ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      ஹதீஸ் பக்கம்


ஹதீஸ் பக்கம்

புனித ரமளான் ! பூக்கும்நோன்பு !


அருமை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அருளினார்கள் .

ஒரு ரமளானிலிருந்து மற்றொரு ரமளான் வரை , ஒரு ஹஜ்ஜிலிருந்து மற்றொரு ஹஜ்ஜு வரை , ஒருஜுமுஆவிலிருந்து மற்றொரு ஜுமுஆ வரை , ஒரு தொழுகையிலிருந்து மற்ற தொழுகைவரையுள்ளஇடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த தவறுகள் மன்னிக்கப்படும். பெரும்தவறுகள் மன்னிக்கப்படாது

( அறிவிப்பாளர் : அபூ ஹைஸிம் - ரலி - நூல் : மிஷ்காத் )


போரில் உங்கள் உயிருக்குகேடயம் பாதுகாப்பு அளிப்பதுபோல நோன்பு உங்களை நரகிலிருந்து பாதுகாக்கும்
 

( அறிவிப்பாளர் : முத்ரிப் - ரலி - நூல் : நஸஈ , இப்னுமாஜா )


அல்லாஹ் வானம் பூமிஅனைத்திற்கும் பேசுவதற்கு அனுமதி வழங்கியிருந்தால் ரமளான் நோன்பு வைத்தவருக்கு சொர்க்கம்உண்டு எனும் நற்செய்தியை அவை கூறியிருக்கும்.


( அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரலி , நூல் : அல்குன்யா )


நோன்பாளியின் உறக்கம்ஒரு வணக்கமாகும் . அவரது ( நல்ல ) பேச்சுதஸ்பீஹ்- இறைத்துதியாகும்அவரது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . அவரது  அமல்களுக்கு பன்மடங்கு நன்மைகள் வழங்கப்படும்.

( அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா - ரலி - நூல் : அல்குன்யா )


என் உயிர் எவன் கைவசம்இருக்கிறதோ அ (ந்த இறை ) வன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம்கஸ்தூரி வாடையை விட சிறந்ததாகும் .

( அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா - ரலி - நூல் : புகாரீ , முஸ்லிம் )


நோன்பாளிக்கு இரண்டுசந்தோஷங்கள் உண்டு . ஒன்று நோன்பு திறக்கும்போது . இரண்டுஇறைவனை சந்திக்கும்போது .

 ( அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா - ரலி - நூல் : முஸ்லிம் )


நிச்சயமாக சுவனத்துவாசல்களும் வானத்து வாசல்களும் ரமளான் மாதத்தின் முதல் இரவில் திறக்கப் படுகின்றன . கடைசிஇரவுவரை அது மூடப்படுவதில்லை . ரமளான் மாத இரவில் ஓர் ஆணோ பெண்ணோ தொழுதால்ஒவ்வொரு ஸஜ்தாவிற்கும் 1700 நன்மைகள் எழுதப்படும் .

( அறிவிப்பாளர் : அபூ ஸயீதுல் குத்ரீ - ரலி - )