ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      அல்லாஹ்வுக்குப் பிடிக்காத குணங்கள்  


மறைஞானப் பேழை நிறுவனர்

அஷ்ஷைகுல் காமில்

குத்புஸ்ஸமான் ஷ ­ ம்ஸுல்வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

அனைத்திலும் பரிபூரணமானவனாகவும் ஒன்றிலே அனைத்துமானவனாகவும் நான் கண்டேன் . ( கருதினேன் ) அப்போது நான் உதவியாகவும்  உதவி செய்கிறவனாகவுமானேன்

ஒரு கூட்டம் அவர்களுடைய பொருள்களுடன் அவர்கள் தங்களையும் அவர்களுடைய உயிர்களையும் தியாகம் செய்தார்கள் அவர்கள் மேன்மக்களானார்கள். (தலைவர்களானார்கள் )

- ராதிபதுல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவில் சங்கைமிகு சங்கைமிகு செய்கு நாயகம்அவர்கள்.

 

ஆயிஷா ( ரலி ) அவர்கள் அறிவித்தார்கள் .

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் உலகைவிட்டு மறையும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் . அவர்களுக்குப்பின் அவர்களின் மனைவியரும் இஃதிகாஃப் இருந்தனர் .                            

( நூல் : அபூதாவூத் 334. புகாரீ , முஸ்லிம் )அகிலனாதரின் அற்புதம்

சில புனிதப் போர்களிலேதண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் போது தண்ணீர் பாத்திரத்தினுள் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அருள்நிறை தம் கைகளை விட்டவுடன் அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்துநீர் பொங்கி வரும் . பாத்திரம் நிரம்பி வழியும் . அவ்வாறு தண்ணிர் அருந்தியவர்கள்சில சமயம் 80, சில சமயம் 300 சில சமயம் 1500 சில சமயங்களில் எடுத்துக்காட்டாக புனித தபூக் போரின் போது 70000 பேர் , இவையெல்லாம் அவர்களுடைய விலங்குகளைச் சேர்க்காமல் பெருமானார் ( ஸல் ) தங்கள் திருக்கையைபாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து விட்டால் நீர் நின்று விடும் .

                        ஆங்கில நூலிலிருந்து தகவல்டி . மகதூம் ஜான் .

 

நோன்பு நோற்ற பெண் தன் குழந்தைக்கு பாலூட்டலாமா ?

 ஹள்ரத் இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் அறிவித்தார்கள் .           

( உணவுப்பொருள் , பானம் , அல்லது நீர் போன்ற ஏதும் ) உள்ளே நுழைவதால்தான் நோன்பு முறியும் . வெளியேறுவதால் முறியாது . எனவே ( பெண்கள் தம் பிள்ளைகளுக்கு ) பால் கொடுக்கலாம் . ( நூல் : புகாரீ )


ஹள்ரத் இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் அறிவித்தார்கள் .

( சமைப்பவர் ) சமையல் பாத்திரத்தில் உள்ளதையோவேறு எதையோ ருசி பார்ப்பதில் தவறில்லை ; ஆயினும் விழுங்கிவிடக்கூடாது .


ஹள்ரத் இப்னு மஸ்ஊத்   ( ரலி ) அவர்கள் அறிவித்தார்கள் .

நோன்பாளி எண்ணை தடவி தலைவாரிக்கொள்ளட்டும் ( நூல் : புகாரீ )
அல்லாஹ்வுக்குப் பிடிக்காத குணங்கள்

A. மும்தாஜ் , சென்னை


அதிகம் சாப்பிடுதல் -  

அதிகமாக சாப்பிடுவது அநேக பாவங்களின்வேராகும் . அதே சமயம் அளவோடு சாப்பிடுவதால் ஏராளமான பலன்கள் உள்ளன . உதாரணத்திற்கு சில இங்கே ..

அளவோடு உண்பதால் :

1. உள்ளத்தில் புத்துணர்ச்சியும் பிரகாசமும் உண்டாகிறது . அதிகம் சாப்பிடுவதால்   மடத்தனமும் அகக் கண்கள் குருடாகவும் ஆகிறது .


2. உள்ளம் மிருதுவாகிறது . அதனால் வணக்கத்தில் இன்பம் உண்டாகிறது .   இறையச்சம் , பணிவு உண்டாகிறது .


3. குறைவாக உணவருந்தி பசியோடு இருப்பதினால் மறுமையின் கஷ்டங்களைநன்கு உணர முடிகிறது . அதனால் இறைவனுக்கு மாறு செய்யும் துணிச்சல் வராது .


4. உடல் உணர்ச்சிகள் பலவீனமாகின்றது . உலக ஆசை உள்ளத்திலிருந்து   நீங்கிவிடுகின்றது .


5. தூக்கம் அதிகம் வராது .


6. வணக்க வழிபாடு செய்வது பாரமாக இருக்காது .உலக மதங்களில் நோன்பு !

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 40 தினங்களும் , தாவூத்    அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆறுமாத காலமும் , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ( கிருத்தவர்கள் ) 40 தினங்களும் நேன்பு பிடித்தனர் . ஆரம்பகாலத்தில் குறைஷியரும் பின்னர்இஸ்லாமியரும் ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்னர் முஹர்ரம் 10 அன்று ஒரு நோன்பும் நோற்று வந்தனர் .

சகோதர மதத்தவர்களான இராமாயண நாயகர்கள் 40 தினங்களும் , மகாபாரதத்தின் படி 30 தினங்களும் , புத்த மதத்தவர்கள் 60 தினங்களும் , சீக்கியர்கள் 50 தினங்களும் விரதம் இருந்தனர் .

 

நற்குணம் வேண்டும்

 

பொதுவாக நாவின் மூலம் ஐந்து பாவங்கள் உண்டாகின்றன . அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும் .

1. பொய் 2. புறம் பேசுதல் 3. வீண்பேச்சு 4. கேலி கிண்டல் 5. மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதமுறையில் புகழுதல் .

நாம் கவனமாயிருக்க வேண்டிய தீய குணங்கள் .

1. பொறாமை     2. பதவி மோகம்   3. கஞ்சத்தனம்     4. முகஸ்துதி    5. கபடம்

இன்னும் இது போன்ற ஏராளமான துற்குணங்களை விட்டும் தவிர்த்துஇருந்தாலே மனிதர்கள் தமது உள்ளத்தை சுத்தப்படுத்தி இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றவர்கள்ஆவார்கள் .

அழகிய குணமுடையவர்களே உங்களில் சிறந்தவர் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் .                        


  அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரலி ) நூல் :   புகாரி . ( தகவல் : A. மும்தாஜ் , சென்னை )