞர்களும்- மற்றவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மிஷ்காத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலில் பட்டவர்த்தனமாக வருகிறது .   ஒரு சிலர் மஃரிபா எனும் அல்லாஹ்வை அறியும் அறிவைப் படிக்கவேண்டாம் எனக் கூறித் தடுப்பர் . ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதோ மஃரிபாவைபடிக்க வேண்டுமென ; ஆனால் இவர்கள் சொல்வதோ மஃரிபாவைப் படிக்க வேண்டாமென ! ஞானமெல்லாம் படிக்கக் கூடாதென ! மஃரிபா - இர்பான் - என்றால் ஞானம் தான் . ஆக அல்லாஹ்வும் அவனது ரஸூலும்சொன்னதை மறுப்பது போல் ஆகிறதல்லவா ? எனவே மார்க்கத்தில் முதலாவது விஷ யம் தவ்ஹீதுடைய இல்முதான் !


தெளஹீதுடைய இல்மைத்தான் மஃரிபா என்கிறோம் . அல்லாஹ் ஒருவன் என்கிறோம் . ஆக இதையெல்லாம் மறந்து , மறுத்து வாழ்வது எத்துணை மோசமானவாழ்வாக அமையும் இன்று கலிமாவை எப்படிச் சொல்கிறார்கள். கலிமா தான் தவ்ஹீத். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்.  வணக்கத்திற்குரியவன்அல்லாஹ். அவனது திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் . இந்தப் பொருளைத்தான் அவர்கள் சொல்கிறார்கள் . சிறியவயதிலிருந்து அவர்கள் பெரியவர்களான பின்னும் மாறாமல் - சரியானபொருளைவிளங்காமல் - சிறியபிள்ளைகள் சொல்வது போல அதையே சொல்லிக் கொண்டுஅலைகிறார்கள் . பள்ளியில் படிக்கும் குழந்தை சிறிய வயதில் படித்தவிஷ ­ யத்திற்கு பெரிய வயதில் வேறு விளக்கத்தைப் பெற்று கொள்ளும் . ஆனால் கலிமாவில் சிறிய வயதில் என்ன விளங்கியிருந்தார்களோ அதையேதான் மெளத்தாகும்வரை விளங்கி வைத்துள்ளார்கள் .


அல்லாஹ்என்றால் என்ன ? ரஸூல்என்றால் என்ன ? அவர்களுடைய தத்துவார்த்தம் என்ன ? ஏனென்றால் எல்லாவற்றிற்கும் தத்துவார்த்தம் இருக்கிறது . இப்போது எனக்கு எதிரே மேசை இருக்கிறது ! இதன் தாற்பரியம்என்ன ? இதன் தாற்பரியம் பிளாஸ்டிக் .   பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருள் . இதேபோல மனிதன் ; மனிதனுடைய தத்துவார்த்தம் என்ன ? இப்படி அறிந்து கொண்டு போவதுதான் விளக்கம் தரும் . “ மன்அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு ” எவன் தன்னை அறிந்தானோஅவன் நிச்சயமாக தன்னுடைய ரப்பை அறிந்தான் .


எனவே மனிதன் தான் எதுவென அறிய வேண்டும் . அவன் தன்னுடைய வெளி உறுப்புகள் உள்உறுப்புகள் இவைகளை அறிவது அவனுடைய தத்துவார்த்தத்தை அறிவதல்ல . அது மருத்துவர்களுக் குரிய வேலை . எங்களுக்குள்ளதல்ல .   எங்களுடைய வேலை நாம் எங்கிருந்துவந்தோம் என அறிவதுதான் . இப்போது நாங்கள் இருப்பதோ கடைசிநிலை. மேலிருந்து  இறங்கி நுஸூலில் ( கீழ் இறங்குதல் ) வந்து இருக்கிறோம் .    அதனால்தான் ஷரீஅத்துடைய நிலையில் வைத்து மூடி வைக்கப்பட்டிருக்கிறோம் . அதனால்தான்           

ரீஅத்துடைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் . அதன்படித்தான் நடக்க வேண்டும். அதுதான் முறையும்கூடஏனெனில் அது பயிருக்கு  பாதுகாக்கும் வேலி போன்றது.               ரீஅத்தில்கூறப்படும்   கலிமா தொழுகை , நோன்பு , ஜக்காத்து , ஹஜ்ஜுஅனைத்தையும் பேண வேண்டும் .   இந்த ஐந்திலும் முதலாவதாக வருவது என்ன ? கலிமா தான் . கலிமா என்பது என்ன ? தவ்ஹீது ! கலிமாவைப் பற்றி அறிவதென்றால் தன்னைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் . தன்னைப் பற்றி அறிந்து விட்டால் அவன் எல்லா வகையிலும் முழுமை பெற்றுவிடுகிறான் . நுஸுலில் இருக்கும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துஉரூஜுக்கு ( உயருதல் ) போக வேண்டும் . இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்குப் போக வேண்டும் . ஏற்றத்துக்குப் போன பின் தான் தெரியும் நாங்கள் இன்ன நிலையில் தான் இருந்தோமென ! அதுவரை புரியாது !!  


இன்று நம்முடைய நிலை என்னவென சிந்தித்தால் காலையில்எழுகிறோம்.. சிலர் பஜ்ரு தொழுவதில்லை , பின்னர் காலைக் கடன்களை முடித்துவிட்டு பசியாறி , பின்னர் தொழில் - அலுவலகம் - வியாபாரம் போன்ற அன்றாடப் பணிகளைச் செய்துவிட்டுஇரவு வீடு வந்து சாப்பிட்டு படுத்து விடுகிறோம் ! இதுதான் எங்களின்தினசரி வேலைகள் ! எப்போதாவது நான் இருக்கும் மார்க்கம் என்ன ? என சிந்தித்திருப்பார்களா ? அதுவும் இருந்திருக்காது . தொப்பி அணிவோம் ; ஆனால் என்ன மார்க்கம் எனத் தெரியாது ! இன்று அந்த நிலைதான் வந்திருக்கிறது !  


இன்று இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத நிலைக்குவந்து விட்டது ! எதுஇஸ்லாம் என்றால் இவர்கள் சொல்வது எல்லாமே இஸ்லாம் என்பது போல்தான் தெரியும் ! சிந்தித்துப் பார்த்தால் எல்லாமே பொய்யாக - பாவமாகத்தான் இருக்கும். தேவையில்லாத கண்ட கண்ட வி ­ ஷயங்களைக் கூறி சட்டதிட்டங்களைக் கூறி மயக்கி , இன்றுஇஸ்லாத்தைப் பற்றி அறியவே முடியாத நிலைக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள் . வருங்காலம் மேலும் மேலும் கெட்டுப் போகும் ! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் . ஆனால் ஒரே ஒரு மனிதர் ‘ அல்லாஹ் , அல்லாஹ் என சொல்லிக்கொண்டிருக்கும் வரை உலகம் அழியாது என அல்லாஹ் சொல்கிறான் . எனவேஅதுவும் இருக்கும் . ஓர் ஆள் என்று சொன்னால் ? அதுவும் இருக்கும் ; இல்லாமல் போய்விடமாட்டார்கள் . ஒரு பகுதியினர் அல்லாஹ்வை விளங்கி அல்லாஹ் அல்லாஹ் எனச் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வர் .   அதுவரை உலகம் பாதுகாக்கப்படும் .


( மேலும் பொழியும் )