ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      ஜியாரத்


ஜியாரத் - ஒரு விளக்கம் !


தொகுப்பு : காயல் ஜெஸ்முத்தீன் ஞான மேதைஅல்லாமா இப்னு ஹஜர் அல்ஹைத்தமீ ( ரஹ் ) அவர்களிடம் வலிமார்கள்பற்றி  கேட்ட கேள்விகளும் , இமாம் அவர்கள் அளித்த பதிலும் :


கேள்வி : குறிப்பிட்ட ( உரூஸுடைய காலங்களில் ) வலிமார்களின் கப்ரு ஜியாரத்திற்குப் போகலாமா , அதற்காகவென்று நிய்யத் செய்து போகலாமா ? அந்த காலக் கட்டத்தில் ஏகப்பட்ட ஆண்கள் , பெண்கள் ஒன்றாகக் கலப்பது , அங்கு ஜியாரத்தில் விளக்குகள் ஏற்றுவதுஇவையல்லாமல்   மார்க்கத்திற்கு முரணான வேறு சில செயல்கள் அங்கு இடம் பெற்றிருப்பதோடு ஜியாரத்செய்யலாமா ? மேலும் இதை நாடிச் செல்லலாமா ?

பதில் : வலிமார்களின் கப்ருகளை ஜியாரத் செய்வதுசுன்னத்தான வணக்கமாகும் . மேலும் அதற்காக புறப்பட்டுச்செல்வதும் ஒரு சிறந்த வணக்கமாகும் . ஆனால் ஷேகு அபு முஹம்மதுஎன்பவர்கள் ஜியாரத்துக்குச் செல்வது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்ரவ்லாவிற்கு வேண்டுமென்றால் செல்லலாம் . மற்ற ஏனைய இடங்களுக்குநாடிச் செல்வது சுன்னத்தில்லை . மேலும் அவற்றிற்கு ஆதாரமாகமூன்று மஸ்ஜிதுகளுக்கு நன்மையை நாடிச் செல்லலாம் ;   இவையல்லாதஇடங்களுக்கு செல்வது கூடாது என்னும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள் . ஆனால் ஞானமேதை அல்லாமா இமாமுனா கஸ்ஸாலி ( ரலி ) அவர்கள் ஷேகு அபு முஹம்மது அவர்களின் கருத்துக்கு மறுப்பாக ஓர் அழகிய அழுத்தமான விளக்கத்தைக் கொடுத்து அவற்றை ரத்து ( மறுப்பு ) சொல்கின்றார்கள்ஹைத்தமீ ( ரஹ் ) அவர்களின் விளக்கம் :

மூன்றுமஸ்ஜிதுகள் என்பது மக்காவிலுள்ள கஃபத்துல்லாஹ் , மதீனாவிலுள்ள மஸ்ஜித் நபவீ , ஜெரூஸலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் இவைகள்தாம்உலகத்திலுள்ள பள்ளிகளிலேயே மிகச் சிறப்பு வாய்ந்ததாகும் . மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சிறப்புதான் . மற்ற பள்ளிகளைப் பார்க்கப் புறப்பட்டுச்செல்வதில் எந்த விதமான சிறப்புமில்லை . எனவேதான் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மேற்கண்ட மூன்று பள்ளிகளைத் தவிர ( கஃபத்துல்லாஹ் , மஸ்ஜித் நபவீ , பைத்துல் முகத்தஸ் ) ஏனைய பள்ளிகளுக்கு பார்க்க பிரயாணம் செய்யாதீர்கள் என்று கூறினார்கள் .